Author's Wall Coming Soon Serial Stories

Coming Soon

வானவில் தேவதை

 

இதுதான் நான் முதன் முதலில் எழுதிய நாவல் தோழமைகளே.  இது மூவர் நிலையத்தின் மூலம் வெளியானது. இப்பொழுது இந்த நாவலை வாசித்து பாருங்கள்.

த்தித்தரிகடத்தீம் ..தீம் …தீம் ….தக்கதிமிதா …தா …தா …தா ..தை ..

மெல்ல மெல்ல இசை உச்சஸ்தாயியை நோக்கி செல்ல கைகளையும் ,கால்களையும் தட்டியபடி அருமையாக ஆனந்த தாண்டவத்திலிருந்து …ருத்ர தாண்டவத்திற்கு மாற தொடங்கினான் சதீஷ் .

 

அவனை சமாதானப்படுத்தும் பாவனையில் தனது நடனத்தை

“லாஸ்யா ” பாணிக்கு மாற்றினாள் சபர்மதி .


பறவைகள் பலவற்றின் இனிய ஓசைகள் .ஏதேதோ காட்டு மலர்களின் கதம்ப மணம் ,அந்த நீரோடையில நீந்தியபடி இருந்த சில வெண் வாத்துகள் .ஆஹா …என்ன அருமையான சூழல் .

 

தனக்கு முன் இருந்த பாரங்கள் அனைத்தும் மாயமாக மறைவதை உணர்ந்தாள் சபர்மதி .அந்த நீரோடையின் அருகேயிருந்த சிறு பாறைத்திண்டு ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டவள் அந்த வாத்துகளை ஆவலோடு பார்த்தாள் .

 

முதலில் இவளைப் பார்த்து மிரண்ட அவை , “ஹாய் ” என்ற இவளது மென் கையாட்டலில் என்ன நினைத்ததோ தலையை நீருக்குள் விட்டு துழாவியபடி இருந்தது .

 

” அட , நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியுமா ?…ம் ..”  பிள்ளை மொழியில் மிழற்றினாள் அவள் .





“எப்ப வந்த ? “தனக்கு பின்னால் சிறு பரபரப்பு கலந்து ஒலித்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தலையை உதறி கண்களை அழுந்த மூடி மூடி திறந்து பார்த்தாள் .

 

எவ்வளவு நேரமாக நின்றுகொண்டு….தீபக் எங்கே ? அக்கா பார்க்கலையா ? அக்கா ….என உள்நோக்கி அழைத்தவன் அந்த காட்டெருமையை சுட்ட அதே ஹீரோதான் .

 —————————-

“அனுசூயா முதல்ல சபர்மதிக்கு  கீழே

பாத்ரூம்  காட்டு .அப்புறமா இப்போதைக்கு உன்னோட ரூமுக்கு பக்கத்து ரூமை ஒதுக்கி கொடு .இன்றிரவிற்கு மட்டும் .இதெல்லாம் முன்பே பார்த்திருக்க வேண்டாமா ? “

 

“இல்லைண்ணா அது வந்து ….”என்று இழுத்த அனுசூயாவின் பார்வை அம்சவல்லியை அடைந்து நின்றது .


அவசரமாக வந்து நின்ற காவேரியின் முகத்தில் சிறு கவலை தென்பட்டது .பூரணசந்திரனை முந்திக்கொண்டு சபர்மதி ” ஒண்ணுமில்லைங்க காவேரி இன்னைக்கு உங்க டிபன் மிக பிரமாதம் .இட்லி வாயில் போட்டால் கரைகிறது .சாம்பார் அற்புதம் .எப்படிங்க இவ்வளவு அருமையா சமைக்கிறீங்க .? ருசிக்க தெரியாதவங்கதான் உங்கள் சமையலையெல்லாம் குறை சொல்வாங்க .”பூரணச்சந்திரனுக்கு மாற்று சொல்ல வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் நீட்டி முழக்கினாள்.

 

அமசவல்லி குழம்ப ,காவேரி வாயெல்லாம் பல்லாக நிற்க ,அமைதியாக அவளை நோக்கியபடி இருந்தான் பூரணசந்திரன் .

 

அவள் முழக்கி முடித்தவுடன் காவேரியிடம் ” இதுக்குத்தான் கூப்பிட்டேன் காவேரி .சபர்மதி இந்த இரண்டு இட்லியிலேயே உன் கைபக்குவத்துக்கு அடிமையாகிட்டா .உன் ரசிகையை நீ கவனிக்க வேண்டாமா ? இதோ நானும்

அக்காவும் சாப்பிட்டு முடிச்சாச்சு .உன் ஆளை நீ நல்ல்ல்லா கவனி ” என்று விட்டு எழுந்துவிட்டான் .அம்சவல்லியும் .

 —————————-

தன்னை யாரும் கவனிக்கவில்லையென முடிவான பின்பு ,வாசல்புற செடிகளுக்கு நீரூற்றி கொண்டிருந்த தோட்டக்காரன் பக்கவாட்டு செடிகளுக்கு போன பிறகு மெல்ல சுற்றுச்சுவர் கதவை நோக்கி நடந்தாள் .வாசல் காவலாளி கண்ணில் படவில்லை .ஒரு சிகரெட்டிற்காக ஒதுங்கியிருக்கலாம் .

