Categories: Serial Stories

ஓ..வசந்தராஜா..!-9

9

எல்லாம் உன்னால் வந்தது அக்கா, உனக்காக பாவம் பார்க்கப் போய் நான் இப்போது அவனிடம் மாட்டி விழித்துக் கொண்டிருக்கிறேன்… படபடவென்று தமக்கையிடம் தனது உள்ளக்கிடக்கை கொட்டி விட அஸ்வினி துடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் சைந்தவியோ இரவு வேறு எதை பற்றியும் பேசவோ கேட்கவோ தயாராக இல்லை.

 அவளுடைய எண்ணம் முழுவதும் விதார்த் மேலேயே இருந்தது. அவனை மட்டுமே பேசினாள். “போன் நம்பர் வாங்கிப் போனார்.இங்கிருந்து போனதுமே போன் செய்துவிட்டார். அரை மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் என்னை ரொம்பவே மிஸ் செய்தாராம். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை, நான் பேசாமல் இருப்பதை பார்த்ததும் ஐயோ ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டேனா சாரி என்று பதறிவிட்டார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஐயோ அதெல்லாம் இல்லைங்க எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியலன்னு சொல்லவும் சிரிக்கிறார்.பிறகு பேசினோம் ,ரொம்ப நேரம் பேசினோம், என்ன பேசினோம்னு கேட்காதே,இப்போது ஒன்றுமே நினைவில் இல்லை” 

கண்கள் ஒருவித மயக்கத்தில் ஆழ்ந்திருக்க கட்டிலில் சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்த அக்காவின் சந்தோஷத்தை கெடுக்க அஸ்வினிக்கு மனம் வரவில்லை. பாவம் அவளாவது நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டும் என்றெண்ணியவள் வசந்த் பற்றிய கவலையை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

ஏதேதோ பேசியபடி இருந்த சைந்தவி திடீரென்று “என்னுடைய சேனல்…” என்றதை கவனித்த அஸ்வினி அவள் பேச்சில் கவனம் திருப்பினாள்.

” அந்த சமையல் வீடியோவை பார்த்து ரொம்பவே பாராட்டினார்.தொடர்ந்து இதுபோல நிறைய வீடியோக்களை அப்லோட் செய்யும்படி சொல்லியிருக்கிறார். அவரும் கூட ஒரு சேனல் ஆரம்பிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்”

” என்ன அவரும் சமையல் சேனல் ஆரம்பிக்கப் போகிறாரா?” அஸ்வினி ஆச்சரியமாக கேட்க,” ஒரு குக் சமையல்  சேனல் ஆரம்பிப்பதில் என்னடி இவ்வளவு ஆச்சரியம் ?” என்றாள் சைந்தவி.



“என்ன விதார்த் குக்கா?”

” ஏய் பெயரைச் சொல்லாதடி, அவர் உனக்கு அத்தான் முறையாக வேண்டும்” அக்காவின் உரிமை பேச்சில் அஸ்வினி அயர்ந்தாள். அதெப்படி பார்த்த உடனேயே இவ்வளவு உரிமை வரும்?

” எல்லாம் வரும்” என்றாள் சைந்தவி. “மனசுக்கு பிடித்து விட்டால் விருப்பமும் உரிமையும் தானாகவே வந்து விடும்”

” சரி அந்த பிடிப்பு விருப்பு எல்லாவற்றையும் விடு, விதார்த் சாரி அத்தான் குக்கா?”

” ஆமாம்டி உன்னிடம் அப்பா சொல்லவில்லை ?”

சுரேந்தர் இளைய மகளிடம் மாப்பிள்ளை விபரம் சொல்ல வந்தார்தான். அஸ்வினிக்கு அதில் பெரிய அளவு இன்ட்ரஸ்ட் இல்லாமல் “அக்காவிடம் சொல்லுங்கள்பா” என்று விட்டாள்.

 பெற்றோர் அக்காவிற்கு பொருத்தமான வரனைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று திருப்தியானாள். “கனடாவில் பெரிய ஹோட்டலில் வேலை பார்க்கிறார். இப்போது முன்று மாத விடுமுறையில் வந்திருக்கிறார்.பத்து நாட்கள் விடுமுறை முடிந்து விட்டது. இன்னமும் ஒரு மாதத்திற்குள்  திருமணத்தை முடித்துக் கொண்டு கனடா திரும்ப வேண்டுமாம்”

சைந்தவி சொல்ல அஸ்வினிக்கு ஆச்சரியம், “என்னக்கா எல்லாமே ஏதோ முன்பே எழுதி வைத்தது போல் படபடவென்று நடக்கிறது!”

” ஆமாம் அஸ்ஸு அவரவர் விதி அவரவர் தலையில் எழுதித்தான் வைத்திருக்கிறது போலும்” தன் தலையைத் தொட்டுக் காட்டியவள், “இந்த இன்பத்தையெல்லாம் விட்டுவிட்டு கண்டதன் மேலேயும் மனதை செலுத்தி தவறான பாதையில் போகப் பார்த்தேனே… நல்லவேளை தப்பித்தேன்” என்றாள்.

