kadak katru Serial Stories

Kadal Kaatru – 24

                                           ( 24 )

ஆலம் சுற்றி குங்குமத்தை சமுத்ராவின் நெற்றியில் இட்ட  செல்வமணியின் விரல்கள் அவள் நடு நெற்றியை குத்தின .சுரீரென எழுந்த வலியை பல்லை கடித்து அடக்கினாள் .நிமிர்ந்த போது செல்வமணியின் குரோத பார்வையை சந்தித்தாள் .

மணமக்களுக்கு பாலும் , பழமும் கொடுத்த மேகலாவின் கைகளும் வெறுப்பையே சுமந்திருந்தன. வாயில் வைக்கும் பாவனையில் தொண்டை வரை தள்ளி விடப்பட்ட வாழைப்பழ துண்டை கஷ்டப்பட்டு செருமி வாய்க்கு கொண்டு வந்தாள் சமுத்ரா .

வழக்கம்போல் அடுப்படியினுள் நின்றபடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த புவனாவின் பார்வை கண்ணகியின் கனலை கொண்டிருந்த்து .ஏதோ புலியும் , சிங்கமும் ,நிறைந்திருக்கும் காட்டினுள் மாட்டிக் கொண்ட உணர்வெழுந்த்து சமுத்ராவிற்கு .

சும்மாவே கழுத்தில் கனமாக கிடந்த தாலி சங்கிலியையே நம்பமுடியாமல் மீண்டும் , மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் .இதில் இவர்கள் இம்சை வேறு .

வறண்ட தொண்டையை நனைக்க ஒரு டம்ளர் தண்ணீரை ஜாடியிலிருந்து பிடித்துக் கொண்டிருந்த போது ” எப்படியோ நினைத்ததை சாதித்து விட்டாய் …?…ம் …” உறுமலுடன் அருகில் நின்றாள் புவனா .

” இந்த உறவு எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் …” சவால் விட்டபடி மறுபுறம் நின்றாள் செல்வமணி .

” இதெல்லாம் கண்ணை மூடி முழிப்பதற்குள் கரைந்து போகும் பெரியம்மா .ஒரு மாதத்தில் தானாக ஓடி விடும் பாருங்கள் ” சூளுரைத்தாள் மேகலை பின்னால் நின்றபடி .

அடப்போங்கடா என்றிருந்த்து சமுத்ராவிற்கு .என்னவோ தவமாய் தவமிருந்து இந்த வாழ்வை நான்  பெற்றது போல் பேசுகின்றனரே .நானே தலையை கொடுத்து விட்டு இழுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் .வெறுப்புடன் தனக்கமைந்த வாழ்வை நினைத்தபடி ஒரு சிறிய அலட்சிய சிரிப்புடன் அவர்களை கடந்து தன் அறையினுள் போய் கதவை பூட்டிக் கொண்டாள் .

ஏதாவது கோபமாகவேனும் பதில் சொல்லிவிட்டு சென்றிருந்தாளானால் அவர்கள் வேகம்் கொஞ்சம் குறைந்திருக்கும் .ஆனால் சமுத்ராவின இந்த அலட்சிய சிரிப்பு மேலும் அவர்கள் வெறுப்பை விசிறி விட்டது .




அறையினுள் நுழைந்தவள் பட்டுச்சேலையை கூட மாற்ற தோன்றாமல்  அப்படியே கட்டிலில் படுத்துக் கொண்டாள் .தனது கழுத்தில் கிடந்த தாலி செயினை எடுத்து பார்த்தாள் .எனக்கு திருமணமாகிவிட்டதா ?தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் .

எதற்காக இதற்கு சம்மதித்தேன் ? சற்று பொறுத்திருக்கலாமோ …?என இப்போது யோசித்தாள் .முதல் நாள் இரவு அவளுடன் போனில் பேசிய மலையரசனின் குரலில் இருந்த மகிழ்ச்சி அவள் எதிர்பாராத்து .

இந்த திருமணத்தை அண்ணன் இவ்வளவு மகிழ்ச்சியுடன் எதிர் கொள்வானென சமுத்ரா எதிர்பார்க்கவில்லை .இந்த அளவு யோகன் போனிலேயே அவனை வசியம் செய்திருந்தான் .

சந்தோசமாக யோகனை திருமணம் செய்து கொள்ளும் படியும் , அவன் விடுமுறைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் , கிடைத்ததும் கிளம்பி வருவதாகவும் கூறினான் .தனக்காக நல்ல காரியத்தை தள்ளிப் போட வேண்டாமென்றான் .

அண்ணன் ஏதாவது சொல்வதால் ஒரு வேளை இந்த திருமணம் நின்று விட வாய்ப்பிருக்கிறதோ ..என்ற சமுத்ராவின் இறுதி நப்பாசையும் மடிந்த்து .

நகையும் , பட்டும் அணிந்து கோவிலுக்குள் சென்று அக்னியின் முன் அமரும் வரை இருதலைக் கொள்ளி எறும்பாகவே இருந்தாள் .ஒன்றும் வேண்டாமென ஓடுவிடுவோமா ..என்ற எண்ணம்தான் அவளுக்கு .

