kadak katru Serial Stories

Kadal Kaatru – 30

( 30 )

முதல் நாள் அதிகாலை எதிர்பாராமல் ஏற்று விட நேர்ந்த புது உறவினால் ஏற்பட்ட உடல் அயர்வுடன் ,இப்படி நடந்துவிட்டதே எனும் மன அயர்வும் இணைந்து கொள்ள ஆழ்ந்த தூக்கமின்றி அரைகுறை புரளலுடன் படுக்கையில் இருந்தாள் சமுத்ரா .

அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது .யோகன் தோப்பு வீட்டிலிருந்து வருவானாக இருக்கும் .மனதில் எண்ணியபடி விழி திறக்காமல் அரை உறக்கத்திலிருந்தாள் சமுத்ரா .கட்டில் கிடந்த இடமும் , சோபா கிடக்கும் இடமும் வேறு வேறு அறைகளாயினும் ,இரண்டு அறைகளையும் பிரிக்க கதவு கிடையாது .வாசலில் திரை மட்டுமே உண்டு .

முதலில் இந்த ஏற்பாடு சமுத்ராவிற்கு அதிருப்தியை கொடுத்தாலும் ,அதிகாலை வீடு திரும்பும் யோகன் பெரும்பாலும் உறங்குவதில்லை .அந்த சோபாவில் அமர்ந்து அவனது  லேப்டாப்பில் வேலை பார்த்தபடியிருப்பான் .அல்லது அப்படியே சோபாவில் சாய்ந்து ஒரு குட்டித் தூக்கம் போடுவான் .இந்த நிலை இரண்டு நாட்களிலேயே சமுத்ராவிற்கு பழகிவிட , திரையை அடுத்து யோகன் இருந்தாலும் இங்கே கட்டிலில் தூங்க பழகிக்கொண்டாள் .

இன்றும் அப்படியே எண்ணி கண்களை திறக்காமல் இருந்தவள் சிறிது நேரத்திலேயே பலமான பாறைகளின் நடுவே மாட்டிக் கொண்ட உணர்வினை அடைந்தாள் .தன்னிச்சையாய் உதற முனைந்தவளால் இம்மி கூட அசைய முடியவில்லை .

விழத்்த விழிகளில் பட்டது யோகனின் வெற்று மார்பே .கைகளால் தள்ள முடியாமல் கைகள் முன்பே சிறை செய்யப்பட்டிருந்தன. விடுங்கள் என்று திணறியபடி வந்து விழுந்த சொற்கள் இதழ்களால் உறிஞ்சப்பட்டன.

” இல்லை முத்ரா ,என்னை தவிர்க்காதே …” சிறு கெஞ்சலுடன் கூடிய கொஞ்சலுடன் அவளிள் மூழ்கினான் யோகன் .

தோல்வி …மீண்டும் தோல்வி …துயரத்துடன் தலையணையில் முகத்தை அழுத்திக் கொண்டாள் .குற்றவுணர்வு சிறிதுமின்றி குளியலறையிலிருந்து வெளிவந்த யோகன் மெல்லிய விசிலுடன் நிலைக் கண்ணாடியின் மேலிருந்த விளக்கை போட்டுக் கொண்டு சீப்பினால் தலை வார துவல்கினான் .

” நீ மனுசனா ..? மிருகமா …?” சமுத்ரா கத்தினாள் .

” உனக்கு எப்படி தோணுதோ ..அது …” அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான் யோகன்

” கேட்க ஆளில்லையென்றுதானே இப்படி ஆட்டம் போடுகிறாய் …? நாளையே என் அண்ணனுக்கு போன் போட்டு வரச் சொல்கிறேன் .அவர் மிலிட்டரி மேன் தெரியுமா ? உன்னை உண்டு இல்லையென ஆக்கி விடுவார் …”

சொல்லும்போதே இவன் அன்று ஒரு அரைமணி நேரம் பேசியதிலேயே அண்ணனை அவனுக்கு தலையாட்ட வைத்து விட்டது நினைவுக்கு வந்த்து .

