Sprituality

2023 எப்படி? – பிரபல ஜோதிடர்களின் கணிப்பு

வாசக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,

 2023 ஆம் ஆண்டு பொதுவாக உலக நிகழ்வுகள் என்ன மாதிரியாக இருக்கும் மூன்று மாபெரும் ஜாம்பவான்கள் துல்லியமாக கணித்து கூறிய பலன்கள் சுருக்கமாக தங்களுக்காக வழங்க இருக்கிறோம்.




 பொதுவாக இந்த 2023 ஆம் வருடம் அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசி கன்னியா லக்னத்தில் பிறக்கிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வருடத்தில் மூன்று முக்கியமான கிரகப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.  அவை சனி, குரு, ராகு மூன்று முகம்.  இந்த ஆண்டு அனைத்து மக்களும் பொதுவாக குலதெய்வ வழிபாட்டை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. விநாயகர் கோவில் எங்கிருந்தாலும் சென்று வருவது மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது.  பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி, மணக்குள விநாயகர், கீழ்ப்படும்பள்ளம் போன்ற இடங்களுக்கு செல்வது மிகவும் உசிதம்.

சரி வாசகர்களே, தங்களை மிகவும் காக்க வைக்காமல் உலகிற்கான அந்த பொதுவான பலன்கள் குறித்த ஜாம்பவான்களின் கணிப்புகளை பார்க்கலாம்.




பாலகிருஷ்ண ரெட்டி;

ஜோதிட ஞானத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் தனக்கான தனி ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றவர் பாலகிருஷ்ண ரெட்டி என்பதில் சந்தேகம் இல்லை.  இவர் இந்த வருடத்தின் பொது பலன் பற்றி கூறும் பொழுது செவ்வாய் அம்சத்தில் இந்த வருடம் பிறந்திருப்பதால் மேஷ ராசியின் காலில் சனியும் செவ்வாயும் சூரியனும் உச்சம் பெறுவதால் உலகம் முழுவதுமான இயற்கை பேரிடர்கள் நிரம்பவே இருக்கும் என்று கணிக்கிறார்.  இந்தப் பேரிடர்களானது பெரும்பாலும்  நீரினால் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.  இதைத் தவிர்த்து யுத்தம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்,  வாகன விபத்து, நெருப்பு, பூகம்பம் போன்ற பேரிடர்களையும் சந்திக்க நேரிடலாம் என்று தெரிவிக்கிறார் பொதுவாக உடல் ரீதியான பாதிப்புகளையும் பொது மக்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதும் இவர் கூற்றாக இருக்கிறது.  மொத்தத்தில் இந்த 2023 ஆம் வருடம் வில்லங்கமான வருடம் என்று மிரள வைக்கிறார்.  ஆனால்,  இந்தியாவிற்கு என்று வரும்பொழுது இந்தியாவிற்கான பலன்கள் அனுகூலமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.  2024 ஆம் ஆண்டு வரும் தேர்தலை எதிர்நோக்கி இந்த 2023 ஆம் ஆண்டு நிறைய கட்சி மாற்றங்கள், நிறைய கூட்டணிகள் ஏகப்பட்ட அரசியல் மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்று கூறுகிறார்.




ராமலிங்கம்;

யூ  டியூப்  ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு பிரத்தியோக இடத்தை பெற்றுக் கொண்டவர் ராமலிங்கம்.  அவர் கணிப்புப்படி 2023 உலக நாடுகள் பற்றிய கணிப்பை  கூறும் பொழுது உலகத்தில் நியாயங்கள் செத்துப் போகும், அநியாயங்கள் அனைவராலும் விரும்பி ரசிக்கப்படும் என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தன்னுடைய பதிலைத் தருகிறார்.  இந்தியாவின் நிலை பற்றி கேட்டோமேயானால் மிகப் பிரமாதம் என்கிறார்.  பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.  பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.  இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.  மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா தனித்துவமாக ஒளிரும் ஆண்டு இந்த ஆண்டு என்று குறிப்பிடுகிறார்.  குறிப்பாக இந்த ஆண்டு எண்ணை,  கறி,  இரும்பு இயந்திரம், தங்கம், மரம், ரியல் எஸ்டேட், விவசாயம் , விவசாயத்தில் குறிப்பாக உளுந்து, கோதுமை போன்றவை பயிரிடுவோருக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்பது இவர் கணிப்பாக இருக்கிறது




எதார்த்த ஜோதிடர் செல்வி;

ராசிபலன் என்றாலே முதலில் செல்வியை கேள் என்று சொல்லும்  அளவிற்கு மக்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை வகுத்து முடிசூடா ராஜாவாக விளங்கிவரும் செல்வி அவர்களின் கணிப்பு என்ன ?




உலக அளவில் பணவீக்கம் ஏற்படும்.  வேலையில்லா திண்டாட்டம் நிலவும்.  ஷேர் மார்க்கெட் சரிவுக்குள்ளாகும்.  தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாது நன்மையாகவே இருக்கும்.  இந்தியாவிற்கு என்று பார்க்கப் போனால் 2026 வரை இந்தியாவிற்கு நன்மை மட்டுமே.  2023 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை, அரசியல் தலைவர்களுக்கு உடல் உபாதை அவர்களுடைய புகழுக்கு பங்கம், ஆட்சி மாற்றம் போன்ற விஷயங்கள் நடக்க விற்பதாக கணிக்கிறார்.  மேலும் முக்கியமாக அவர் கூறுவது கடுமையான வரி விதிப்புகள் எளிமையாக மாற்றப்படுவதற்கு உண்டான வாய்ப்பு இந்த ஆண்டு வருவதாக கூறுகிறார். உதாரணமாக ஜி. எஸ். டியை கூறுகிறார்.   கடல் கடந்து வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலை இழப்பதற்கு உண்டான சாத்தியங்கள் இருப்பதற்கும்,  மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.  உலக அளவில் ஏற்படும் பொருளாதார செரிமானது லண்டனில் முதலில் துவங்கி ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே பரவும் என்று கூறுகிறார்.  துபாய்,  சிங்கப்பூர் போன்ற நாடுகள் எந்த விதத்திலும் செழுமைக்கு குறைவில்லாமல் நல்ல நிலையில் இருக்கும். அந்த நாடுகள் மீதான முதலீடு மேன்மையை தரும்.  உலக நாடுகளுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் . அரசியலைப் பொறுத்தவரை இணையவே மாட்டார்கள் என்று  இருந்த கட்சிகள் கூட ஒன்றோடு ஒன்று இணையும் அதிசயம் நடக்கும் என்று கூறுகிறார்.  வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கு இது போதாத காலமாக இருந்த பொழுதும், இந்தியாவின் வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும்.  இயற்கை பேரிடரை பொறுத்தவரை 2025 வரை தொடர்ச்சியாக அது இருந்து கொண்டே இருக்கும்.  அது பெரும்பாலும் கடல் பொங்குவதால், கடல் சீற்றத்தினால் அமையும்.  ராஜபக்சையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும் இவ்வாறு செல்வி அவர்களின் பொதுவான கணிப்பு உள்ளது.




 

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!