kadak katru Serial Stories

Kadal Kaatru – 31

                                          ( 31 )

 

” மேகலையை காலேஜில் சேர்ப்பதில் ஏன் அவ்வளவு உறுதியாக இருந்தாய் சமுத்ரா ..? ” ஓடிக்கொண்டிருந்த டிவியை ஆப் பண்ணி விட்டு அவளை பார்த்து கேட்டான் .

சமுத்ரா இருந்த நல்ல மனநிலையில் அவனுக்கு பதிலளித்து விட எண்ணி வாயை திறந்த சமுத்ராவிற்கு , யார் லாவண்யா …? என்ற அவனது கேள்வி நினைவு வந்துவிட்டது .இவனின் கேள்விக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும் ..?எனக்கு இவன் தவறாமல் பதிலளித்துக் கொண்டா இருக்கிறான் ..? வீம்பு தலைதூக்கியது .

” ரகசியங்கள் உனக்கு மட்டுந்தான் உரியவையா …? ” முகத்தை கெத்தாக மேலே தூக்கிக் கொண்டு பார்த்தாள் .

” ஏதோ விசயம் இருக்கிறது …? ” அவள் விழிகளுக்குள் தன் விழியை செலுத்தினான் .

பார்வையாலேயே படித்துவிடலாமென்று நினைக்குறானோ …? அவசரமாக கண்களை திருப்பிக் கொண்டவள் உதட்டினை சுழித்து அவனை அலட்சியப்படுத்தினாள் .

” ஆக .்நீ சொல்லமாட்டாய் ..?”

டிவியை மீண்டும் ஆன் செய்து பார்க்க துவங்கினாள் .டிவியை மறைத்தபடி முன் நின்றான் யோகன் .” உன்னிடம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் சமுத்ரா …”

எப்போதும் அவள்தான் அவன்முன் ஏதாவது தேவைக்காக அவன் முன் நின்ற பழக்கம் .இன்று அந்த நிலைமை மாறவே சமுத்ராவிற்கு வெகு சந்தோசம் .” லாவண்யா எங்கே இருப்பதாக சொன்னீர்கள் …? நேற்று ஏதோ முகவரி சொன்னீர்களே அது மறந்துவிட்டது .திரும்பவும் ஒரு முறை கூறுகறீர்களா …? ” மிகவும் மரியாதையுடன் கேட்டுவிட்டு காதினை அவன்புறம் லேசாக சாய்த்தபடி ஒரு போஸ் கொடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் .

அவன் சொல்லும் லாவண்யாவின் இருப்பிட விபரத்திற்காக தயாராக இருக்கிறாளாம் .

யோகனின் முகத்தில் மெல்ல புன்னகை மலர்ந்த்து .சரிந்திருந்த அவளை அணுகி காதினை பற்றி திருகியபடி ” கொழுப்புடி உனக்கு …” என்றான் .

” ஆமாம்டா நீதான் நெய்யும் , முந்திரியுமாய் போட்டு என னை வளர்த்தாய் பார் ” அவனது டி’ க்கு பதிலாக அநிச்சையாய் ‘டா’ போட்டுவிட்டு உதட்டை கடித்துக் கொண்டாள் .

காதினை விட்டு விட்டு , உதடுகளை வருடியபடி ” டா ” வா …ம் …” என்றான் . கோபமாக இல்லை தாபமாக .அவள் எழுந்துவிடாமல் அவளை கைகளால் வளைத்து சிறை செய்து கொண்டான் .

” நான் ஏன் உன்னை என் வாழ்க்கையில் முன்பே சந்திக்கவில்லை முத்ரா . உன்னைப் பார்க்காத என் முன் வாழ்நாட்களெல்லாம் இப்போது வெறுமையாக தோன்றுகிறதே ” யோகனின் குரல் நெகிழ்ந்திருந்த்து .

இந்த நெகிழ்வில் சமுத்ராவிற்கு மூச்சு முட்டியது .இவனென்ன ஒரு காதலன் காதலியிடம் பேசும் வசனத்தையெல்லாம் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறான் .

ஏதோ கண ணுக்கு தெரியாத சுழலில் சுழன்று கொண்டே செல்வது போல் தோன்ற துவங்கியது அவளுக்கு .

” விடுங்கள் என்னை எனக்கு தூக்கம் வருகிறது ” அவன் கண்களை சந்திக்காமல் சட்டை பட்டனில் கண்களை பதித்தபடி அவனை விலக்க முயன்றாள் .

” ம் …மேகலையின் ரகசியம் உனக்கு மட்டுந்தானா …?”