சைந்தவி குறிப்பிட வருவது புரிய அஸ்வினி உதடு துடித்தது.இல்லை அக்கா, நீ… நாம்… தப்பிக்கவில்லை. அந்த வில்லனிடம் எதிலோ மாட்டியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்,உதடுகளை அழுத்தி தன் வேதனையை மனதிற்குள் மறைத்துக் கொண்டாள்.

 முதலில் அவ்வளவு சீக்கிரம் திருமணமா! என்று எண்ணியவள் இப்போது மறுநாளே அக்காவிற்கு திருமணம் முடிந்து கனடா கிளம்பி போய்விட்டாலும் சரியே என்று எண்ணினாள். கனடாவிற்கு கிளம்பி போய்விட்டவளை வைத்து அவனால் மிரட்ட முடியாதல்லவா?

 உன் அக்காவை என்ன செய்கிறேன் பார் என்று வசந்த் மிரட்டுவது போலவும், அதற்கு நீ கனடாதான் போக வேண்டும் என்று அஸ்வினி சொன்னதை கேட்டு அவன் அதிர்ந்து விழித்தபடி நிற்பது போலவும் மனதிற்குள் கற்பனை செய்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள். அக்கா கனடா போகட்டும்,நான் பெங்களூர் போய் விடுவேன். இவன் இங்கே தனியாக உட்கார்ந்து யார் கிடைக்கிறார்களோ அவர்களை நன்றாக பழிவாங்கட்டும் கிண்டலாக நினைத்தபடியே ஒரு திருப்தியோடு தூங்கிப் போனாள்.

 மறுநாள் மாலை நான்கு மணி கே.கே நகர் பிரான்ச் என்று மெசேஜ் அனுப்பி இருந்தான் வசந்த்.எவ்வளவு தைரியம்…அப்படி எதை வைத்து மிரட்ட நினைக்கிறான்? கோபத்துடன் முடியாது என்று மெசேஜ் அனுப்பி விட்டு குளிக்கப் போனாள். வந்து பார்த்தால், அப்போ அடுத்த வீடியோ அனுப்புறேன் என்று பத்து முறை திரும்பத் திரும்ப மெசேஜ் பண்ணியிருந்தான்.

 எத்தனை வீடியோ வேண்டுமானாலும் அனுப்பிக்கொள், இனி உன் மூஞ்சியில் விழிக்க மாட்டேன். வெறுப்போடு பதில் அனுப்பிவிட்டு அரட்டை அடித்தபடி டேபிளில் உணவு உண்டு கொண்டிருந்த குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாள்.

 “நகைகள் இருக்கிறது, சைந்தவிக்கு கொஞ்சம் புடவைகள், சுடிதார்கள் வாங்க வேண்டும்” சரிதா சொல்லிக் கொண்டிருக்க “அம்மா கனடாவில் அக்கா சேலை சுடிதார் எல்லாம் போட்டுக் கொள்வாளா என்று கேட்டு விடுங்கள். வாங்கி வைத்து வீணாகப் போகப் போகிறது” கிண்டல் செய்தாள் அஸ்வினி.

” அதெல்லாம் நான் போட்டுக் கொள்வேன். நீங்கள் வாங்குங்கம்மா..” சைந்தவி சொல்ல பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர் என்று சரிதா அடுக்க துவங்க, “அம்மா கனடாவிற்கு எதுவும் பார்சல் சர்வீஸ் இருக்கிறதா என்ன?” அஸ்வினி கேட்க, “அதானே இதையெல்லாம் எப்படி கொண்டு செல்வது?” என கவலைப்பட ஆரம்பித்தாள் சைந்தவி.

 சுரேந்திரன் சிரித்தபடி “நான் இந்த விபரங்களெல்லாம் மாப்பிள்ளையிடம் பேசுகிறேன்” என்றார்.

 அப்போது அறைக்குள் சைந்தவியின் போன் ஒலிக்க உடன் அக்காவின் கன்னங்களில் செம்மை ஏறுவதை ஆச்சரியமாக பார்த்தாள் அஸ்வினி. அட அக்காவிற்கு இப்படி ஒரு உடனடி காதலா?ஒரு வகை த்ரில்லிங்காய்  அவள் தமக்கையை பார்த்திருக்க சைந்தவி அறைக்குள் ஓடிய வேகத்திற்கு மூவருமாய் நகைத்தனர்.



 தொடர்ந்து பெற்றவர்கள் திருமண விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க சைந்தவி உள்ளிருந்து “அஸ்ஸு இங்கே வா” என கத்தினாள். அறைக்குள் காதில் வைத்திருந்த போனுடன் நிலைகுத்திய கண்களுடன் நின்றிருந்த சைந்தவியை பார்த்த அஸ்வினி பதறினாள்.

“அக்கா என்ன ஆச்சு?”

 சைந்தவியின் ஆட்காட்டி விரல் டேபிள் மேல் சார்ஜில் இருந்த அஸ்வினியின் போன் பக்கம் நீண்டது. “திரும்பத் திரும்ப மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. என்னவென்று பார்த்தேன்…” திக்கி திக்கி பேசினாள்.