கோவில் வாசலிலேயே காத்திருந்து அவள் கைகளை பற்றிக் கொண்ட ஒலிவியாவும் , மார்ட்டனாவும் பார்த்த கேலி பார்வையில் சமுத்ரவின் முகம் கன்றியது .இரண்டு நாட்கள் முன்புதான் அவர்களிடம் யோகனை காதலிக்கவில்லையென உறுதியாக மறுத்திருந்தாள் .அவர்கள் அதனை நம்பாமல் அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தனர் .

இப்போது அவனருகே மணப்பெண் கோலத்தில் அவனை உரசியபடி வந்து நின்றால் என்ன நினைப்பார்கள் .ஆனால் இந்த யோகன் ஏன் விடாமல் அவள் தோளை உரசியபடியே நிற்கிறான் ? அவறும் நகர்ந்து நின்று பார்க்கிறாள் .சிறிது நேரத்தில் எப்படுயோ அவன் தோள்கள் அவளை உரசியபடி இருக்கும் .பற்களை கடித்துக் கொண்டாள் .

மார்ட்டினாவும் , ஒலிவியாவும் பட்டு சேலையில் ஜொலித்தனர் .யோகன் தங்களுக்கும் பட்டுச்சேலை எடுத்து தந்த்தாக கூறி மகிழ்ந்தனர். மணமேடையருகே நின்றிருந்த செல்லி , இருளாயியின் முகம் தாமரையாய் மலர்ந்திருந்த்து .ஏதோ அவர்கள் வீட்டிற்கே சமுத்ரா மணமுடித்து வருவதைப் போன்ற மலர்ச்சி அவர்களுக்கு .

இன்னமும் அங்கே கூடியிருந்த எளிய மக்களிடையே முழிவதும் நிரம்பியிருந்த்து அளவில்லா மகிழ்ச்சியே .சமுத்ராவிற்காக இல்லை …தங்கள் முதலாளி திருமணம் செய்து கொள்ளப் போகிறானெனும் மகிழ்ச்சி .இந்த உலகிலேயே மிகவும் பாக்கியசாலி பெண் சமுத்ரா என்பதே அவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக இருந்த்து .

இப்போது எழுந்து எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என அவள் கூறினாலும் ,அனைவருமாக சேர்த்து பிடித்து அமுக்கி அவளை உட்கார வைத்து அவர்கள் முதலாளியை தாலி கட்ட வைத்துவிடுவார்கள் போல .

” இவ்வளவு தூரம் வந்தாச்சு செல்லம் .இனி தப்பிக்க முடியாது .ஏதாவது ஏடாகூடாமான எண்ணமிருந்தால் மறந்து விடு …” குனிந்து அவள் காதருகில் கிசுகிசுத்தான் யோகன் .

” வாயை மூடு …” பதிலுக்கு அவனிடம் முணுமுணுத்தாள்  முகத்தில் புன்னகை பூசியபடி .

மணமேடையில் நடந்த இந்த பேச்சு பரிமாற்றம் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக , மணமக்கள் ஏதோ தங்களுக்குள் கொஞ்சிக் கொள்வதாக முடிவு செய்து கொண்டனர் .

அதனால்  ஏகப்பட்ட சந்தோசம் அவர்களுக்கு .” இந்த பொண்ணு டவுன்லயிருந்து வந்த்து .நிறைய படிச்சது .ஆனாலும் நம்ம ஐயாகிட்ட அடங்கிடுச்சு பார்த்தீங்களா …? ” பெண்கள் மத்தியில் இதைப் போன்ற பேச்சுக்களே நடமாடின .

” தளுக்கி குலுக்குறவளும் விழுந்திடுறா.அள்ளி முடியுறவளும் விழுந்திடுறா…என்னத்தை செல்ல …?” முதன்முதல் இந்த ஊருக்குள் வந்த போது பஸ்ஸில் வந்த போது சந்தித்த அந்த பெண் , அமல்ராஜின் அம்மா ் சொன்னது இப்போது நினைவு வர , அவளைப் போன்றோர் இப்போது தன்னை இது போல் கேவலமாகத்தானே நினைப்பர் என்ற குன்றலோடு கையில் தூக்கி பார்த்துக் கொண்டிருந்த மாங்கல்யத்தை மார்பு மீது விட்டவள் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டாள் .

அறைக்கதவு மெல்ல தட்டப்பட்டது .யோகனாகத்தான் இருக்கும் .நினைத்த நேரம் உள்ளே வருவான் என்றுதான் கதவை இறுக மூடியிருந்தாள் .இப்போது மெல்லிய குரலில் சமுத்ரா என அழைத்துக் கொண்டிருந்தான் .திறக்க முடியாது போடா ..மனதிற்குள் அவனை வைதபடி விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள் .

இரண்டொரு முறை அழைத்துப் பார்த்தவன் போய்விட்டான் போலும் .சத்தமில்லை .இருந்த மன உளைச்சல் கண்களை அழுத்த தனை மறந்து தூங்கிப் போனாள் சமுத்ரா .

