Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 17

17TH CHAPTER

 

காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரமாக முடக்கிவிடப் பட்டுள்ளது. சுமார் 7000அடி வரை கடலுக்குள் சென்று விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடுவதற்கு அதிகாலையில் நவீன வசதிகளுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது திரையில் காணாமல் போன விமானமும், அதை கண்டுபிடித்த தரப்போகும் படையின் முதன்மையான கேப்டன் அலெக்ஸ் தலைமையிலான குழு ஒன்று கிளம்புகிறது. திரையில் அலெக்ஸ் குழுவினரின் புகைப்படமும் புறப்பட ஆயத்தமும் காட்டப்பட்டு கொண்டிருந்தது.

 

எப்படிக் கண்டு பிடிச்சிடுவாங்களா ? சத்யா பொரித்த சிக்கனை எடுத்து வாயில் வைத்தபடியே தன் சகாக்களைப் பார்த்து கேட்டான்.

 

ரொம்ப கஷ்டம் இத்தனை நாள் கடலில் விழுந்த எதைக் கண்டுபிடிச்சிருக்காங்க….டைட்டானிக்குன்னு ஒரு கப்பல் மூழ்கியதே ஒரு சினிமா படம் வந்தபிறகுதானே தெரிந்தது




 

ஹாஹாஅதுவும் சரிதான் சரி யுரேனியத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமா கூடிக்கிட்டே போகுது. முன்னாடி பிராஜெக்ட் மாதிரி இதுவும் எந்த பிரச்சனையும் இல்லாம போறதுக்கு உன்னோட பிரண்ட் பரத்தான் காரணம். இவனை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும் சத்யா

 

ம்பரத் ஒரு புத்திசாலி அவனுக்கு வாழ்க்கையில் விரக்தி, சின்ன வயசிலே இருந்தே அவன் இப்படித்தான். யாராவது மனசு வருத்தத்தோட பேசுனா அவனாலத் தாங்கிக்க முடியாது. அந்த பலவீனம் தான் எனக்கு ரொம்பவே ஹெல்ப்புல்லா இருந்தது. இளமையில் வறுமைங்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா ?! நான் அணுஅணுவா அனுபவிச்சவன். பரத்தோட நட்பு எனக்கு பல வகையில் உபயோகமா இருந்தது. கொஞ்சகொஞ்சமா அவனோட நட்பு வட்டத்திற்குள் நுழைந்து அவன் நம்பிக்கைக்கு பாத்திரமாகி நெருங்கிட்டேன், வெறுமையா இருக்கிற மனசுக்கு கொஞ்சம் இரக்கமும், பாசமான நாலு வார்த்தைகளும் போதும்டா, அதைத்தான் நான் பரத்துக்கு செய்தேன் இப்போ என் அளவுக்கு அவனையே கூட நம்ப மாட்டான். அதுவும் நமக்கு ஒருவகையில் நல்லதுதானே.

 

எப்படியோ நம்ம காரியம் கெடாம போகுதுல்ல, இதேபோல அடுத்து இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கம் அமைக்கணும் அது இப்போ அமைத்தாற்போல இருக்கணும் அதுக்குண்டான ஏற்பாடுகளை நிக்கோலஸ் மூலமா நான் செய்யறேன் அப்போ வர்றேன்டா. ப்ரியன் கிட்டே இருந்து ஏதாவது மெசேஜ் வந்ததா ?!

 

இன்னும் இல்லைன்னு என்று சத்யா சொல்லும்போதே ப்ரியனிடம் இருந்து போன் வருது சொல்லு ப்ரியன் என்ன விஷயம் ?!

 

நடந்த அத்தனையும் சுருக்கமா சத்யாவிடம் தெரிவிக்கப்பட்டது. முட்டாள் உன்னை எப்போதோ நீரஜாவுடைய போல்டரை அழிக்கச் சொல்லியிருந்தேன் ஆனால் நீ…. வகையாய் இந்தா எடுத்துக்கோன்னு சொல்லி தூக்கிகொடுத்திருக்கே, ரொம்ப நல்லவன்தான் நீ !

…………….

 

உன் மன்னிப்பை தூக்கி குப்பையிலே போடு அந்த பொண்ணை என்ன செய்தே ?
……………

 

ம்சுரங்கப்பாதை வழியாவா ? அதுவரைக்கும் நல்ல விஷயம் பண்ணியிருக்கேடா அங்கே கடல்ல போட்டு இரண்டு நாள் கழிச்சி மீண்டும் கரைக்கு ஒதுங்கினா தேவையில்லாத பிரச்சனைதான் வரும் சுரங்கபாதையிலேயே இருக்கட்டும் பாலத்தீன் கவர் வழியா சுவாசிக்க கொஞ்சம் இடம் வைச்சிருக்கேன்னு சொல்றீயே ? நான் வர இன்னும் ஏழெட்டு நாளாகும். அதுவரைக்கும் அவளுக்கு ஆயுள் இருந்தா உயிரோட இருக்கட்டும். இன்னும் வேற யாருக்கும் நம்ம விவரம் தெரியாமல் பார்த்துக்கோ பரத் எப்படியிருக்கிறான்

………….

