kadak katru Serial Stories

Kadal Kaatru – 25

                                             ( 25 )

” மீன் பிடிக்கிறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுட்டு வர்றோம் தாயி .மீனும் கிடைக்கிறதுல்ல, கிடச்சாலும் அதுல மிச்சமும் இல்ல .இப்போல்லாம் அதிகமாக புழுதான் புடிக்கிறோம் …” என்றாள் அந்த மீனவ பெண் .

” அது என்னம்மா …புழு பிடிக்கிற வேலை …?” சமுத்ரா கேட்டாள் .

” மண்புழுங்கம்மா …” பதில் சொன்னவள் இருளாயி .அவள் இப்போதுதான் சற்று உடல்நலம் தேறியிருந்தாள் .இன்று சமுத்ராவின் திருமணத்தை பார்த்தே தீர வேண்டுமென ஒடி வந்து விட்டதாக காலையிலேயே கூறியிருந்தாள் .

காலை திருமணம் முடித்து போன புதுப்பெண் மதிய நேரம் சுடிதாருடன் மணப்பெண்ணிற்கான சுவடேதுமின்றி வருவதைக் கண்டதும் வேகமாக வந்து அவளுடன் இணைந்து கொண்டாள் .

” என்னங்கம்மா அதற்குள் வந்துவிட்டீர்கள் ? “

” எதற்குள் …?” எரிச்சலாக வினவினாள் சமுத்ரா .

” இல்லை காலையில் தான் உங்களுக்கு கல்யாணம் முடிந்த்து .அதுக்குள்ள வெளியே வந்திருக்கீங்கன்னுதான் ….” தயங்கி நிறுத்தினாள் .

” ஏ புள்ள நம்ம ஐயாவுக்கு ஏத்த பொண்ணு இந்த அம்மாங்கிறதுக்கு இத விட என்ன ஆதாரம் வேணும் புள்ள …?” பொக்கை வாய் திறந்தபடி இருளாயியிடம் சிரித்தாள் அந்த பாட்டி .

இதில் இப்போது  இவர்கள் ஐயா எங்கே வந்து குதித்தாராம் ? எரிச்சலோடு அந்த பாட்டியை நோக்கினாள் .

” ஐயாவும் இப்படித்தானுங்கம்மா ,தாலி கட்டுன கையோட வேலைக்கு வெளியே வந்திட்டரு .இப்போ அந்த குப்பத்து கரங்க கூட பஞ்சாயத்து பேசிட்டு இருக்காரு ” விபரம் சென்னாள் இருளாயி .

உங்க ஐயா பண ணுன கொடுமைக்கு  பஞ்சாயத்து பேசவே  ஒரு ஊரையே கூட்டிட்டு வரணும் .இதில் அவர் யாருக்கு பஞ்சாயத்து பேசுகிறார் ?என்றெண்ணியபடி அவளிடமே விபரம் கேட்டாள் .

அதான்மா மீன் பிடிக்கிற் விசயத்துல இந்த குப்பத்து காரங்களுக்கிடையே ஒரே சண்டைம்மா .அந்த பஞ்சாயத்துதான் நடக்குது .இன்னும் ஒரு முடிவு வந்த மாதிரி தெரியல ” என்றாள் .

” சரி நீ ஏன் என் பின்னாடியே வந்துட்டு இருக்கிறாய் ? போய் ஓய்வெடுக்கலாமில்ல ..?”

” இதெல்லாம் வேணுங்கற அளவு எடுத்நுட்டேன்மா .இந்த வெயில்ல நீங்க கிடக்குறீங்க ? எனக்கென்ன ..? “

இவளிடம் பேசி பிரயோஜனமில்லை .கிட்டதட்ட செத்து பிழைத்திருக்கறாள் .அந்த கவலை கொஞ்சமாவது இவளுக்கு இருக்கிறதா பார் என எண்ணியபடி ” சரி அப்படி நிழல் பார்த்து ஓரமாகவாவது இரு ” என்று விட்டு தன் விசாரணையை தொடர்ந்தாள் .

