உடலென நான் உயிரென நீ-1

” ஆஹா அருமை ரூபா மேடம் .  உங்கள் சிகிச்சை அற்புதம் .அந்தப் பெண்ணின் முகம் வழு வழுவென மின்னுகிறது .இந்த அளவு நாங்கள் எதிர்பார்க்கவில்லை “

தலைமை டாக்டர் குரியகோஸின்  பேச்சு கன்னடத்தில் இருந்தது.பாராட்டை தலை தாழ்த்தி ஏற்றுக் கொண்டாள் ரூபா. ” இதில் எனது பங்கு மட்டுமே இல்லை சார் ” ரூபாவின் பதிலும் தெளிவான கன்னடத்திலேயே இருந்தது.

” ம் …அது தெரியுமே. மிஸ்டர். கணநாதனும் உங்களுடன் இருக்கிறார். யு ஆர் பெர்பெக்ட் மேட்ச் இன் அவர் பிசினஸ் “

பரவசமாக இருந்த ரூபாவின் முகம் மாறியது. “நாங்கள் இதனை பிசினஸாக பார்க்கவில்லை சார் “

” யா ..ஐ நோ …பட்  பணம் தந்தால் வேண்டாமென்று சொல்லமாட்டீர்கள் தானே ?”

” எங்கள் உழைப்பிற்கான கூலியை நாங்கள் எப்போதும் மறுக்க மாட்டோம் சார்.” கம்பீரம் சுமந்து வந்தது ரூபாவின் குரல்.

” தட்ஸ் வெரி குட். இப்போது போய் அந்த தாரா எழுதி வைத்திருக்கும் செக்கை வாங்கிக் கொள்ளுங்கள் .”

” செக்கா …? என்ன செக் சார் ?”

” நம் ஹாஸ்பிடல் பில் போக உங்களுக்கு தனி செக் ” குரிகோஸின் குரலில் பொறாமை தெரிகிறதோ …இதனால்தான் இவ்வளவு நேரம் ஒரு மாதிரி பேசினாரோ …?

ரூபா புன்னகைத்தாள் .” அதனை நான் பார்த்துக் கொள்கிறேன் சார் ” அடுத்தேதோ பேச குரியகோஸ் வாய் திறக்கும் முன் அறையை விட்டு வெளியேறி விட்டாள் .

யோசனையோடு நீளமான வராண்டாவில் நடந்தாள்.  பழுப்பு நிறக் கண்ணாடியாக மின்னின வராண்டா தரைகளும், பத்தடிக்கு ஒன்றாக நின்றிருந்த தூண்களும். வராண்டாவின் மையத்தில் வெண்ணிற மார்போனைட்டில் பளீரிட்டபடி அருள்பாலித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவருக்கு இரு புறமும் ஆளுயர பித்தளை குத்து விளக்குகள்.

பணத்தை தன் ஒவ்வொரு இன்ஞ்சிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவமனை  வஞ்சனையின்றி எல்லா இடங்களிலும் மின்னி நான் பண வசதியுடையவர்களுக்கு மட்டும் தான் எனக் கண் சிமிட்டியது. உண்மைதான் அந்த ஆடம்பரமான மருத்துவமனையை மாத வருமானம் லட்சங்களில் இருப்பவர்களால்  மட்டுமே திரும்பி கூட பார்க்க முடியும்.



அது கர்நாடகா மணிபாலில் அமைந்துள்ள காஸ்மெடிக் சர்ஜரி சென்டர். எத்தனையோ நடிகர் , நடிகைகள் , அரசியல்வாதிகள் , கோடீஸ்வரர்கள் என தங்கள் முகத்தை ,உடலை சீரமைத்து செல்லும் இடம். லட்சங்களை தாண்டி கோடிகளில் போடும் பில்களை கூட கவலைப்படாமல் ஒரே செக்கில் போட்டு நீட்டும் மனிதர்களே அங்கே அதிக அளவில் வருபவர்கள் .

இந்த தாரா தர இருக்கும் செக்கை எப்படி மறுப்பது? நடந்தபடி யோசித்தாள் ரூபா. முகம் முழுவதும் தீக்காய தழும்புடன் சிகிச்சைக்கு வந்த பணக்கார வீட்டு பெண் தாரா .மூன்று மாத தொடர் சிகிச்சையின் பின் அவள் முகத்தை பழைய மாதிரி மாற்றிக் காட்ட அவள் தனது மகிழ்வை இவர்களுக்கு தனியான செக் மூலம் காட்ட  நினைக்கிறாள் .

இந்த செக்கை அவள் மனம் நோகாமல் மறுப்பது எப்படி ? ம்ஹூம் இதற்கு கணா தான் சரி. நடையை துரிதப்படுத்தி் லிப்டை அடைந்து மூன்றாவது மாடியில் இறங்கி ஸ்டாப்ஸ் ரூமை அடைந்தாள் .

