kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 8

8

 

 

” அத்தான் ” என்ற அலறலுடன் பாய்ந்து மகிபாலனின் கழுத்தை கட்டிக் கொண்டிருந்தாள் மிருதுளா. தடதடவென்று நடுங்கிக் கொண்டிருந்த அவளது உடலை இறுக்கி அணைத்து மென்மையாக வருடிக் கொடுத்தான் அவன்.

 

” டேய் குட்டி என்னடாஎதற்கு இப்போது இவ்வளவு பயம்ஒரு போட்டோ கீழே விழுந்து உடைந்ததற்கு இப்படியா பயப்படுவாய் ? ” 

 




” அது ஏன் இப்போது கீழே விழவேண்டும் ? ” மிருதுளாவின் குரல் நடுங்கியது.

 

” வெளியே பார் காற்று எப்படி அடிக்கிறதென்று மழை வருவது போல் இருக்கிறது .நீ ஏன் இப்படி ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்திருக்கிறாய்அந்தக் காற்றில் தான் இந்த போட்டோ ….” சொன்னபடி ஜன்னல்களை பூட்டுவதற்காக நகர்ந்த அவனின் சட்டையை இறுக்கிப் பிடித்தாள் மிருதுளா

.

” என்னை விட்டு போகாதீர்கள் அத்தான் .எனக்கு பயமாக இருக்கிறது ” 

 

நடுங்கிய அவளது குரல் கொடுத்த கவலையையும் தாண்டி மெலிதாக விசில் அடித்தான் மகிபாலன் .” ஏய் குட்டி நீ இப்போது என்னை எப்படி அழைத்தாய்அத்தான் என்றாஎத்தனை வருடங்கள் ஆயிற்று தெரியுமா நீ என்னை இப்படி அழைத்து ? ” 

 

இப்போதுதான் தன் அழைப்பை உணர்ந்த மிருதுளா மெல்ல தலையசைத்தாள் ” என்னை அறியாமலேயே தான் அழைத்து இருக்கிறேன் ” 

 

”  அப்போது உன்னுடைய உள்மனதில் நான் உன் பழைய அத்தானாகத்தான்  இருக்கிறேன் அப்படித்தானே குட்டி  ? ” கேட்டபடி அவள் இடையை வளைத்து தன்னோடு இணைத்துக்கொண்டு உடன் நடத்தி போய் ஒவ்வொரு ஜன்னலாக மூடினான்.

 

” இப்படி எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு இங்கே என்னதான் தேடுகிறாய் ? ” 

 

மிருதுளா டேபிள் மேல் எடுத்து வைத்து இருந்த அந்த பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அது புதிதாக வாங்கிய போனின் பில்.

 

” இது இப்போது ஒரு மாதத்திற்கு முன் வாங்கிய போனின் பில் .இதற்கு என்ன ? ” 

 




” இது அக்கா இப்போது புதிதாக வாங்கிய போன் பில் .அவளது பழைய போனிலிருந்து எல்லாவற்றையும் புது போனிற்கு மாற்ற வேண்டும் .ஆனால் அதற்கு நேரமே கிடைக்கவில்லைஎன்று சொல்லிக்கொண்டிருந்தாள் .அவளுடைய பழைய போனில் இருந்த விபரங்களை புது போனிற்கு மாற்றினாளா என்று தெரியவில்லை .அப்படியே மாற்றி இருந்தாலும் பழைய போனில் இருக்கும் விவரங்களை அவள் அழிக்காமல் வைத்திருந்தாளானால்  அவை இப்போது நமக்கு உதவும் தானேஇதற்கு முன்பு அவள் வைத்திருந்த பழைய போனை தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன் ” 

 

மகிபாலனின் விழிகள் வியப்புடன் விரிந்தன ” எவ்வளவு யோசித்து இருக்கிறாய் மிருதுஇதெல்லாம் எனக்கு தோணவே இல்லையே ? ” 

 

அக்காவின் போன் விபரம் உங்களுக்கு தெரியாது இல்லையா அதனால் யோசித்திருக்க மாட்டீர்கள்” 

 