” மண்புழுக்களை எதற்காக சேகரிக்கிறீர்கள் …?”

” அது விரால் மீன்களுக்கு நல்ல உணவாகும்மா .அதனால் அதற்கு நல்ல விலை கொடுத்து வாங்க நிறைய பேர் தயாராக இருக்கின்றனர் .அதனால் நாங்கள் அதனை தோண்டி எடுக்கிறோம் “

” தோண்டி என்றால் …எங்கே …? எப்படி …?”

” இதோ இந்த ஏரியை பாருங்க .ஒரு காலத்தில் கடல் போல் இருந்த்து .இப்போது மேடாகி , தண்ணீர் வற்றி பரிதாபமாக இருக்கிறது .இந்த மண்ணில் தோண்டினால் நிறைய புழுக்கள் கிடைக்கும் .அதைத்தான் சேமித்து விற்கிறோம் “

” அதனை யார் வாங்கிக் கொண்டு செல்கிறார.கள் ..?”

” அது தெரியாதும்மா .ஒரு வருசத்துக்கு முன்னாடி வரை யார்யாரோ வந்து ரொம்ப தரை மட்டமா வில  பேசி வாங்கிட்டு போனாங்க .அப்புறம் நம்ம ஐயாதான் அதை கொஞ்சம் ஒழுங்கு பண்ணி கொஞ்ச பேரை அதுக்காக ஏற்பாடு பண்ணி நிறைய காசு வரும்படி செய்தார் .ஏதோ அவர் புண்ணியத்தில் எங்க பாடு ஓடுது ..”




ஓ…அப்போ இங்கேயும் இந்த ஜனங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கிறான் யோகன் .இவர்களிடம் அவன் காட்டும் முகம் வேறு .என்னிடம் காட்டும் முகம் வேறு .எது உண்மையாக இருக்க கூடும் .யோசித்நபடி இவர்கள் கருத்துக்களை குறித்துக் கொண்டாள் .

வற்றிப் போய் குண்டும் , குழியுமாக ஆங்காங்கே குழிகளில் தேங்கியிருந்த சொற்ப நீருமாக  பரிதாபமாக காட்சியளித்தது அந்த ஏரி .அதில் சிறு வலைகளையும் , துணிகளையும் வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கண்ணில் பட்டனர் .

” நீங்கள் என்ன செய்கிறீர்கள் …?” அவர்களருகே சென்று கேட்டாள் .

” மீன் பிடிக்கிறோம்மா …”

” இங்கேயா …? ஏன் …?”

” என்னம்மா செய்ய கடலில் மீன்பிடிக்க போக முடியலை .ஆயிரம் பிரச்சினைகள் அதில் வருது .அதுவும் இது மீன்பிடி தடைக்காலம் வேற .அதனால் இந்த குட்டையில் கிடைக்கிற மீன்களை பிடித்து சில்லறைக்கு விற்று வயிற்றுப் பாட்டினை ஓட்டுகிறோம் .”

” இதில் அவ்வளவு மீன் கிடைக்குமா …?” ஆச்சரியமாக கேட்டாள் சமுத்ரா .

” இந்த ஏரியில வெள்ளை, கோட்ரால், செமக்கை, வழிம்பு, பூச்சி இந்த மாதிரி இறால் வகை கிடைக்குங்கம்மா .அப்புறம் நண்டுல  பச்சை கட்டு நண்டு,கோரக்கை கால் நண்டு, முக்கன் நண்டு கிடைக்கும் .
வெள்ளை இறாவுக்கும் , பச்சைகட்டு 
நண்டு களுக்கும்  அதிக விலையும் இருந்ததும்மா. 
ஏரி மண் மேடாகி போனதால், இப்போ வெள்ளை இறாலும்,  முக்கன் நண்டும் கொஞ்சமா கிடைக்குது . நாங்களும் அதை பிடித்து காலத்தை தள்ளுறோம் “

அனைத்து விபரங்களையும் கவனமாக குறித்துக கொண்டாள் சமுத்ரா .இந்த எளிய மக்களின் போராட்ட வாழவு மனதை பிசைந்த்து .