” இன்னும் போன் போடவில்லை ?” கண்ணாடி வழி பார்த்து கேட்டான் .

ஆமாம் ஏன் அப்போதே  நான் அண்ணனுக்கு போன் போடவில்லை …? எனக்கு நடந்த அநியாயத்தை அவரிடம் கூறியிருக்க வேண்டாமா ..? குழம்பினாள் சமுத்ரா .

” நீ எல்லா பெண்களிடமும் இப்படித்தான் நடந்து கொள்வாயா ..? ” அன்று ஹோட்டலில் அந்த கால்கேர்ளிடம் யோகன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை நினைத்து கேட்டாள் .

” பணத்திற்காக வருபவளெல்லாம் உனக்கு சரியாக போய்விட்டாளா …? ”  சீப்பை போட்டுவிட்டு கைகளை உயரத்தூக்கி சோம்பல் முறித்தான் .

” சரி அவளை விடு ,லாவண்யாவை என்ன செய்தாய் ? இது போலத்தான் அவளை கொடுமை படுதிதினாயா …? “

” எந்த லாவண்யா …? ” நிதானமாக டிரஸ்ஸிங் டேபிளில் சாய்ந்தபடி நின்று அவன் கேட்க சமுத்ராவினுள் எரிமலை வெடித்தது .

வேகத்துடன் கட்டிலை விட்டு எழுந்தவள் ” ராட்ச்சா…அரக்கா …அசுரா ..்” என கத்தியபடி அவன் வெற்று மார்பில் கைகளால் குத்த தொடங்கினாள் .

குறும்பு செய்யும் குழந்தையை ரசிக்கும் அன்னையின் பாவனை யோகனிடம் .ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பார்வை மாறி காதல் சொட்டத் துவங்கியது அவன் பார்வையில் .

வலிய மார்புகளில் மோதிய மென்கரங்கள் வலியெடுக்கவே தனது தாக்குதலை நிறுத்தி கைகளை உதறிக் கொண்ட சமுத்ரா யோகனின் அந்த தாக  பார்வையை கண்டதும் கோபமானாள் .

” நிச்சயம் லாவண்யாவை உன்னிடமிருந்து நான் மீட்டே தீருவேன் …” அறிவித்தாள் .

” ஓ.கே கண்ணம்மா …” யோகனின் கரங்கள் மோகத்துடன் அவள் கன்னங்களை வருடின.

அவன் கைகளை தள்ளியபடி ” அப்படி அவளை கண்டுபிடிக்கின்ற போது அவளை அழைத்துக் கொண்டு நானும் இங்கிருந்து சென்று விடுவேன் ..”

யோகன் பதிலின்றி அவள் கண்களுக்குள் உறுத்தான் .

ஆஹா ..விழிக்கிறான் ….ஒருவித சந்தோசத்துடன் தன் கழுத்திலிருந்த தாலி சங்கிலியை தூக்கி காட்டினாள. சமுத்ரா .

” இதைக் காட்டி நீ என்னை இங்கே நிறுத்த முடியாது .நான் இங்கே வந்த்தே லாவண்யாவை அழைத்து செல்லத்தான் .அது நடந்த்தும் நிச்சயம் அவளுடன் வெளியேறி விடுவேன் .எனக்கு தாலி சென்ட்டுமென்ட்டெல்லாம் கிடையாது …” உறுதியாக அறிவித்தாள் .