” ம் உன்னுடைய யோசனையும் சரிதான் மதுராவின் பழைய போன் கிடைத்ததா ? ” 

 

மிருதுளா உதட்டை பிதுக்கினாள். எங்கேநானும் முடிந்த அளவு தேடி விட்டேன் கிடைக்கவே இல்லை ” 

 

” நிச்சயமாக அந்த பழைய போனை அவள் டிஸ்போஸ் செய்திருக்க மாட்டாள் தானே ? ” 

 

” இல்லை  அதில் நிறைய விபரங்கள் இருக்கிறது என்று பத்திரமாக வைத்துக் கொண்டுதான் இருந்தாள் ” 

 

” அப்படியானால் அந்த போன் இங்கேதான் நம் வீட்டிற்குள் தான் எங்கேயாவது இருக்கும் நீ கவலையை விடு நாம் தேடி எடுக்கலாம் ” பேசியபடியே மகிபாலன்  சுற்றிக் கிடந்த பொருட்களை ஓரளவு ஒதுக்கி இருந்தான்.

 

மிருதுளாவின் பார்வை கீழே உடைந்து கிடந்த புகைப்படத்தின் மேலேயே இருந்தது .எந்த நேரமும் அந்த புகைப்படம் சிதறிக்கிடக்கும் சிதறல்களை கூட்டிச் சேர்த்து வடிவாகி முழு உருவமாக நிற்கப் போகிறது என்று அவள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.

 

” ஏய் குட்டிமிருதுநான் சொல்வதை கவனிக்கிறாயா இல்லையா ? ” அவள் தோள் தொட்டு அசைக்கவும் மீண்டு வந்தவள் ” என்ன ..என்ன கேட்டீர்கள் மகி  ? ” என்றாள்

 

” போச்சுடா திரும்பவும் மகியாஇப்படி அறை முழுவதும் குப்பையாக எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு வைத்திருக்கிறாயே.. இதில் எப்படி படுத்துக் கொள்வாய் என்று கேட்கிறேன் ” 

 

” இதோ இந்தக் கட்டிலை மட்டும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு…”  சொல்லிக்கொண்டு போனவளுனுள் பயப்பந்து உருண்டது .தான் மட்டும் தனியாக இந்த அறையில் உறங்குவதாஅவள் மீண்டும் மகிபாலனுடன் ஒட்டிக்கொண்டாள்.

 

” மகி ப்ளீஸ் இன்றும் நீங்கள் என்னுடன் படுத்துக் கொள்ளுங்களேன் ” 

 




மகிபாலனின் முகத்தில் திகைப்பு நன்றாக தெரிந்தது .” மிருது என்ன இதுதப்பு இல்லையாநான் எப்படி உன் அறையில் தங்க முடியும் ? ” 

 

” சரி வேண்டாம். நான் உங்கள் அறைக்கு வருகிறேன் .அப்போது ஓகேவா ? ” 

 

ம்நீ குட்டி என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் பார்த்தாயா ? ”  செல்லமாக அவள் தலையில் தட்டினான்

 

” அம்மாவிடம் எதையாவது சொல்லி கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் அவர்களையும் குழப்ப வேண்டாமே என்று நினைக்கிறேன் .அதனால்தான் அவர்களுடன் இருப்பதையும் படுத்துக் கொள்வதையும் தவிர்க்கப் பார்க்கிறேன் ” 

 

மகிபாலன் பரிவுடன் அவள் தலையை வருடினான் ” உன் எண்ணம் சரிதான் குட்டி .பாவம் ஏற்கனவே மனம் நொந்து இருப்பவர்களை இன்னமும் ஏன் குழப்ப வேண்டும் .சரி வா இந்த கட்டிலை மட்டும் கொஞ்சம் சரி செய்து விட்டு படுத்துக் கொள்ளலாம் .மற்றதையெல்லாம் நாளை வேலைக்காரர்களை விட்டு ஒதுக்கிக் கொள்ளலாம் ”  சொன்னபடி கீழே விழுந்து கிடந்த மதுராவின் போட்டோவை எடுத்தான் மகிபாலன்.