இந்த பெண்களுக்கு இன்னும் சில வேலை வாய்ப்புகளை அளிக்கலாமே …என சில வேலைகளை யோசிக்க தொடங்கியது அவள் மனம் .

” டேய் தாமசு …என்னலே இங்க திரியுற …அங்க பேச்சு வார்த்தை என்ன நிலமைல இருக்கும் ” யாரிடமோ சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தாள் இருளாயி .

” போக்கா அது ஒண்ணும் முடிவாகிற மாதிரி தெரியலை .பேச்சு கூடிட்டே போய் இப்ப கை கலப்பாயிடும் போல .நான் ஓடி வந்துட்டேன் ” என்றான் அந்த ஆள் .

சமுத்ராவிற்கு திக்கென்றது .கை கலப்பா …?

” அடச்சீ …நீயெல்லாம் ஒரு ஆம்பளை …இப்படித்தான் சண்டைன்னா ஓடி வருவியா ? ” அவனை வைது கொண்டிருந்த இருளாயி முன் போய் நின்றாள் சமுத்ரா .

” பேச்சு வார்த்தை எங்கே நடக்கும் இருளாயி ? “

” கோவில்லதாங்கம்மா …நீங்க ஏன்மா பயப்படுறீங்க ..?இது எப்பவும் நடப்பதுதான் .நம்ம ஐயாவும் ரொம்ப நாள் இத சமாதானம் பண்ணி வச்சிடனும்னு தவிக்கிறாரு …எங்கே …?” நிதானமாக உட்கார்ந்து நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள் .

,” நீ வா ..எனக்கு அந்த கோவிலை காட்டு …” நடக்க துவங்கினாள் .

உடன் நடந்தபடி ” பயப்படாதிங்கம்மா ..நம்ம ஐயா எல்லாத்தையும் பார்த்நுக்கிடுவாரு ….” என்றாள் .

அந்த கோவில் மண்டபத்தில் யோகனை பார்க்கும் வரை சமுத்ராவின் உடலில் ஒரு மெல்லிய படபடப்பு இருந்து கொண்டேயிருந்த்து .அங்கே கூட்டமாக பலர் அமர்ந்நு கொண்டு ஒருவரோடு ஒருவர் பலமான வாக்குவாத்த்தில் இருந்தனர் .

முன்னால் நாற்காலியில் அமர்ந்திருந்தார் அந்த பெரியவர் .அவருக்கு எதிராக மற்றொரு நாற்காலியில் யோகேஷ்வரன். இருவருக்குமிடையே நின்றபடி கைகளை ஆட்டியபடி கன்னா பின்னாவென பேசிக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன் .

மிகவும் இறுக்கமாக இருந்த்து யோகனது முகம் .அந்த இறுக்கத்தோடு அந்த ஆர்ப்பாட்ட இளைஞனுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதிலளித்துக் கொண்டிருந்தான் அவன் .உணர்ச்சி தொலைத து பாறையாக இருந்த முகம் இவளை கண்டதும் மெல்ல மாறியது .சிறு எச்சரிக்கை தெரிந்த்து .

ஏனோ அந்த சூழ்நிலையில் ஒரு அபஸ்வரம் தென்பட வேகமாக அவனருகில் சென்று நின்றாள் .” இப்போது இங்கே ஏன் வந்தாய் ? ” குரலை குறைத்து இவளிடம் சீறினான் .அந்த சிறு கண் மாற்றம் எதிராளிக்கு போதுமானதாய் இருந்ததோ …?

