வெளியாகி இருக்கும் நாவல்களை பற்றிய உங்கள் நினைவு கிளறல்களுக்காக …

உங்களுடன் நான் – ஆசிரியர் கடிதம் .

வாசகர்களுக்கு வணக்கம் ,

நான் உங்கள் பத்மா கிரகதுரை . மாத நாவல்களில் நான் எழுதிய கதைகள் கற்பகம் புத்தகாலயம் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளன .அவ்வகையில் இதோ இரண்டு கதைகள் உங்கள் கைகளில்.

சில கோவில்களை பற்றிய தேடுதலின் போது தற்செயலாக ஆயிரம் காளியம்மன் கோவிலின் விபரங்கள் என் கண்ணில் பட்டன . ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அம்மன் என்ற விபரத்தில் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்த ஆயிரம் காளியம்மனை பற்றிய ஆராய்ச்சியில் , திருமலைராயன் பட்டினம் என்ற ஊர் என் கவனத்திற்கு வந்தது .ஆயிரம்காளி , திருமலைராயன் போன்ற பெயர்கள் என் மனதில் ஆணியடித்து தங்கிவிட …வாடா , பொட்டி சோறு போன்ற அவ்வட்டார பழக்கவழக்கங்களும் என் மனதை கவர , சரசரவென திருமலைராயனை கதாநாயகனாக்கி என் மனதில் ஒரு கதை உருவாகிவிட்டது .
இதோ உங்கள் கைகளில் ” #மயங்கினேன்_மன்னன்_இங்கே “

திருமலைராயன் பட்டினம் ஊர் உண்டாக காரணமாக இருந்தவன் திருமலை எனும் மன்னன், தன் மக்களால் ‘ராயர் ‘ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவன் அவ்வூரில் 108 குளங்களையும் 108 கோவில்களையும் அமைத்தான் போன்ற வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாக வைத்து திருமலைராயன் என்பவனை கதாநாயகனாக்கி, அவனுக்கு ஏற்றவள் என அவனோடு மோதுபவளாகவும் ஊர் நலனில் அக்கறை உள்ளவளுமாக சஷ்டி மலரை கதாநாயகியாக்கி , இருவரையும் இணைக்கும் பாலமாக பாட்டியம்மாள் ஆயிரம் காளியை அம்மனுக்கு இணையாக சொல்லி ,இறுதியாக கோமதியின் சோகத்தை அவளே அறியாமல் மறைத்து , டிகே பட்டணத்தின் ஆயிரம் காளியுடன் கதையை முடித்து இருக்கிறேன் .மிக மனநிறைவுடன் ஒவ்வொரு பாத்திரமும் அமைந்த கதை இது எனக்கு .ராயரையும் சஷ்டியையும் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் .வாசித்துப்பாருங்கள்.



 

” #உடலென_நான்_உயிரென_நீ “உயிர்போகும் வயதற்ற பிரபல நடிகையின் திடீர் மரணம் எனக்குள் உண்டாக்கிய பாதிப்பே இக்கதையின் ஆரம்பம். இத்துடன் காஸ்மெட்டிக் சர்ஜரி பற்றிய சில விவரங்களும் இணைந்துகொள்ள சஸிசா – மதுரவல்லி கதாநாயகிகளாக உருவாகினர். இவர்களை இயக்கும் உந்துசக்தியாக கதாநாயகன் கணநாதன் .சினிமா எனும் மாய வலைக்குள் இருந்து மதுரவல்லியை மீட்டு தனக்கு உரியவளாக்கி இறுதியில் அவள் உறவினர்களோடும் சேர்த்து வைக்கிறான் .ஏனோ இக்கதையின் இனிய முடிவில் அந் நடிகையின் மரணம் பற்றிய என் மன பாரம் சிறிது குறைந்தாற் போல் ஒரு பிரமை எனக்கு .

இந்த கதைகளைப் பற்றிய நிறைகுறைகளை Padma.graham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் என்னுடன் பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்வேன் . தொடர்ந்து என் கதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் தோழமைகள் அனைவருக்கும் பேரன்பும் , பிரியங்களும்

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

  • Dear Mam,

    Mayanginen mannan inge lasta neenga post pannadhu epi No.21.

    next epi kettu te irundhen, eppo poduveenga.

    link edhavadhu irukka.

    S.uma

Recent Posts

உடலென நான் உயிரென நீ-1

" ஆஹா அருமை ரூபா மேடம் .  உங்கள் சிகிச்சை அற்புதம் .அந்தப் பெண்ணின் முகம் வழு வழுவென மின்னுகிறது…

1 hour ago

டிஆர்பிஐ உயர்த்த சொந்த செலவில் சூனியம் வைத்த சன் டிவி.. ஆதிகுணசேகரனாக தோற்றுப்போன வேலராமமூர்த்தி,

எதிர்நீச்சல் தொடர் பல மாதங்களுக்கு பிறகு இப்போது தான் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அதாவது இந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து…

2 hours ago

கற்றாழை செடி 1 வாரத்துக்குள் நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்..!

நாம் இந்த உலகில் நிம்மதியாகவும் ஆரோக்கியமாக வள வேண்டும் என்றால் அதற்கு நமக்கு தேவை மிகவும் சுத்தமான மூச்சு காற்று.…

2 hours ago

சிவபெருமானாகவே மாறிய சிவாஜி… கண்களால் செய்த அந்த அற்புதம் .

திருவிளையாடல் புராணத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கையாண்ட படம் தான் திருவிளையாடல். இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்தப் படத்தில்…

2 hours ago

கோதுமை தவிட்டிலிருந்து உணவுத் தட்டுகளை தயாரிக்கும் கேரள தம்பதி!

வினய் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இந்திரா,ஒரு முறை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சுற்றுச்சூழல் நட்பான உணவு தட்டுகளை…

4 hours ago

சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்து நடக்கப் போவது என்ன? ‌

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்களில் வரும்…

4 hours ago