ஓசையின்றி மென்மையாக கைகளை தட்டினான் யோகன் .” ம் …புதுமைப்பெண் …வெரிகுட் கண்ணே ..நம் நாட்டில் பெண்களின் இன்றைய நிலைக்கு உன்னைப் போன ற பெண்கள் மிக அவசியம் .அப்படியே செய் .ஆனால் அதற்கு இன்னும்  நாள் இருக்கிறதல்லவா ..? அதுவரை இந்த தாலியை சுமந்தபடி நீ அதற்கு கடமையாற்றத்தான் வேண்டும் “

அவள் எதிர்பாராத கணத்தில் அவளை பூங்கொத்தாய் கைகளில் அள்ளியபடி கட்டிலை அடைந்தான் .

” என் செல்ல புதுமைப்பெண்ணே …எப்படியடி இப்படி விதம் விதமாய் யோசிக்கிறாய் …ம் ….? ” கொஞ்சலுடன் கூடிய அவனது வேக அணைப்பை  எப்போதும் போல் இப்போதும் சமுத்ராவினால் தடுக்க முடியவில்லை .

திடீரென்று இடையில் வந்துவிட்ட அந்த இருசக்கர வாகனத்திற்காக் ப்ரேக்கை யோகன் அழுத்த நிலைகுலைந்து துள்ளி அவன் மேல் சரிந்தாள் சமுத்ரா .முன்தின நினைவை விட்டு வெளியே வந்தவள்  , அவளை  தழுவியபடி தள்ளி அமர வைத்த யோகனை முறைத்தாள் .

” ஐய்யோ ..நானில்லம்மா …நீயாகத்தான் என் மேல் வந்து விழுந்தாய் …நான் கூட உன்னை பிடித்து தள்ளிக் கொண்டுதான் இருந்தேன் ”  என்றான் பயந்தாற் போல் பாவனையுடன் .

ஆஹா..இவன் தள்ளிய லட்சணத்தை பார்த்துவிட்டால் …?எப்படி ஒரு மனிதனால் தன்னை கடிந்தபடியே இருக்கும் ஒரு பெண்ணிடம் இவ்வளவு காதலை காட்ட முடியும் …? கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களை கூட வீணாக்காமல் .இது சமுத்ராவிற்கு கொஞ்சமும் புரியவில்லை .

” எங்கே போகிறீர்கள் ..?” கார் போகும் திசையை பார்த்து கேட்டாள் .

” நாளை இங்கே  கொஞ்சம் வேலை இருக்கிறது சமுத்ரா .இரவு இங்கே தங்கிவிடுவோம் .”

அப்போ  தோப்புவீடு …???

” சாவித்திரியிடம் நான் பேசிக்கொள்கிறேன் ” அவள் மனஓட்்டத்திற்கு இவன் பதிலளித்தான் .

மனதில் நினைத்தோமா …?வெளியே சொல்லி விட்டோமா …?குழப்பத்துடன் அவனை பார்த்த போது அவன் தீவிர சிந்தனையுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்தான் .

சமுத்ராவிற்குமே கருணாமூர்த்தியையும் ,செண்பகத்தையும் சென்று பார்க்கும் எண்ணம் இருந்த்து .அவர்களை யோகனுக்கு பிடிக்காது .என்ன சொல்வானோ ..? சிறு கலக்கம் வந்த விநாடியே என்னமும் நினைக்கட்டும் .இவன் நினைவெல்லாம் என்னைக் கட்டுப்படுத்த முடியாது .தைரியமாக தலையை நிமிர்த்துக் கொண்டாள் .

” என்ன …? ” என்றான் பாதையை பார்த்தபடி .இதையும் பார்த்து தொலைந்தானா ..?மனதிற்குள் சலித்தபடி ” நாளை என்ன வேலை …? ” பேச்சை மாற்றினாள் ்

” நீ சொன்ன ஐடியாதான் சமுத்ரா .நம் ஊர் பிள்ளைகளின் படிப்பிற்காக ஒரு டிரஸ்ட் போல் ஆரம்பிக்கலாமென்று சொன்னாயே .அதற்காகத்தான் ஒரு பெரிய மனிதரை சந்திக்க போகிறேன் .நீயும் உடன் வரவேண்டும் “

அனைத்து பிள்ளைகளையும் நம்மால் எப்படி படிக்க வைக்க முடியும் ..?என்ற யோகனுக்கு இந்த யோசனையை சொன்னதே சமுத்ராதான் .எனவே ” வருகிறேன் ” என தலையாட்டினாள் .