ஏன் வந்தாலென்ன ? இவனை திருமணம் செய்தால் வீட்டிற்குள் இருந்து காய் கழுவி , குக்கர் வைப்பேனென நினைத்தானோ ? அப்படி இருக்க மாட்டேனென முன்பே சொல்லியிருந்தேனே …இந்த செய்தியை கூறும் பாவனையோடு அவள் அவனை அலட்சிய பார்வை பார்க்க ,அவன் பார்வையோ , அவள் பின்னால் சென்றது .

திடீரென அவள் தோள்களை பற்றி தன் பக்கம் இழுத்தவன்  ,இடது கையால் அவளை  தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு , வலது கையால் எதிரிலிருந்தவன் முகத்தில் குத்தியிருந்தான் .

இரண்டு பற்கள் தெறித்து விழ ரத்தம் கொப்பளிக்க அவன் கத்திக் கொண்டிருந்தான் .கவனிக்கவில்லையென நினைத்தாயாடா …? இப்படி கொஞ்சம் கவனம் சிதறவும் கை நீட்ட பார்க்கிறாயே …? நீயெல்லாம் ஆம்பளையாடா ..? பொட்டை பயலே …?” கத்தியபடி அவன் இடுப்பில் ஓங்கி மிதித்தான் .

யோகன் பக்கத்து ஆட்களெல்லாம் அவன் மேல் பாய தயாராக , ஒரு கையை உயர்த்தி அவர்களை தடுத்தான் .

திடீரென நிகழ்ந்திவிட்ட இந்த நிகழ்வில் நடுங்கிய சமுத்ராவை தன்னுடன் சேர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் ” நானும் காலையிலிருந்து மிகவும் பொறுமையாகவே பேசிவிட்டேன் .இன்று மட்டுமல்ல ஒரு வருடமாக உங்களுடன் பொறுமையாக பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் .ஆனால் நீங்கள் எதற்கும் ஒத்து வருவது போல் தெரியவில்லை .இனி நமக்குள் எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது .போட்ட எல்லையை தாண்டுவது , வலையை அறுப்பது , படகுகளை ரிப்பேராக்குவது ,இந்த வேலைகளையெல்லாம் எங்களாலும் செய்ய முடியும் .இனி நானாக உங்களை தேடி வரமாட்டேன் .பார்க்கலாம் ஜெயிப்பது நீங்கள் ? நாங்களா ? என்று ….” தோரணையுடன் பேசி விட்டு சமுத்ரவை அணைத்தபடியே கூட்டத்தை விட்டு வெளியேறினான் .

” உன்னை யார் இப்படி திடீரென வரச்சொன்னது ? ” காரில் ஏறியதும் எரிந்து விழுந்தான் .




” ஏன் வந்தாலென்ன ? ஏதோ பேச்சு வார்த்தையென இருளாயி சொன்னாள் .என் பத திரிக்கை பேட்டிக்கு உதவக் கூடுமென நினைத்து வந்தேன் .” காரில் டிரைவரை வைத்துக் கொண்டு இந்த கத்து கத்துகிறானே என்றிருந்த்து சமுத்ராவிற்கு.

” அப்துல் நீ செங்கல் சூளையில் போய் இன்றைய லோடு தயாராகி விட்டதா ?என்று பாரு .போ …” டிரைவரை அனுப்பி விட்டு ஸ்டியரிங்கை தான் பிடித்தான் .

” முட்டாள் …!! டிரைவரை வைத்துக் கொண்டு இப்படியா கத்துவாய் ? ” கடிந்தான் .

கத்தியது நீயா …? நானா …? இதனை முணுமுணுப்பாக தனக்குள்ளேதான் சொல்லிக் கொண்டாள் சமுத்ரா .ஏனெனில் முதலில் கத்திவிட்டபோதும் பிறகு தன் தவறை உணர்ந்து விட்டிருந்தாள் அவள் .