” கணா “

அந்த கணா அந்த அறையின் ஒரு பக்க சுவராக அமைந்திருந்த கண்ணாடி பரப்பின் முன் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.ரூபாவின் அழைப்பை கேட்டுக் கொண்டதன் அறிகுறியாக திரும்பாமலேயே தலையை லேசாக அசைத்தான் .

” அந்த தாரா இன்று டிஸ்சார்ஜ் .நீ போய் அவளை பார்க்கிறாயா ? ” ரூபாவின் பேச்சு தமிழில் இருந்தது .

அவனிடம் அசைவில்லை. ரூபா போய் அவன் தோளில் கை வைத்தாள் .” கணா “

” ப்ச் .அவளை நீயே முடித்து விடு ”  கணநாதன் தெளிவான தமிழில் பேசினான் .

” கணா அவள் செக்கோடு வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கிறாள்” . திரும்பி முறைத்தான்.

” ஹேய் என்னை ஏன்டா முறைக்கிறாய் ? நான் அவள் நிலைமையை சொன்னேன் ” ரூபாவின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .

” கெட் லாஸ்ட் ” கத்தினான் .

” ஓ.கே …ஓ.கே ..ரிலாக்ஸ் டியர் ”  மென்மையாய் அவன் தோள் வருடினாள் .இன்னமும் இறுகின அவன் தோள்கள் .இருவரும் சிறிது நேரம் பேச்சின்றி இருந்தனர் . ரூபாவின் கை அவன் தோள் வருடும் ஆறுதலை மட்டும் நிறுத்தவேயில்லை. இரண்டு முழு நிமிடங்களுக்கு பிறகு அவன் தன் தோள் தொட்டிருந்த கையில் தன் கன்னம் சாய்த்துக் கொண்டான். ரூபா தன் கையை அசைக்காமல் வைத்திருந்து அவனது  ஸ்பரிசத்தை ஏற்றுக் கொண்டாள் .

” தாராவை நானே பார்த்துக் கொள்கிறேன் கணா “

” இல்லை வேண்டாம் .அவளிடம் நானே பேசுகிறேன்.நீ….” உதட்டை மடித்து பேச்சை கத்தரித்தான் .

ரூபாவின் கை உயர்ந்து அவன் தலையை வருடியது .  பின் நின்று சிறு குறும்புடன் அவன் தலைமுடியை கலைத்தது . ” இந்த முடியை கொஞ்சம் வெட்டிக்கோயேன் “

” சூ …” கணநாதன் அவள் கையை தள்ளினான். ” லீவ் மீ அலோன் ” சலிப்பாய் வந்தது குரல் .

” ஓ.கே. டா கண்ணா . டேக் ரெஸ்ட் . நான் …. சஷிஸாவை பார்க்க போகிறேன் “

கணநாதனிடமிருந்து பதிலில்லை. ஆனால் சற்று தளர்ந்திருந்த அவனது தோள்களில் மீண்டும் இறுக்கம் .ரூபா பெருமூச்சு ஒன்றுடன் அவனை விட்டு விலகி அறை வாயிலுக்கு நடந்தாள் .அவள் அறைக் கதவை திறக்கும் போது கணநாதன் அழைத்தான் .



” மம்மி ..” ரூபா திரும்பினாள் .

” டேக் கேர் ஆப் ஹெர் அன்ட் ….பெஸ்ட் ஆப் லக் “

தலையசைத்து புன்னகைத்து விட்டு லிப்டில் இரண்டாவது மாடி வந்து இறங்கினாள் ரூபா. நீள் வராண்டாவில் நடந்து நூற்றி இரண்டாவது அறை முன் நின்று மெல்ல கதவை தட்டினாள் .

” யெஸ் கமின் ” மெலிவாய் ஒரு குரல் .

ரூபா கதவை தள்ளி உள்ளே நுழைந்தாள். கட்டிலில் அந்த பெண் அமர்ந்திருந்தாள். கால்களை மடக்கி குத்திட்டு வைத்து முட்டியில் முகம் புதைத்திருந்தாள் .

” சஷிஸா “

” சஷிஸா “

” சஷிஸா”

மெல்ல அருகே போய் அந்த பெண்ணின் தோள் தொட்டாள்.” சஷிஸா”

விருக்கென்று நிமிர்ந்த அந்தப் பெண்ணின் கண்கள் அபாரமாக இருந்தன.  ஓரங்கள் சிவந்து நீர்மையோடு் இருந்த அவ்விழிகள் பதட்டமாய் இருந்தன .பயமாய் பார்த்தன .

” எ…என்னையா கூப்பிட்டீர்கள் ? “

” உங்கள் பெயர்தானே சஷிஸா ? “

அவளது வலது கை வேகமாக உயர்ந்து தன் முகத்தை தானே தடவி பார்த்தது. உதடு ,  கன்னம் என தொட்டு பார்த்தது .

” நான் …சஷிஸா …” முணுமுணுத்தது.



What’s your Reaction?
+1
18
+1
19
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago