karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 19

19

எனக்கென்ன என நான் சிதறவிட்ட என் வாழ்வு

அலைந்து திரிந்து அலுத்து

உன் விரல் பற்றிக்கொள்ள துடிக்கிறது

 

அறைக்குள் நுழைந்ததும் ஏஸியை ஆப் செய்துவிட்டு , சன்னல் திரைகளை திறந்துவிட்டான் வீரேந்தர் .டெல்லி வெயிலின் வெம்மை பளீரென முகத்திலடித்தது . பார்வையை கூர்மையாக்கி தூரத்து மைதானத்தை உற்று நோக்கினான் .யூனிபார்ம் அணிந்திருந்த சுமார் முப்பது பேர் தற்காப்பு பயிற்சியான ” க்ராவ் மாகா ” பயின்று கொண்டருந்தனர் . மற்றொருபுறம் கராத்தேவும் , வேறொரு பக்கம் துப்பாக்கி பயிற்சியும் அளிக்கப்பட்டு கொண்டருந்த்து .ஒவ்வொரு இடத்திலும் இருபது முதல் நாற்பது பேர் வரை பயற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் .வீரேந்தர் ஒவ்வொரு பயிற்சியாக உற்றுப் பார்த்தான் .

பைனாக்குலரை கையில் எடுத்துக் கொண்டவன் ஒவ்வொரு ஆளாக கவனிக்க தொடங்கினான் .சில ஆட்சேபங்கள் தோன்ற தனது அறையை விட்டு வெளிநேறியவன் மைதானத்தை நோக்கி நடந்தான் .நடந்து கொண்டிருந்த பயிற்சிகளில் சில திருத்தங்கள் செய்தான் .

” வஹீப் , துப்பாக்கியை இங்கே …இப்படி தோளில் தாங்கனும் . மேலே ஏற்றினாயானால் கழுத்திலும் , கீழே இறக்கினால் வயிற்றுலும் தாக்கும் .முன்னால் சுடும்போது தானாக துப்பாக்கி பின்வாங்கும் .அப்போது தாங்குவதற்கு ஏற்ற இடம் உன் தோள்தான் .அதற்கு தயாராக உன் தோள்களில் உரமேற்றி வைத்திருக்க வேண்டும் ….” சுடுதளத்தில் இருந்த வட்டத்திற்கு குறி வைத்து கொண்டிருந்த அந்த இளைஞனின் துப்பாக்கியை சரி செய்துவிட்டு …தனது முரட்டு கைகளால் அவன் தோள்களை தட்டி ஊக்குவித்தான் .

” இப்போது சரியா சார் …? ” ஒரு குண்டை சுட்டு காட்டிய அந்த வஹீப்பின் குரலில் வீரேந்தரிடம் நல்ல பெயர் வாங்கிவிடும் ஆர்வம் இருந்த்து .

” ம் …ம் ..தட்ஸ் குட் . லிட்டில் மோர் டிரெயினிங்  இஸ் ரெகுயர்டு டு பி் பெட்டர் “

” சார் ஏதோ சொல்றீங்கன்னு தெரியுது .ஆனால் புரியலை .எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் புரியாது …” வஹீப் தனது தாய் மொழியான இந்தியில் பேசினான் . தலையை சொறிந்து கொண்டான் .

” ஹா …ஹா …ஒன்றுமில்லை .இது பரவாயில்லை .இன்னமும் கொஞ்சம் பயற்சி வேண்டுமென்று சொன்னேன் ….” முதலில் போல் இந்தியில் பேசி அவனுக்கு புரிய வைத்துவிட்டு , அடுத்த இடத்திற்கு நகர்ந்தான் வீரேந்தர் .

” ஹேய் நம்ம கேப்டன் சூப்பர் இல்லை …? ” வஹீப் அருகிலிருந்த மற்றொருவனிடம் சிலாகிப்பதை கேட்டபடி நடந்தான் .எதிரில் சக்கரவர்த்தி நடந்து வந்து கொண்டிருந்தார் .

எழுபதை எட்டிக் கொண்டிருக்கும் வயதிலும் இன்னமும் கம்பீரம் குறையாமல் வந்து கொண்டிருந்த தந்தையின் நடையை ரசித்தபடி அவர்ருகே சென்றான் .அப்பாவும் , மகனும் தமிழில் பேச துவங்கினர் .




” ஏன் இந்தர் இந்த க்ராவ் மாகா நமக்கு தேவைதானா …? ” கராத்தேயை ஒத்த அந்த பயிற்சியை பயின்று கொண்டிருந்தவர்களை காட்டி கேட்டார் .

” நிச்சயம் இந்த பயிற்சி நமக்கு பயனுள்ளதாக இருக்கும் அப்பா .இது இஸ்ரேல் ராணுவத்தினரின் பயிற்சி .நமக்கு ரொம்ப தாமதமாகத்தான் தெரிய வந்திருக்கிறது .நான் தமிழ்நாடு போக வேண்டியிருந்த்தால் இதனை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது ….”