” அதற்காகத்தான் உன்னை உடன் அழைத்து வர எண்ணி , கூப்பிட்டு பார்த்தேன் .நீதான் கதவை பூட்டிக் கொண்டு நன்ன்ன்றாக உறங்கி விட்டாயே …?” குத்தல் அவன் குரலில் .

” எனக்கு உண்மையிலேயே நிறைய அலுப்பாக இருந்த்து ” கூறும்போதே ஒரு திருப்தி சமுத்ராவிற்கு .நல்ல வேளை இவன் என்னை வீட்டிற்குள் அடைத்து போட எண்ணவில்லை .

” இப்போது பரவாயில்லையா ..? மதியம் சாப்பிட்டாயா ?என்ன சாப்பிட்டாய் ?” குரல் சற்று கனிந்திருந்த்து .

அவனது எல்லா கேள்விகளுக்கும் ” ம் ..” என பொதுவான பதிலளித்தவள் ” இங்கே என்ன பிரச்சனை ? ” என்றாள் .

” சமுத்ரா இது இரு பிரிவாக பிரிந்து கிடக்கும் இந்த குப்பங்களுக்கிடையேயான பிரச்சனை .இதனை சரிபடுத்த வேண்டுமென நானும் மூன்று ஆண்டுகளாக முயற்சிக்கிறேன் .முடியவில்லை .முன்பு மீன்கள் அதிகமாக கிடைத்துக் கொண்டிருந்த போது இவர்களுக்குள் எந்த மிரச்சினையும் இருக்கவில்லை .ஆனால் மீன்கள் குறைந்த உடன் தங்களுக்குள் சில எல்லைகற் வகுத்துக் கொண்டார்கள் .சில சட்டங்கள் போட்டுக் கொண்டார்கள் .

உடனே தொல்லைகளும் வந்துவிட்டன. இது என் இடம் , இது உன் இடம் .என தகராறுகள் .ஒருவர் வலையை அடுத்தவர் அறுப்பது .ஒருவருக்கொருவர் படகுகளை ஓட்டையாக்கிக் கொள்வது .இப்படி பிரச்சினைகள் வளர்ந்து காண டே செல்கறதே தவிர குறைந்தபாடில்லை .ம் …பார்க்கலாம் “

” அதற்காக இப்படியா பேசிக்கொண்டிருக்கும் போதே கை நீட்டுவார்கள .? முகம் சுளித்தாள் சமுத்ரா .

” இன்று பேச வரும்போதே இப்படி தகராறு பண்ண வேண்டுமென்ற எண்ணத்திலேயேதான் வந்திருக்கின்றனர் என எனக்கு சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது .அதனாலேயே பேச்சு வார்த்தையை வளர்த்துக் கொண்டிருந்தேன் .நல்லவேளை உன்னைஅழைத்து வரவில்லை என அப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் .பார்த்தால் நீ ஜங்கென்று வந்து நிற்கிறாய் .ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்யவென் று தெரியவில்லை .”

அவனது “ஜங்கென்ற ” வார்த்தை பிரயோகம் அவளுக்கு சிரிப்்பை வரவழைக்க முறுவலில் மலர்ந்த்து கன்னம் .

” என்ன …? ” என்றபடி சாலையில் ஒரு கண்ணும் , அவள் கன்னங்களை தீண்டிய மறு கண்ணுமாக கேட்டான் அவன் .

” ஜங்கென்று …” அவனைப் போன்றே சொல்லிக் காட்டி புன்னகைத்தாள் அவள் .ஒரு நிமிடம் பதிலே இல்லை அவனிடம் .

பின் ” ஆமாம் முத்ரா நீ ஜங்கென்று திடீரென்றுதான் வந்து குதித்து விட்டாய் என் வாழ்க்கையில் மயக்கும் மாய மோகினி போல் . ” என்றான் குரல் குழைந்து கொஞ்சியது .