 அஸ்வினி வேகமாக மெசேஜை பார்த்துவிட்டு அதிர்ந்தாள். அப்படியே இடிந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்டாள். சைந்தவியோ நின்ற இடத்தில் நின்றபடி சேர்ந்த விழித்துக் கொண்டிருந்தாள்.

மெசேஜில் ஒரு போட்டோ வந்திருந்தது. அதில் ஒரு பென்டிரைவ் இருந்தது. பார்த்ததுமே அஸ்வினிக்கு தெரிந்து விட்டது ,அது லேப்டாப்பை ஹேக் பண்ணுவதற்காக அவள் பதிவேற்றிக் கொடுத்த புரோகிராம் இருந்த பென் டிரைவ். அதனை சைந்தவி மீண்டும் எடுத்துக்கொண்டு வராமல் அங்கேயே விட்டு வந்திருக்கிறாள்.

 அஸ்வினியும் அன்று இருந்த மன நிலையில் குழப்பத்தில் அதைப்பற்றி கேட்காமல் விட்டிருந்தாள். இப்போது அந்தப் பென்டிரைவ் அவனிடம் இருக்கிறது என்றால்…

” அவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டதா அஸ்ஸு ?” சைந்தவியின் முகம் பயத்தில் வெளுத்திருந்தது. 

“தெரியவில்லையே அக்கா” அஸ்வினியின் முகமும் வெளுக்க ஆரம்பித்தது.

” ஆனால் இந்த பென்டிரைவ் என்னுடையது என்று அவனால் எப்படி நிரூபிக்க முடியும்?” அஸ்வினி கேட்கவும் சைந்தவியின் முகம் கொஞ்சம் தெளிய அந்த நேரத்தில் போனில் மற்றுமொரு மெசேஜ்.

 இப்போது ஒரு பில்.அதாவது அஸ்வினி இந்த பென்டிரைவை வாங்கிய பில்.அவள் பெயர் மற்றும் தெளிவான அட்ரசோடு இருந்தது. வழக்கமாக பென்டிரைவ் ஆன்லைனில்தான் ஆர்டர் செய்வாள். அன்று காலேஜில் ஒரு அவசர தேவை என்று போகும் வழியில் இருந்த சிறிய மால் ஒன்றில் இந்த பென்டிரைவை வாங்கியிருந்தாள்.

இரு பெண்களும் நடுங்கினர். “இது எப்படி அஸ்ஸு?” சைந்தவிக்கு மூச்சு வாங்கியது.அவ்வளவு பதட்டத்திலும் அஸ்வினிக்கு புரிந்தது.

“ப்ச்..பென் ட்ரைவ் கவரை பிரித்து அங்கேயே போட்டுவிட்டு வருவாயா? கவரில்  கடையின் அட்ரஸை எழுதி வைத்திருந்தார்கள் போல, வசந்த் விசாரித்து நேரடியாக கடைக்கே போய் என் பில்லை வாங்கியிருக்கிறார்”

” அய்யய்யோ என்னடி இப்படி மாட்டிக்கொண்டோம்?”

” படித்தவளா நீ?என்ன இப்படி புத்தி இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறாய்?” ஆத்திரத்தில் அக்காவை கடிந்து கொள்ள ,அவளோ சரசரவென்று கண்ணீர் வடிக்கத் துவங்கினாள்.

“அஸ்ஸு சாரிடி தெரியாமல் செய்துவிட்டேன்…”

சிறு பிள்ளையாய் அழும் சகோதரியை சமாதானம் செய்வதை தவிர அஸ்வினிக்கு வேறு வழி தெரியவில்லை. “சரி விடுக்கா, என்ன செய்வது என்று யோசிக்கலாம்”

” அஸ்ஸு என் கல்யாணம் நின்று விடுமாடி, இந்த திருட்டுப் பெண் வேண்டாம் என்று அவர் வீட்டில் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்களா?”

 நாளை உலகம் அழிந்து விடுமா என்பது போலொரு ஏக்கத்தை கண்களில் நிறுத்தி கேட்ட அக்காவை இழுத்து அணைத்துக் கொண்டாள் அஸ்வினி. “இல்லைக்கா அப்படி எதுவும் நடக்காது. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கல்யாணம் பெண்ணாக கனவுகளோடும் சிரிப்போடும் இரு.அது போதும்” அக்காவை சமாதானம் செய்த அஸ்வினி வசந்தை சந்திக்க கிளம்பி விட்டாள்.

“எங்கே இருக்கிறீர்கள்? உடனே உங்களை பார்க்க வேண்டும்”அவளது போன் அழைப்பிற்கு “நான்தான் டைம் சொல்லி இருந்தேனே, அதே டைம்தான் இப்போது முடியாது” என்று வைத்து விட்டான்.

 பற்களை கடித்துக் கொண்டு மாலை நான்கு மணிக்கு காத்திருந்தாள் அஸ்வினி.



What’s your Reaction?
+1
34
+1
22
+1
1
+1
2
+1
2
+1
0
+1
1

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

19 mins ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

21 mins ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

25 mins ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

27 mins ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

4 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

4 hours ago