 

அது கண்ணாடி பிரேம் போட்டோ அல்ல .லேமினேஷன் போடப்பட்டது. அதனால் சில்லு சில்லாக உடையவில்லை .ஆனால் கீழே விழுந்த வேகத்தில் அதன் பிரேம் சுழன்று மெல்லிய கீறல் விட்டிருந்தது .” இதனை நாளை சரிசெய்துவிடலாம் ” என்றபடி மகிபாலன் அதனை எடுத்து டேபிள் மேல் வைக்கசரியாக மதுராவின் முகத்தின் குறுக்கே விழுந்திருந்த கீறல் அவள் முகத்தை கொடூரமாக காண்பித்தது. மதுராவின் முகம் இரண்டு பாகங்களாக பிரிந்து தனித்தனியாக தன்னை முறைப்பதாக உணர்ந்தாள் மிருதுளா.

 

பயத்தை குறைக்க அவள் மீண்டும் நாடியது மகிபாலனின் தோள்களையே .” ஆனாலும் என்னை ரொம்பவுமே சோதிக்கிறாய் குட்டி ”  தன் மேல் அப்பிக் கிடந்தவளை விலக்க மனமற்று மெல்ல விலக்கி கட்டிலில் படுக்க வைத்தான் மகிபாலன்.

 

” நான் இதோ இங்கே இருக்கிறேன். நீ தூங்கு ” ஒற்றை சோபா ஒன்றை கட்டிலருகே இழுத்துப்போட்டுக்கொண்டு அதில் அமர்ந்தபடி மிருதுளாவின் கையை பற்றிக் கொண்டான்.

 

” நைட் முழுவதும் எப்படி இப்படி உட்கார்ந்தாற் போலவே இருப்பீர்கள்இங்கே படுத்து கொள்ளுங்கள் ” தன் அருகாமையை தட்டி காண்பித்தாள்.

 

” வேண்டாம் குட்டி .அது சரி வராது .என்னை நானே குற்றம் சொல்லுமளவு ஏதாவது நடந்துவிடும் .நான் இங்கே உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொள்கிறேன்”  தீவிர மறுப்பு டன் ஒலித்த மகிபாலின் குரல் உணர்த்திய ரகசிய செய்தியில் மிருதுளாவின் முகம் சிவந்தது.

 

” எதையாவது உளறாதீர்கள் மகி ” அவன் முகம் பார்க்காமல் முணுமுணுத்தாள்.

 

” நீதான் உளற  வைக்கிறாய் ” கொஞ்சலாய் வந்த மகிபாலனின் குரலில் தேகம் சிலிர்க்க சற்று முன் அவன் சொன்ன தானே குற்றம் சொல்லும் செயல் தன்னிலும் நடந்து விடுமோ என பயந்த மிருதுளா விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள். பொத்தினாற் போல் தன் கையைப் பற்றியிருந்த மகிபாலனின் கை கதகதப்பில் நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

   ———-

” எப்படி அதற்குள்ளாக இவ்வளவு அழகாக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்கள் மகி ? ” லாவகமாக கார் ஓட்டிக் கொண்டு இருந்தவனை வியப்புடன் பார்த்து கேட்டாள் மிருதுளா.

 

” ஆர்வமிருந்தால் எல்லாமே எளிதுதான் மிருது .இரண்டே நாட்களில் ஓட்ட கற்றுக்கொண்டு லைசன்ஸும் வாங்கிவிட்டேன் ” 

 

 

மிருதுளாவின் விழிகள் மகிபாலனை ஆராய்ந்தன .தொய்ந்து தளர்ந்த சாதாரண உடைகளை அணிந்துகொண்டு முன்பு தங்கள் வீட்டிற்கு வரும் மகிபாலன் அவள் நினைவிற்கு வந்தான்.

 

இப்போதோ உயர்ரக மடிப்புக் கலையாத ஆடைகளுடன் இதோ இந்த அலட்சிய கார் ஓட்டலும் இவன் பரம்பரையாக பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவன் என்று பார்ப்பவர்களை எண்ண  வைக்கும் தோரணை. இதோ இந்த பணக்காரத் தோரணை மாற்று எண்ணம் எதுவுமின்றி அப்படியே அவனுடன் பொருந்திப் போவதை வியப்பாக உணர்ந்தாள் மிருதுளா.