திடீரென மூச்சடைத்தாற் போல் தோன்ற  பார்வையை பக்கவாட்டிற்கு மாற்றிக் கொண்டு ” இனி இவர்கள் பிரச்சனை என்னவாகும் ? ” என்றாள் .

” ம் …இன்று நான் உன்னை பார்க்க திரும்பிய அந்த சிறு கவனப்பிசகை அவன் பயன்படுத்திக் கொண்டு என்னை அடிக்க கட்டையை ஓங்கினான் .இடையில் நீயல்லவா நின்று கொண்டிருந்தாய் .?உன் மீது பட்டுவிட்டால் , அதனால்தான் உன்னை வேகமாக இழுத்துக் கொண்டு அவனை அடித்து தள்ளினேன் .இந்த கைகலப்பு நடக்காமலிருந்தால் ஒரு வேளை இந்த பிரச்சனையை பேசித் தீர்த்நிருந்திருக்கலாமோ என்னவோ …? ” பெருமூச்சு விட்டான் .

ஆக இவன் காலையிலிருந்து அவ்வளவு பொறுமையாக பேசிக் கொண்டிருந்த விசயத்தை என்னால்தான் இடையில் மாற்றி விட வேண்டி விட்டதென்று கூறுகிறானா ..?ஆனால் அப்படி ஏன் உடனடியாக பொறுமையிழந்தான் .புரியாமலேயே குழம்பினாள் .

வீட்டிற்கு இருவருமாக திரும்புகையில் இருட்டத் துவங்கி விட்டது .

” சாப்பிட்டு விடலாம் சமுத்ரா .மேகலை டிபன் எடுத்து வை .” என்றபடி மாடியேறினான் .

தனது அறைக்குள் நுழைந்த சமுத்ரா திகைத்தாள் .
” மேகலை …” என கத்தினாள் .

நிதானமாக சாவாதானமாக வந்து நின்றாள் அவள் .” என் சாமான்களை எல்லாம் எங்கே வைத்தாய் ? அறையினுள் ஒன்றும் இல்லையே “

” மாடியில் வைத்திருக்கிறேன் “

” உன்னை யார் அங்கே கொண்டு போய் வைக்க சொன்னது ? “

” நான்தான் ” என்ற பதிலோடு வந்தவர் மயில்வாகன்ன் .” பொண்டாட்டி சாமான்களை புருசன் ருமிலதான வை்க்கனும் ” குத்தீட்டி போல் அவளை குத்தியது பார்வை .

வேகமாக அவர்ருகில் சென்றாள் .” எனக்கு மாடியில் தங்க விருப்பமில்லை ..” என்றாள் .

” அப்போ நீ வீட்டை விட்டு வெளியே போகலாம் ” குரல் உறுதியாக ஒலித்தது .

” என்ன …?” அதிர்ந்தாள் .

” உரிமையற்றவர்களுக்கு இந்த வீட்டில் இடம்  இல்லை .வெளியே போ “

எதையாவது சாக்காக வைத்து இந்த வீட்டிலுள்ளவர்கள் எல்லோருமே தன்னை வெளியே அனுப்புவதிலேயே உள்ளதை உணர்ந்தாள் அவள் .

” அதற்கு அவசியமில்லை .நீ மாடிக்கு வா சமுத்ரா ” யோகேஷ்வரன் தான் .மாடிப்படி மேலிருந்து கூறிவிட்டு உள்ளே சென்றான் .

மாடிப்படியேற கால்கள் பின்ன அப்படியே உணவு மேசையில் அமர்ந்தாள் .

” இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு …திரும்ப எங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமலா போயிடும் ? ” சாப்பிடுவதற்காக வந்த்தை போல் அருகில் வந்தமர்ந்த செல்வமணி முனகினாள் .

நிமிர்ந்து அவளை முறைத்தாள் சமுத்ரா .