 

யார்அந்த புதுப்பொண்ணோட சுத்தப்போயிட்டானா ? நல்லதுதான் நம்மளைப் பத்தி அவன் ஏதும் நோண்டாம இருக்க இதுவும் நல்ல ஐடியாதான். சரி நான் வர்ற வரையில் எல்லாத்தையும் சுமூகமா பார்த்துக்கோ அந்தப் பகுதிகளில் கனிம வளங்கள் நிறைய இருக்கு நிறைய தடைசெய்யப்பட்ட பகுதிகள் அங்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கணுமின்னா அதுக்கு பரத்தோட உதவி கட்டாயம் தேவை அவனுக்கு சந்தேகம் வராம பார்த்துக்கோ ?!

………..

 

என்ன ஏதாவது பிரச்சனையா ?!

………….




நத்திங் ஒரு சின்ன சிக்கல் அதெல்லாம் சரியாயிடும் எதையும் நிக்கோலஸ் காதுல போடதே ? நான் சீக்கிரம் அங்கே போயாகணும். கடைசி சிப்பை அருந்திவிட்டு கோபமாய் எழுந்து போனான் சத்யா.

 

பரத் மெளனமாய் உத்ராவைப் பார்த்தான் நீரஜா பற்றிய சந்தேகங்கள்தான் அவளுக்கு இத்தனை குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது மென்மையாய் அவளின் கையைப் பற்றினான்
இப்போதாவது என்மேல உள்ள சந்தேகம் தீர்ந்ததா ? நீரஜா எனக்கு ஒரு நல்ல தோழி அவ்வளவுதான், இதை இப்போது நிரூபிக்க எனக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை என் வாய்மொழியினைத் தவிர என்னை நீ நம்பித்தான் ஆக வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த, உத்ரா நான் என் வெறுமைக்காக சில விஷயங்களை செய்திட்டேன் ஆனால் நான் எந்த பெண்ணோட வாழ்க்கையிலே குறுக்கிட்டது கிடையாது, நிறைய ஏமாற்றங்கள் இருக்கு ஆனா அதுக்காக நான் உன்னைக் கெஞ்ச மாட்டேன் உத்ரா, காதல் கெஞ்சியோ, கொஞ்சியோ வாங்குவது கிடையாது உண்மையான அன்போட நீ என்னை ஏத்துக்கணும் அதுவரையில் என் மேல் நம்பிக்கை ஏற்படும் வரையில் நான் காத்திருப்பேன்.

 

சார் ரெஸ்டாரண்ட் தயாரா இருக்கு,

 

பரவாயில்லைப்பா அதை கேன்சல் பண்ணிடுங்க இன்னொரு நாள் நான்

 

இல்லை போகலாம் உத்ரா பரத்தின் பேச்சை இடைமறித்தாள். பரத் ஏதும் பேசவில்லை அமைதியாய் பேரர் உடன் சென்றான்.

 

உத்ராவிற்கு தான் இப்போது செய்வது சரியா தவறா என்றே தெரியவில்லை ? காலையில் பரத்துடன் வரும்போது ஆயிரம் குழப்பம் இருந்தது. பத்மினியின் பாராமுகம் ப்ரியனின் பரத்தின் மேல் சொல்லிய குற்றங்கள் எல்லாம் ஒருமூலையில் இருந்தாலும் பரத்துடன் தனியே பயணப்படுவது சந்தோஷமாகவே இருந்தது மனதுக்குள் குமிழ் குமிழாக குதூகலம் பொங்கினாலும் பாலில் தெளித்த தண்ணீராய் நீரஜாவின் நினைப்பும் வந்தது. உண்மைக்கு என்றுமே அழிவு கிடையாது. அதேபோல் இப்போது பரத்தின் பேச்சிலும், பார்வையிலும் பொய் இருப்பதாக தெரியவில்லை, ஒன்று பரத் கைதேர்ந்த நடிகனாக இருக்கவேண்டும், அல்லது அவன் உண்மையைப் பேச வேண்டும். இதில் எது உண்மை குழப்பம் மேலோங்கி இருந்தாலும் பரத்துடன் கோபத்தை காட்டிட முடியவில்லை அடிப்பட்ட புறாவைப் போன்ற பரத்தின் பார்வையில் குற்றம் சாட்டமுடியவில்லை, பரத் தவறானவனாகவே இருந்தாலும் உத்ராவின் மனதிற்குள் பூத்திருக்கும் நேசம் பொய்யாகப் போவதில்லை, அந்த காதலுக்கு பரிசாக அவள் இறந்தாலும் பரவாயில்லை பரத்தைவிட்டு இனி நீங்க முடியாது என்பதை உணர்ந்திருந்தாள்.

 

பரத்தின் மேல் அத்தகைய அளவுகடந்த காதல் உருவாகும் என்று அவளால் நம்ப முடியவில்லை, காதல் கண்களை மறைத்துவிட்டதோ ? இந்த நினைப்பு அவளின் இதழ்களின் மேல் மென் புன்னகையைப் படர விட்டது. இரவு விருந்து என்று அவர்கள் நின்ற இடம் சொர்கலோகம் போல காட்சியளித்தது.




What’s your Reaction?
+1
13
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!