 

” ரொம்பவே மாறி விட்டீர்கள் மகி ” 

 

” இப்படி மாறியது உனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா ? ” 

 

” ரொம்ப பிடித்திருக்கிறது ” மனதார சொன்னாள் .

 

” ரொம்ப நன்றி மேடம் .இப்போது இறங்குகிறீர்களா ? ”  அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு விட்டு பணியாள் போல் பணிவுடன் நின்றான்.

 

ப்ச்  என்ன மகி இது ? ” செல்லமாக அவன் கையை தள்ளியபடி இறங்கினாள்.

 

” ஃபேக்டரி முதலாளியம்மா. உரிய மரியாதையை நான்  கொடுக்க வேண்டும் அல்லவா ? ” கிண்டல் பேசியபடி அவளை அழைத்துக் கொண்டு ஆபீஸிற்குள்  நுழைந்தான் .வீட்டிற்குள்ளேயே இருந்தால எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பாய்என்று சொல்லி அவளை தன்னுடன் ஆபீசிற்கு அழைத்து வந்திருந்தான்.

 

” நீயும் கொஞ்சம் ஆபீஸ் விபரங்கள் படித்துக்கொள் மிருது ” ஆபீசின் எம்டி நாற்காலியில் அவளை அமர வைத்து விட்டு சொன்னான்.

 

” ஐயையோ இந்த அலுவலக நிர்வாகம் எல்லாம் எனக்கு ஒத்து வராது மகி .அக்காதான் இதில் இன்ட்ரஸ்ட் ஆக இருந்தாள் .எனக்கு ஆபீஸ் என்றாலே அலர்ஜி .இதில் கையெழுத்துப் போடு என்று காட்டுங்கள் ஷைன்  செய்துவிட்டு நான் பாட்டிற்கு போய்க்கொண்டே இருக்கிறேன் ” 

 

” அப்படியா சரிதான் .இதோ இந்த பைல்களில் எல்லாம் கையெழுத்து போடு ”  மகிபாலன் நீட்டிய இடங்களில் எல்லாம் வரிசையாக கையெழுத்து போட்டாள்.

 

ஹப்பா நிறைய வேலை பார்த்துவிட்டேன் ” பேனாவை கீழே வைத்து விரல்களை சொடுக்கு எடுத்து கொண்டாள்.

 

” நாட்டி ” செல்லமாக அவள் கன்னம் தட்டியவன் ” சரி நீ இங்கேயே இரு .நான் ஃபேக்டரி ரவுண்ட்ஸ்  போய்விட்டு வருகிறேன் ”  வெளியேறினான்.

 

” மிருதுளாம்மா எப்படி இருக்கிறீர்கள் ? ” கேட்டபடி உள்ளே வந்தான் ப்யூன் கந்தசாமி.

 

” நன்றாக இருக்கிறேன் அண்ணா .நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்உங்கள் குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் ? ” 

 

” நாங்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறோம் .ஆனால் இனி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது ” 

 

” என்ன அண்ணா சொல்கிறீர்கள்எனக்கு புரியவில்லை ” 

 

” இதோ இந்த கம்பெனி புது முதலாளியைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறேன் .அவரிடம் எதற்காக முழு பொறுப்பையும் கொடுத்தீர்கள் மிருதுளாம்மா .அவர் முன்பே உங்கள் சொத்துக்களை தட்டிப் பறிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் .இப்படி வாழைப்பழத்தை உரித்து அவர் கையில் கொடுத்து விட்டீர்களே ” வருத்தத்தோடு பேசினான் கந்தசாமி.

 

மிருதுளா ஒன்றும் புரியாமல் முகம் சுருக்கினாள் மகிபாலனை நம்பாதே என்று ஒரு குரல் அவளுக்குள் சிறிது நாட்கள் கழித்து ஒலிக்கத் துவங்கியது.

 

 

 

 

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!