” முறைக்காதடி பத்து நாள்ல உன்னை இந்த வீட்டை விட்டு விரட்டல நான் என் பெயரை மாத்தி  வச்சுக்குறேன”  சூளுறைத்தாள் செல்வமணி .

” வீட்டை விட்டு வெளியேறுறது நானா , நீங்்களான்னு நானும் பார்க்கிறேன் …” பதில் சவால் விடுத்தாள் .

” இது என் வீடுடி …நான் ஏன் போறேன் …?மவளே உனக்கிருக்குடி …” கண்கள் சிவந்தன அவளுக்கு .

” என்ன பிரச்சினை செல்லா ? ” என்றபடி வந்தமர்ந்த யோகன் குளித்து ப்ரெஷ்ஷாக இருந்தான் .

” ஒண்ணுமில்லையே …பசியே இல்லையாம் உன் பொண்டாட்டிக்கு .நல்லா சாப்பிடும்மான்னு சொல்லிட்டிருந்தேன் ” என்றாள் .

” ஏன் சமுத்ரா இன்று காலையும் சாப்பிடவில்லையே .மதியம் …என்ன சாப்பிட்டாய் …?” தனது தட்டில் பரிமாற வந்த மேகலை கையிலிருந்த பாத்திரத்தை வாங்கி , சமுத்ராவிற்கு பரிமாறியபடி கேட்டான் .

” மதியமா …? இன்று ….மதியம் ….நான் …” என்று இழுத்து தலை சரித்து யோசிப்பது போல் பாவனை செய்து செல்வமணி , மேகலையின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள் .

வியர்த்த முகத்துடன் ஒருவரையொருவர் பார்த்து திணறினர் .

” மறந்து போச்சே …..” என முடித்தாள் .நிம்மதி மூச்சு விட்டனர் இருவரும் .

” அந்த லட்சணத்தில் சாப்பிட்டிருக்கிறாய் ? இப்போதாவது ஒழுங்காக சாப்பிடு ” அதட்டியபடி அவளுக்கு பரிமாறி விட்டு தானும் உண்ண அமர்ந்தான் .
பாதி சாப்பாட்டில் ஒலித்த போனை எடுத்தபடி அடுப்படியினுள் விரைந்தான் .இங்கே பெண்களின் கேலி நிறைந்த நக்கல் பார்வையை சந்திக்க மனமற்று தானும் கை கழுவ முடிவு செய்து அடுப்படியினுள் சென்ற சமுத்ராவின் காதுகளில் ” ஒண்ணும் பெரிய பிரச்சினையெல்லாம் இல்லைடா .எனக்கொன்னும் இல்லை .இதோ இப்போ அங்கேதான் வர்றேன் …” என பேசிக் கொண்டிருந்த யோகனின் குரல் விழுந்த்து .

அந்த போனை அப்படியே பிடுங்கி எறிந்து விட வேண்டும் போல் எழுந்த ஆத்திரத்தை அடக்க குழாய் தண்ணீரை முழுவதுமாக திறந்து விட்டு , நீர் தெறிக்க , தெறிக்க அதில் கையை நீட்டீனாள் .

” கண்ணை மூடி ஐம்பது எண்ணுவியாம் .நான் அதற்குள் அங்கே வந்துவிடுவேனாம் ” என்ற தனது கடைசி கொஞ்சலை முடித்து விட்டே கை கழுவ வந்தான் .
” எதற்கு இவ்வளவு வேகமாக திறந்து விட்டிருக்கிறாய் ? ” என்றபடி  குழாயை பாதியாய் மூடியவன் கை கழுவினான் .

” சமுத்ரா எனக்கு ஒரு போர்வையையும் , தலையணையும் வெளியே சோபாவில் எடுத்து வைத்துவிட்டு நீ உள்ளே கட்டிலில் படுத்து தூங்கு ” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டான் .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!