” லாவண்யாவின் முகவரி இன்னும் வரவில்லை …” தனது அணைப்பிற்குள் அவளை கொண்டுவர முயற்சித்த யோகனை தள்ள முயன்றபடி பேசினாள் .

” நீயாக சொல்ல மாட்டாய்…?நானாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் .மேகலை தங்கையென்ற முறையிலென்றாலும் என் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வது பிடிக்காமல் அவளை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டாய் .சரியா கண்ணம்மா …?பேச்சின் இறுதியில் யோகனின் இதழ்கள் சமுத்ராவின் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தன.




” சை எவ்வளவு மோசமான முடிவு …”

” ஆமாம்டா செல்லம் .உன் மனதை நீ சொல்லவில்லை .என் வசதிக்கு நான் முடிவு செய்து கொண்டேன் .அழகு பொண்டாட்டியின் ஆசையை நிறைவேற்றுவது கணவனின் கடமையல்லவா ..? ” செந்தமிழ் வசனம் பேசியபடி அவளை ஆக்ரமிக்க தொடங்கினான்.திணற திணற அவன் வசமாக ஆரம்பித்தாள் சமுத்ரா .

—-

ராஜபாண்டியின் அவ்வளவு பெரிய அலுவலகத்தில் இந்த அளவு மரியாதையோடு உள்ளே நுழைய முடியுமென று சமுத்ரா நினைக்கவில்லை.

அவரது அலுவலக அறைக்குள் நுழைகையில் இவர்களை நிமிர்ந்தும் பாராமல் உள்ளே வரும்படி சைகை காட் டினார் அவர் .யோகன் சமுத்ராவுடன் அறையின் ஓரம் நகர்ந்து நின்றான் .

ராஜபாண்டி அறையிலிருந்த வேறு ஒருவருக்கு ஏதோ உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் .அவரது இந்த அலட்சிய பாவம் சிறிது எரிச்சலூட்ட ” அட..அடா …என்ன மரியாதை …? உங்களுக்கு இங்கே பயங்கர மரியாதையாக இருக்கிறதே யோகன் …? ” யோகனின் காதருகில் முணுமுணுக்க சமுத்ரா  தன் நுனிக்காலில் நின்று வெகுவாக எட்ட வேண்டியிருந்த்து .

” உஷ் …” அடங்கிய குரலில் எச்சரித்த யோகன் அவள் பேச்சை தடுக்க அவள் இடையில் பிறர் அறியாமல் மெல்ல கிள்ளினான் .சட்டென அவனை விட்டு விலகி நின்று முறைத்தாள் சமுத்ரா .

இவன் ஒருத்தன் .இவனுக்கு ரொமான்ஸ் க்கு நேரம் காலமே கிடையாது .எங்கே வந்து என்ன பண்ணுகிறான் பார் ….? நன்றாக தள்ளி நின்று கொண்டாள் .

அந்த ஆள் வெளியேறி கதவு மூடிக் கொள்ளும் வரை கதவை பார்த்த படி அமர்ந்திருந்தார் ராஜபாண்டி .கதவு பூட்டிக் கொண்ட மறுநொடி எழுந்து நின்றவர் யோகனை நோக்கி கைகளை விரித்தவர் , ” டேய் பையா வாடா …வா…வா…” நாடக பாணியில் அழைத்தார் .

அவரது ஆவலுக்கு சற்றும் குறையாத ஆவலுடன் அவரை யோகனும் நெருங்க இருவரும் ஒருவரையொருவர் அனைத்துக் கொண்டனர் .

” படுவா …எப்படிடா இருக்க…? என்னையெல்லாம் மறந்துட்ட…?என்கிட்ட கூட சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்லை …?” செல்லமாய் அவர் தோள்களில் அடித்தார் .

” இல்லீங்கய்யா எங்க கல்யாணம் திடீர்னு நடக்க வேண்டியதாய் ஆயிடுச்சி .யாருக்குமே சொல்ல முடியலை …”

” என்னம்மா ஒரு வேளை உன்னை எதுவும் மிரட்டி கல்யாணம் பண்ணியிருக்கானோ …? ” நெற்றியடியாக வந்த அவரது கேள்வி சமுத்ராவிற்கு ஆச்சரியத்தை கொடுக்க விழி விரித்தாள் .

” செஞ்சாலும் செய்வான் .இவன் பெரிய ரவுடிப்பயல் ” வேகமாக யோகன் முதுகில் அடித்தார் .

” ஆமாம் சார் .என்னை ரொம்பவும் மிரட்டுகிறார் .”புன்னகையோடு தன்னை பார்த்துக் கொண்டிருந்த  யோகனை முந்திக் கொண்டு வேகமாக பதிலளித்தாள் சமுத்ரா .இவ்வளவு நெருக்கமாக யோகனுடன் பழகும் இந்த பெரியமனிதருக்கு ் அவனை தெரிய வைத்துவிட வேண்டுமென்ற வேகம் சமுத்ராவிற்கு .