” மேகலை என் நண்பரின் மகள் சமுத்ரா .நண்பரென்றால் ஒத்த வயதில்லை .என்னை விட வயதில் மூத்தவர் .அப்பா இரண்டாவது திருமணம் செய்த்து பிடிக்காமல் நான் சென்னைக்கு போய் அங்கே பலவித துன்பங்கள் பட்டுக் கொண்டிருந்த போது இவரை சந்தித்தேன் .என் மகன் போல என அவர் வீட்டிற்கு  அழைத்து சென்று அண்ணனுக்கு சாப்பாடு போடும்மா என ஒரு சிறுமியிடம் கூறினார் ..”

யோகன் மேகலை பற்றிய நினைஙுகளில் இருக்காறான் என புரிந்து கொண்ட சமுத்ராவிற்கு அவன் இவ்வாறு தன் மனதின் எண்ணங்களை வெளிப்படையாக தன்னிடம் பேசுவது ஆச்சரியமாக இருந்த்து .

” அது…மேகலையா …?” ஊகித்து கேட்டாள் .

” ம் …” என தலையாட்டியவன் அந்த நடுராத்திரியில் திடீரென வந்தவனுக்கு முகம் சுளிக்காமல் சூடாக சமைத்து பரிமாறினாள் அந்த சிறுபெண் .மேகலையின் அம்மா அவள் பிறந்த போதே இறந்துவிட்டார்கள் .அன்பரசு அதுதான் மேகலையின் அப்பா …அவளுக்கு அன்னையாகவும் மாறி அவளை அருமையாக  வளர்த்து வந்தார் .இரண்டே பேர் கொண்ட அந்த சிறிய குடும்பத்தில் மூன்றாவது ஆளாக என்னையும் எளிதாக சேர்த்துக் கொண்டார்கள் அண்ணா …அண்ணா என்ற இனிய அழைப்பு வேறு .”

” மறுநாள் என்னை அன்பரசு அவர் வேலை பார்த்த முதலாளியிடமே அழைத்துச் சென்று வேலையில் சேர்த்து விட்டார் .அவர்தான் ராஜபாண்டி .நாளை நாம் பார்க்க போவதாக சொன்னேனே அவர்தான் .”

” யார் …..ராஜ் குரூப்ஸ் ஆப் கம்பெனி ஓனரா ..?” ஆச்சரியமாக கேட்டாள் சமுத்ரா .அவர் மிகப்பெரிய தொழிலதிபர் .சமுத்ரா வேலை செய்த பத்திரிக்கைக்காக அவருடைய பேட்டி கிடைக்க ரங்கநாயகி என்னென்னவோ செய்து பார்த்தாள் .ம்ஹூம் நடக்கவேயில்லை .அவ்வளவு பெரிய மனிதர் ்மிகவும் பிஸியானவர் .

” அவரை யா …நாளை சந்திக்க போகிறோம் …?அப்பாயின்ட்மென்ட் எப்போது வாங்கினீர்கள் …?”

” இன்று காலைதான்  அவருடன் போனில் பேசினேன் .நாளை காலை வரச்சொன்னார் “

சமுத்ராவிற்கு ஆச்சரியம் தீரவில்லை .அவ்வளவு பெரிய மனிதர் .எந்நேரமும் பல நாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பவர் அவரை இவ்வளவு எளிதாக சந்திக்க இவனால் முடியுமா …? நம்பமுடியாமல் அவனை நோக்கினாள் .