சொல்லவிட்டு அமைதியானான் .அவனது மனதில் தமிழ்நாடும் , குன்னூரும் , சணமுகபாண்டியனும் , கார்த்திக்கும் நினைவில் மிதந்து வந்து …பின் இவர்கள் அனைவரையும் பின்தள்ளி சாத்விகாவின் உருவம் அடிமனதிலிருந்து மேலெழுந்து வந்து மனம் முழுவதும் வியாபித்து நிறைந்த்து .

” சுவீட் கேர்ள் …” அவன் இதழ்கள் முணுமுணுத்தன.

” ” இஸ்ரேலில் இருந்து இந்த பயிற்சி குன்னூர் எப்படி போனது …? ” சக்கரவர்த்தியின் கேள்வி அவன் நினைவை திசை திருப்ப …

” குன்னூர் இல்லை அப்பா .நான் மதுரையில் இத
னை பற்றி தெரிந்து கொண்டேன் .இதோ இந்த பயிற்சியாளரை கூட நமக்காக அங்கிருந்துதான் அழைத்து வந்தேன் …”

” ம் …சரி பார்க்கலாம் .ஒரு முறை நம் ஆட்கள் ஏதாவது ஒரு ப்ராஜெக்டில் இதனை உபயோகித்து பார்த்தார்களானால்தான் இதனை பற்றி நாம் ஒரு முடிவிற்கு வர முடியும் .எனக்கு இன்று சென்ட்ரல் மினிஸ்டரோடு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது .அதன்பிறகு வீடுதான் .நீ …? “

” எனக்கு இன்னமும் ஒரு மணிநேரம் இங்கேதான் வேலை அப்பா .பிறகு ஒரு பார்ட்டி …அது முடிந்ததும் வீடு …”

” சரி .சீக்கிரம் வா .முடிந்தால் சாப்பிடாமல் வா .உன் அம்மா இன்று இரவு பிஷ் ப்ரை செய்யப்போவதாக சொன்னாள் …” சக்கரவர்த்தி கிளம்ப அவரை கையசைத்து அனுப்பிய வீரேந்தர் மீண்டும் ஆபிஸினுள் நுழைந்தான் .

” சார் உங்களுக்காக இரண்டு மணி நேரமாக ஒருவர் காத்து கொண்டிருக்கிறார் …” ஆபிஸ் ஆள் தகவல் சொல்லி போனான் .

யாராக இருக்கும் …?

வீரேந்தர் போன போது காத்திருந்த ஆள் சோபாவில் அமர்ந்திருக்க அவரது உச்சந்தலை மட்டும் பின்னருந்து பார்த்த போது தெரிய …

” தும் கௌன் ஹோ …? ” ( யார் நீங்கள் ? )

” தும் கியா சாகியே …? ”  ( உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் )

இந்தியிலேயே கேட்டான் .

” எனக்கு நீங்கள் நிறைய செய்யவேண்டும் …” என்றபடி அந்த சோபாவில் எழுந்து திரும்பியவள் சாத்விகா .

” சாத்விகா ….” முதலில் உற்சாகமான அவன் குரல் பிறகு , குறைந்து ஜாக்கிரதையானது .

” நீ ஏன் இங்கே வந்தாய் …? “

சாத்விகா பதில் சொல்லாமல் அவனை பார்த்தவாறு இருந்தாள் .தன் கையை திருப்பி கடிகாரத்தில் தேதி பார்த்தவன் …

” உன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதா …? “

” இல்லையா …? என்ன பண்ணினாய் …? ” அவளை கூர்ந்தான் .

சாத்விகா பேசவுமில்லை .பார்வையை அவனை விட்டு நகர்த்தவும் இல்லை .

” என்ன விளையாட்டுத்தனம் பண்ணிவிட்டு இங்கே வந்து நிற்கிறாய் …? ” அலுப்பாக கேட்டான் .

சட்டென அவனிடமிருந்து பார்வையை திருப்பிய சாத்விகா அங்கிருந்த சன்னல் அருகே போய் நின்றுகொண்டாள் .கலங்கிய கண்களை அகல விரித்து கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்த முயன்றாள் .

” சாத்விகா …நான் உன்னிடம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் .உன் நிச்சயதார்த்த்தை நிறுத்தினாயா …? உனக்கு நான் தெளிவாக சொல்லிவிட்டு தானே வந்தேன் .பிறகும் ஏன் இப்படி செய்தாய் …?

பட்டென அவன்புறம் திரும்பியள் ” நிறுத்தினாயா …? செய்தாயா …? என்று என்னையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே .உங்களுக்கு என்ன செய்தாலும் அதை நான்தான் செய்திருப்பேன் என்பதில் என்ன அவ்வளவு நிச்சயம் …? ” கோபமாக கேட்டாள் .