” அப்படியா …? டேய் மடப்பயலே எப்பவும் பொண்டாட்டியை நீ மிரட்டக்கூடாதுடா …அவள்தான் நம்மை மிரட்டனும் …அப்பதான் நம்ம வாழ்க்கை வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடும் .புரிஞ்சதா …?” என்றார் கேலியாகவே .

” எவ்வளவோ விசயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் குருவே .இதையும் சொல்லிக் கொடுங்கள் கேட்டுக் கொள்கிறேன் ” பவ்யமாக யோகன் தலையை குனிய  மீண்டும் ஒரு அதிரடி சிரிப்புடன் அவனை அணைத்துக் கொண்டார் .

” நானெல்லாம் இவனுக்கு சொல்லிக்கொடுத்ததை விட இவன் எனக்கு சொல்லிக் கொடுத்த விசயங்கள்தான் அதிகம்மா .இப்போது ஒன்றும் தெரியாதவனைப் போல் பவ்யமாக நிற்பதைப் பார் ” கைகளைக் கட்டியபடி நின்ற யோகனின் கைகளை விளையாட்டாய் அடித்தார் .
” ஐயோ குருவே நீங்க வேற …சும்மா இருங்க ..” சிறு கூச்சத்துடன் நெளிந்தவனை சிந்தனையாய் பார்த்தாள் சமுத்ரா .

” மேகலை விசயம் இவன் சொன்னான்மா .அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் .நல்ல இடத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்று பல எண்ணங்கள் எங்களிருவருக்கும் இருந்த போதும் அவளை படிக்க வைக்க வேண டுமென எங்களுக்கு தோன்றவில்லை பார் .” சிறு வருத்தம் அவர் குரலில் .

” அன்பரசு சாகும் போது , அவர் மகளை பத்திரமாக நம் குடும்பத்தோடு ஒன்றிணைத்து பார்த்துக் கொள்ள வேண்டுமென கூறினாரே ஐயா ” யோகன் கூறினான் .

” ஆமாம் , நம் உறவு போல் பார்த்துக் கொள்ள வேண்டுமென கூறியிருப்பான் .அதனை நாம் தவறாக புரிந்து கொண்டு மேகலையின் எதிர்காலத்தை பற்றிய நினைவில்லாமல் இருந்து விட்டோம் .அதனை எங்களுக்கு நினைவுறுத்தியதற்கு நன்றிம்மா ” அவர் கைகளை கூப்ப தன் கண்களை ஒரு முறை தேய்த்து விட்டுக் கொண்டாள் சமுத்ரா .

முன்பொருமுறை இவரது சிறு பேட்டிக்காக தான் ஐந து மணிநேரம் காத்திருந்தும் கிடைக்காமல் போனது அவளுக்கு நினைவு வந்த்து .

” அவர் …மேகலையின் அப்பா எப்படி இறந்தார் ..?” ராஜபாண்டியிடம் கேட்டாள் .

” எனக்கு நம் நாட்டு கலைப்பொருட்கள் சேமிப்பில் சிறிது ஆர்வம் உண்டும்மா .என் தாத்தாவும் , அப்பாவும் இதில் ஈடுபாடு கொண்டவர்களே .அப்போதிருந்து அவர்கள் சேமித்த கலைச்செல்வங்களை நான் பாதுகாத்து வந்தேன் .இதில் என்னைப் போன்றே ஆர்வமுடைய அன்பரசு எனக்கு உதவினான் .பழைய பொருட்களின் இருப்பிடம் அறிந்து எனக்கு தெரிவிப்பவன் அவன்தான் .இவ்வாறு சேமித்த பொருட்களை நான் நல்ல விலைக்கு விற்றும வந்தேன் .தற்செயலாக எங்களது இந்த தொழிலை அறிந்து கொண்ட யோகேஷ்வரன் இதிலுள்ள சட்ட சிக்கல்களை விளக்கனான் .இதனை முறைப்படி அரசாங்கத்திடம் லைசென்ஸ் வாங்கி செய்யும்படி கூறினான் .




சிறு பையன் …அவனுக்கு இதிலிருந்த விபரங்கள் எனக்கு ஆச்சரியம் தந்த்து .விசாரித்த போது அவனது அறிவு எனக்கு பிரம்மிப்பை தந்த்து .இதனை கூர் திட்ட வேண்டுமென்ற முடிவோடு அவனை இது சம்பந்த்பட்ட படிப்பையே படிக்க வைத்தேன் “

இடையிட்டு என்ன படிப்பு …?” என்றாள் .