” என் வாழ்வை சீராக்கியதில் பெரும்பங்கு ராஜபாண்டி சாருக்கும் , அன்பரசுவுக்கும் உண்டு சமுத்ரா .எனக்கு வேலை தந்த்தோடு என் விருப்பம் அறிந்து என்னை படிக்கவும் வைத்தது அவர்தான் “

” நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ..?” இது உனக்கு தேவையில்லாத்து ., என்ற உள்குரலை மதிக்காது கேட்டாள் சமுத்ரா .

” உனக்கு தெரியாதா …?” ஆச்சரியமாய் கேட்டான் .

” உங்கள் அப்பாவும் , அம்மாவும் நம் திருமணம் பேச எங்கள் வீட்டிற்கு வந்த போது அந்த விபரம் எதுவும் கூறவில்லையே …” எரிச்சலாய் கூறினாள் .

தலையை பின்சாய்த்து கடகடவென சிரித்தான் .” சாரி கண்மணி அதென்னவோ நம் வித்தியாச திருமணத்தை மிக மிக கடினப்பட்டுத்தான் எனக்கு நினைவுறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது .” வலது கையால் கார் ் ஸ்டியரிங்கை பிடித்தபடி இடது கரத்தால் சமுத்ராவின் தோள்களை சுற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான் .

” ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க ” தோள்கள சுற்றிய அவன் கரங்களை தள்ள முயன்றாள் .

” அது போல் வீட்டு பெரியவர்கள் பார்த்து நிச்சயித்து நம் திருமணம் நடந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமில்லையா செல்லம்…? ” குழைவான குரலில் கேட்டான் .

ஆமாம் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் .என்று நினைத்துவிட்டு உள்ளூற  தன் தலையில் தானே வலிக்க ஒரு கொட்டு வைத துக் கொண்டாள் சமுத்ரா .

தோள்களை சுற்றியிருந்த அவன் கைகளைபிரித்து விட்டபடி ” படிப்பை கேட்டால் ஏன் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் ? எந்த நிலையில் என் முன் வந்த போதும் உங்களை நான் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் ”  என்றாள் .

” அப்படியா …? நான் வேண்டுமானால் மச்சானிடம் பேசிப் பார்க்கட்டுமா …? “

யார் ….மச்சான் …? என சிறிது குழம்பி விட்டு அவன் தன் அண்ணனை குறிப்பிடுகிறான என உணர்ந்த்தும் சமுத்ராவின் வாய் தானாக ” வேண்டாம் .்வேண்டாம் …” என்றது .

அவள் அன்று காலை இங்கே கிளம்பி வருவதற்கு சற்று நேரம் முன்புதான் மலையரசனிடம் பேசியிருந்தாள் . அவள் அண்ணனை பொறுத்தவரை அவன் மனதில் யோகேஷ்வரன் எனும் மனிதன் முருகன்  , ஏசு , அல்லா இவர்களுக்கு அடுத்த படியிலும் …நேரு , காந்தி , காமராஜர் இவர்களுக்கு முந்தின படியிலும் இருந்தான் .

சமுத்ரா ஏதாவது யோகனை  குறைத்து கூறினால் நீ என் தங்கைதானா ..? என அவன் சந்தேக பார்வை பார்ப்பான் என உறுதியானதால் மாப்பிள்ளை பற்றிய மச்சானின் புராணங்களை காது வலிக்க வலிக்க கேட்டுவிட்டு போனை வைத்திருந்தாள்.

” எப்படித்தான் இப்படி எல்லோரையும் வசியப்படுத்த முடிகிறதோ …?” உதடுகளை மட்டும் அசைத்து முணுமுணுத்த சமுத்ராவின் நினைவில் மலையரசனுடன் …சாவித்திரி, அந்த கால்கேர்ள் …என சிலர் .

” உன் விசயத்தில்தான் அது எனக்கு சிறிது கடினமாக இருக்கிறது கண்ணம்மா …” யோகன் அவளை நெருக்கியபடி அவள் சீட்டிலேயே அமர்ந்திருந்தான் .