” நிச்சயமேதான் .இது போன்ற முட்டாள்தனங்களை உன்னை தவிர உன் வீட்டு ஆட்கள் யாரும் செய்யமாட்டார்கள் …”

” அப்போது உங்களை பொறுத்தவரை நான் முட்டாள் .அப்படித்தானே …? “

” உஷ் கத்தாதே .டீ கொண்டு வர சொல்கிறேன் .குடித்துவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு .நைட் பத்துமணிக்கு சென்னைக்கு ஒரு ப்ளைட் இருக்கும் .அதில் நாம் கிளம்புகிறோம் .உன்னை உன் அப்பாவிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் எனக்கு மறுவேளை ….” என்றவன் பணியாளை வரவழைக்கும் பஸ்ஸரை அழுத்தினான் .




அவனது இந்த அலட்சியம் ஆத்திரத்தை கூட்ட வேகமாக அவனருகே வந்தவள் …” எல்லாம் உங்களால்தான் .அன்றே விசாரித்து சொல்ல சொன்னேனே .ஒழுங்காக விசாரித்தாயா ..? இப்போது பார் என் உள்ளுணர்வு உண்மையாகி …அங்கே சாரதா அத்தை , சுகுமார் …எல்லோரும் என்னை என்னவெல்லாம் பேசிவிட்டார்கள் தெரியுமா …? எல்லாவற்றிற்கும் காரணம் நீதான் ….ஐ  ஹேட்  யூ …” தன்னையறியாமல் தனது கைகளை உயர்த்தி அவன் தோள்களில் குத்த தொடங்கினாள் .

அவளது ஆத்திர வார்த்தைகளில் தனக்கான பதிலை தேடியபடி இருந்தவன் அவளது குத்தல்களை சிறுபிள்ளை காலுதைப்பாய் தோளில் வாங்கியபடி , தீவிர யோசனையில் ஆழ்ந்தான் .

” என்ன நடந்த்து பேபி …? சுகுமார் என்ன செய்தான ..? “

” அ…அவன் என் வீட்டிலேயே வைத்து …என்னிடமே தவறாக …” சாத்விகாவின் பேச்சில் வீரேந்தரின் உடல் இறுகியது .தன் தோள்களை குத்திக் கொண்டிருந்த அவள் கைகளை அழுத்தமாக பிடித்தான் …

” உன் அப்பா …அண்ணன் என்ன செய்துகொண்டிருந்தார்கள் .அவர்கள் இருக்கும் தைரியத்தில்தானே உன்னை அங்கே விட்டு வந்தேன் …ம் …” அதட்டலாக கேட்டான் .

” அப்பாவும் , அண்ணனும் …சுகுமாரை திட்டி அனுப்பி விட்டார்கள் …”

” ஓ…” என ஆசுவாசமானவன் ” இதை காரணம் வைத்து நிச்சயதார்த்தத்தை நிறுத்தினாயா …? “

” திரும்பவும் நானா …? ” மீண்டும் அவனை குத்த ஆரம்பித்தாள் . அப்போது டீயுடன் பணியாள் கதவை தட்ட , அவள் இருகைகளையும் பற்றி , அவளை இழுத்து சோபாவில் அமர வைத்த வீரேந்தர் தானும் அமர்ந்து கொண்டு …” யெஸ் கம் இன் …” என்றான் .

வேலையாள் டீயை வைத்து போனதும் ,ஒரு கப் கலந்து அவளிடம் நீட்டினான் .” சொல்லு ….” என்றான் .

” நான் நிறுத்தவில்லை …” மனதை அழுத்திக் கொண்டிருந்த துயரம்தான் .ஆனாலும் இப்போது சாத்விகாவால் அந்த டீயை விரும்பி குடிக்க முடிந்த்து .

” உன் அப்பாவா ….? “




” இல்லை .சாரதா அத்தையும், சுகுமாரும்தான் .அவர்கள் இழுவைக்கு நான் வருவதாக இருந்தால் மட்டுமே திருமணமென்று ….”

” நிறுத்து …நிறுத்து …அதென்ன அவர்கள் இழுவை …? “

” அவர்கள் நிற்க சொன்னால் நின்று , நடக்க சொன்னால் நடந்து ,உட்கார சொன்னால் உட்கார்ந்து ….அ …அந்த சுகுமார் படுக்க சொன்னால் ….”

” போதும் …உளறாமல் வாயை மூடு . இது போன்ற ஒரு நிலைமையில் உன் அப்பா உன்னை வைத்திருக்கவில்லை …”

” அவர் என் அப்பா இல்லை ….” டீயை ரசித்து குடித்தபடி நிதானமாக சொன்னாள் .

” வாட் …? வாட் ஆர் யு சேயிங் …? ” கை டீ சிதறி சட்டையில் தெறிக்க , அதிர்ந்து கேட்டவனை நிதானமாக பார்த்தாள் சாத்விகா .

நல்லா முழிடா …இந்த விசயத்தை முதன் முதலில் கேட்ட போது எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் .நிதானமாக அவன் அதிர்வை வேடிக்கை பார்த்தபடி தன் டீயை பருகினாள் .

What’s your Reaction?
+1
15
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!