” ஆர்க்கியாலஜி …” என்றான் யோகன் .

” அதில் பி.எச்.டி வரை பண்ணியிருக்கிறான் நம் பயல் .அமெரிக்கா வரை வேலை கிடைத்தது தெரியுமா …? ஒற்றை விரலால் தள்ளி விட டு விட்டு இப்போது இங்கே  மீன் பிடித்து கொண்டிருக்கிறான் ”  பெருமையோடு அவனை பார்த்தார் ராஜபாண்டி .பிரம்மிப்போடு அவனை பார்த்தாள் சமுத்ரா.

சலனமின்றி இருந்த யோகன் ” இந்த பழம் பொருட்களை வாங்குவதில் நிறைய போட்டிகள் உண்டு சமுத்ரா .அப்படி நடந்த ஒரு போட்டியில் ஒரு ஏலத்தின் போது என் மீது ஒருவன் கத்தி எறிய அதனை தன் நெஞ்சில் வாங்கிக் கொண்டு அன்பரசு ….” குரல் நெகிழ்ந்து தடுமாறியது யோகனுக்கு .

ராஜபாண்டி அவன் கைகளை ஆதரவாக தட்டிக் கொடுத்தார் .சமுத்ராவிற்கு யோகன் மேகலை மேல் வைத்திருந்த அதீத பாசத்திற்கான காரணம் புரிந்த்து .

அறையினுள் சிறிது நேரம் ஆழ்ந்த அமைதி நிரம்பியது .” சாரிடம் நாம் டிரஸ்ட் விசயமாக பேச வந்தோம் …” யோகனின் கவலை பிடிக்காமல் அதனை மாற்ற எண்ணி சமுத்ரா அருகிலிருந்த அவன் கைகளை பற்றி லேசாக அசைத்தபடி  கூறினாள் .

தன் கைகளை பிடித்த சமுத்ராவின் கரங்களை அழுந்த பற்றி தன் பிடியுனுள்ளேயே வைத்துக் கொண்டு ராஜபாண்டியுடன் டிரஸ்ட் விபரம் பேசத் தொடங்கினான் யோகன் .

தொடர்ந்து இருவருமாக ஏதேதோ பழைய விசயங்கள் பேசத்துவங்க சமுத்ராவிற்கு போரடித்தது .இதென்ன மிரட்டி திருமணம் முடித்திருக்கிறானா …? என அவ்வளவு சரியாக கேட்டு விட்டு இப்போது என் நினைவே  இல்லாது இருவரும் கொஞ்சிக்கொண்டிருக்கின்றனரே …எரிச்சலுடன் எண்ணியபடி அவ்வளவு தீவிரமான பேச்சிலும் தன் கையை விடாமல் பற்றியிருந்த  யோகனின் பிடியிலிருந்து விடுவித்து கொண்டு  அந த அறையின் அலங்காரங்களை வேடிக்கை பார்க்க துவங்கினாள் சமுத்ரா .
குடத்தில் நீர் வார்க்கும்  அந்த பெண்ணின் ஓவியத்தில் அவள் ஆழ்ந்திருந்த போது 
” ஒரு மணி நேரம் ஆகும் ்போய் விட்டு வந்து விடு …” ஏதோ ஒரு வேலைக்காக  யோகனை அனுப்பிக் கொண்டிருந்தார் ராஜபாண்டி .

அவன் எழவும் கூடவே எழுந்த சமுத்ராவை ” நீ உட்காரம்மா .இன்று மதிய உணவை என்னோடு சாப்பிடு . உன் கணவன் அந்த வேலையை முடித்து விட்டு வரட்டும் ” என்றார் .

தயங்கி நின்ற யோகனை ” நீ போயேன்டா …என் பொண்ணை நான் பார்த்துக்கிறேன் ” என விரட்டினார் .

மனமில்லாமல் மனைவியை பார்த்தபடி வெளியேறினான் யோகன் .

” என்னம்மா என் பையனுக்கு என்ன சொக்குபொடி போட்டாய் .?அவன் ஒரு மாதிரி கிறங்கினாற் போலவே திரியிறானே …?”

திகைத்தாள் சமுதரா .இவனை நான் என்ன செய்தேன் .அவனல்லவா …விதம் விதமாய் என்னை இம்சித்து கொண்டிருக்கிறான் ..? என்றெண்ணியபடி புன்னகைத்து வைத்தாள் .

அவள் கண்களுக்குள் கூர்ந்து பார்த்து ராஜபாண்டி ” உங்களுக்குள் என்ன பிரச்சனை ?” என்றார் .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!