விழித்த போது பின் மதியப் பொழுதாகியிருந்த்து .வயிறு பயங்கரமாக பசித்தது .திருமணம் அதிகாலை நடந்திருந்த்து .கிராமத்து மக்கள் அனைவருக்கும் கோவிலிலேயே  விருந்து உணவிற்கு யோகன் ஏற்பாடு செய்திருந்தான் .ஆனால் அங்கே ஒரு கவளம் கூட சமுத்ராவின் தொண்டைக்குள் இறங்கவில்லை .அவள்  , பந்தியிலிருந்து எழுந்து ஓரமாக அமர்ந்திருந்த போது ஒரு டம்ளர் பாலை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தாள் செல்லி .

யோகன்தான் அவள் உண்ணாததை கவனித்தோ என்னவோ தந்து விட்டிருக்க வேண்டும் .அதோ தூர நின்று சில வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் இவள் பாலை குடிக்கிறா ளா ? என கவனிக்கிறானே .அவனது கவனம் தெரிந்த்தும் வேண டுமென்றே பால் டம்ளரை நக்கென்ற சத்தத்துடன் கீழே வைத்து விட்டு எழுந்து போனாள் .




இப்போது நிறைய பசித்தது .எழுந்து அறைக்கதவை திறந்து பார்த்தாள் .வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியில்லை .செல்வமணி அவளது மதிய உறக்கத்திலிருந்தாள் .மயில்வாகன்னும் தூக்கத்தில் தான் இருக்க வேண்டும் .புவனா வீட்டின் வெளிப்புறம வேலை செய்யும் பெண்களிடம் வாயடித்துக் கொண்டிருந்தாள் .அடுப்படியில் அமர்ந்து ஒரு துணியை விரித்து வைத்து அதில் ஏதோ வேலைப்பாடு செய்து கொண்டிருந்த மேகலை இவளைப் பார்தத்தும் முறைத்துவிட்டு தலையைகுனிந்து கொண்டாள் .

” சாப்பிட என்ன வைத்திருக்கிறாய் ? ” எரிச்லுடன் அவளைக் கேட்டாள் சமுத்ரா .

கட்டை விரலால் அடுப்படி மேடையை காட்டி விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள் அவள் .திமிரைப் பார் …இவளை பிறகு பார்த்துக் கொள்கிறேன் .முணுமுணுத்தபடி போய் பாத்திரங்களை திறந்து பார்த்தாள் .கொஞ்சம் சாதமும் , சிறிது ரசமும் மட்டுமே இருந்த்து .வேண்டுமென்றே இப்படி செய்கின்றனர் .யோகன் மதிய உணவற்கு வந்திருக்க மாட்டான் .இவர்கள் சமைத்து சாப்பிட்டு கழுவி வைத்திருக்கின்றனர் .

திடீரென கண் கலங்கி அழுகை வந்த்து அவளுக்கு .காலை திருமண விருந்தாக பரிமாறப்பட்ட பிரியாணி நினைவு வந்த்து .ஒழுங்காக அப்போதே சாப்பிட்டிருக்கலாம் .தன னையே நொந்தபடி ப்ரிட்ஜ் ஜை திறந்து பார்த்தாள் .முட்டை இருந்த்து .ப்ரட் இருந்த்து .டோஸ்ட் , ஆம்லெட்டுடன் உணவை முடித்துக் கொண்டாள் .

சேலையை மாற்றி சுடிதார் அணிந்தவள் வெளியேறினாள் .வாசலில் எதிர்பட்ட கணக்கு பிள்ளை   முதலாளி ஏதோ பேச்சு வார்த்தைக்கு போயிருப்பதாக தெரிவித்தார் .தலையசைத்தவளிடம் வெளியே போறீங்களாம்மா ? கார் எடுக்கவா ? என றார் .

” இல்லை ஆட்டோ பிடித்து போய்கொள்கிறேன் ….” சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள் .முதல் நாள் மாலை போனில் பேசிய ரங்கநாயகி இவர்கள் திருமணத்திற்கு  வாழ்த்து சொன்னார் .மிக உயர்ந்த வாழ்வு அவளுக்கு அமைந்துவிட்டதாய் அவர் சிலாகிக்க நொந்து போனாள் சமுத்ரா .இவருக்கு யார் கூறியது .அந்த யோகனாகத்தான் இருக்கும் .பெரிய சாதனை செய்து விட்ட நினைப்பு அவனுக்கு .எல்லோருடமிம் சொல்லிக் கொண்டு திரிகிறான் .

கூடவே அவளது வேலையை பாதியில் விட்டு விடாமல் தொடர்ந்து முடித்து விடுமாளு அவர் நினைவுறுத்த நிச்சயம் முடிப்பதாக கூறியிருந்தாள் .இதோ அந்த வேலைக்காக கிளம்பி விட்டாள் .

காலை திருமணம் முடிந்த புதுப்பெண் .மதிய வேலையில் சுடிதாரை போட்டபடி வெளியேறுவதை ஆ’ வென வாய் பிளந்து பார்த்தனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் , அவர்களை வேலை ஏவிக் கொண்டிருந்த புவனாவும் .

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!