” எது கடினம் ..? இங்கே ஏன் வந்தீர்கள் ..? கார் ஏன் நிற்கிறது …? ” யோகனுக்கும் கார் கதவுக்குமிடையே நசுங்கியபடி அவனை தள்ள முயன்றாள் .

” இவ்வளவு பக்கத்தில் பொண்டாட்டி அருகில் எதற்கு வருவார்கள் .ம் ….? ” யோகன் முரட்டுத்தனமாக அவளைப் பற்றி முத்தமிட்டான் .

இரண்டே நிமிடங்கள்தான் … சட்டென காரினை திறந்து கீழே இறங்கிவிட்டான் .அவன் செலவழித்த இரண்டு நிமிடத்திலிருந்து மீண்டு வர சமுத்ராவிற்கு பத்துநிமிடம் தேவைப்பட்டது .

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் வெளிவந்த போது , கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த்து .

யோகன் ரிசப்சனில் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டபடி நின்றான் .ரூம் சாவியோடு வந்த ஓட்டல் பணியாளிடம் சாவியை தான் வாங்கிக் கொண்டு , ” நீங்கள் என் கார் பார்க்கிங்கில் பூட்டாமல் இருக்கிறது .போய் பூட்டிவிட்டு வாருங்கள் ” என சாவியை கொடுத்துவிட்டு ” வாம்மா ” என நடந்தான் .

இவனுக்கு எதனாலும் எந்த பாதிப்பும் வராது போல .அதுசரி இதுபோல் எத்தனை அனுபவங்களை பார்த்திருப்பான் கசப்புடன் நினைத்தபடி அநிச்சையாய் தன் இதழ்களை துடைத்துக் கொண்டாள் சமுத்ரா.

இரவு பால்கனியில் நின்றபடி அவன் ” அட இன்னைக்கு ஒருநாள் அட்ஜஸ் பண்ணிக்கோங்க குட்டிம்மா .நான் நாளைக்கு வந்திடுவேன் ..” என கொஞ்சிக்கொண்டிருக்க சமுத்ராவிற்கு உடலெல்லாம் எரிந்த்து .

நான் கண்ணம்மா , கண்மணி …அந்த அவள் குட்டிம்மாவா …?இவனால் எப்படி இப்படியெல்லாம் வேசம் போட முடிகிறது .

” ம்…சரி சாக்லேட் கேக் , ஐஸ்க்ரீம் கேக் …அப்பறம் இன்னும் என்னெல்லாம்  வேணும் என் குட்டிம்மாவிற்கு …?” கொஞ்சல தொடர , அதோ அந்த ப்ளவர்வாஸ் வைத்திருக்கும் இரும்பு ஸ்டாண்டினை எடுத்து இவன் தலைமேல் ஒன்று போடுவோமா …? என யோசித்து விட்டு , சை பாவம்  வேண்டாம் என முடிவும் செய்து விட்டு தான் மறைந்திருந்து் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த திரை மறைவினை விட்டு வெளியேறிய சமுத்ராவின் காதுகளில் ” இந்த கன்னத்திலும் ஒரு உம்மா கொடுங்க …” என்ற கொஞ்சல் விழுந்து சிறிது குழப்பியது .

இவன் …யாரிடம் பேசுகிறான்…? ஒரு வேளை குழந்தையிடமோ…? சிறியதாய் ஆரம்பித்த சந்தேகம் ” நீங்க மம்மம் சாப்பிட்டு சமத்தாய் படுக்கனும் ” என்ற அவனது தொடர் கொஞ்சல்களில் உறுதியானது .

ஏனோ சமுத்ராவிற்கு மனம் மிக அமைதியாக இருந்த்து .டிவி போட்டுக் கொண்டாள் . நல்ல பாட்டாக தேடிப்பிடித்து வைத்துக் கொண்டு  ரசிக்க தொடங்கினாள் .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!