இதோ வாசலை நெருங்கி விட்டாள் . எங்கிருந்து வந்தனவோ அந்த நாய்கள் .மொத்தம் நான்கு .நாக்கை தொங்கவிட்டபடி கூர்பற்களை காட்டிக்கொண்டு ,இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் அவள் கால் சதையில் கால்கிலோவாவது பிடுங்கிவிடும் .குரைக்கவோ ,விரட்டவோ இல்லை .வெறுமனே அவளை வளையமிட்டபடி மிக சாதுவாக நின்றிருந்தன. ஆனால் காலெடுத்து வைத்தாளானால் அவை வெறி கொண்ட வேங்கையாகி விடுமென சபர்மதிக்கு நிச்சயம் தெரிந்தது .

 

தோல்வியோடு உள்ளே நடந்தாள்

 

 


கடல் காற்று

 

 

நான் மிகவும் ரசித்து எழுதிய கதை .கடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அந்த கடலோர மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த காதல் கதை . யோகனும் ,சமுத்திராவும் எப்போதும் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களை நீங்களும் படித்துப் பாருங்கள்.

” நான் ” பெண்குரல் ” பத்திரிக்கையில் வேலை பார்க்கிறேன்மா. எங்கள் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரைக்காக உங்கள் ஊருக்கு வருகிறேன்மா “

” எதைப் பற்றிய கட்டுரை ?” மேலும் துருவல் அப்பெண்மணியிடம் .

” என்னம்மா உங்கள் ஊரில் எழுதுவதற்கு விசயங்களா இல்லை ?சரணாலயத்திலிருந்து கல்லறை வரை எங்வளவோ விசயங்கள் இருக்கின்றனவே….” சிறு சலிப்புடன் கூறினாள் .

” அதில் எந்த விசயமென்றுதான் கேட்டேன் ?” அவள் விடுவதாக இல்லை .

” உங்கள் ஊர் மீனவ பெண்களை சந்தித்து ஒரு பேட்டி …அவ்வளவுதான் ” எவ்வளவோ முயன்றும் அவள் குரலில் சிறு எரிச்சல் தெரிந்து விட்டதோ?





அதென்னமோ இந்த பொண்ணுங்களும் அப்படித்தான் அவன்கிட்ட போய் விழுந்தாங்க …அப்படி வராத பொண்ணுங்களையும் ஏதாவது பண்ணி இவன் பக்கம் இழுத்துக்கிடுவான் .

இப்படித்தான் ஒரு பொண்ணு .சென்னை பொண்ணு .எப்படியோ இவன் வசப்படுத்தி இழுத்திட்டு வந்திட்டான்.இரண்டு பேருக்குள்ளே என்ன தகராறோ இவன் ..அவளை கடைசியில் …”

இது அவளுக்கு மிக தேவையான தகவல் .ஆவலாக காதை தீட்டிக் கொண்டிருந்த போது, பாதியில் நின்றது பேச்சு…

பஸ் அப்போது ஒரு நிறுத்தத்தில் ் நின்று கொண்டிருந்த்து.அங்கே ஒரே சலசலப்பு .நீங்க போங்க ..ஏறுங்க….உட்காருங்க..என்பதான உபசார குரல்கள் …

” திரும்பாதம்மா…நான் சொல்வதை நல்லா கேட்டுட்டு ..அப்புறமா மெல்ல திரும்பி பார் .இப்போ பஸ்ஸில் ஏறியிருக்கிறாளே ஒரு பொண்ணு…அவதான் அந்த பையனோட வைப்பு…,” என்றாள்.

” என்னது …” என்றாள் முதலில் புரியாமல் …

” அட என்னம்மா புரியலையா ? அந்த பையனோட செட்டப் …கீப்புன்னு சொல்வீங்களே..அதான் .அங்கே தோப்புக்குள்ளாற வீடு கட்டிக் கொடுத்து வச்சிக்கிட்டிருக்கான் .இரண்டு பேருக்கும் பிள்ளை கூட இருக்கு.்”

இது அவளுக்கு புது தகவல் .உடனடியாக திரும்பி பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தாள் அவள் .


” பார்த்தீரகளா உங்கள் பையன் செய்திருக்கும் வேலையை ..இப்படி அடிக்கடி யாராவது ஒரு பொண்ணை இழுத்துட்டு வருவான் .அந்த சிங்காரிகளையெல்லாம் சீராட்டனும்னு தலையெழுத்து எனக்கு …” முழங்கினாள் புவனாதேவி.

” அப்படி எத்தனை பேரை சீராட்டிட்டீங்களோ ? என்னமோ உங்கள் பிறந்த வீட்டு சீதனத்தை வைத்து எங்களையெல்லாம்   வளர்த்த மாதிரி பேசுறீங்க ? காஞ்ச கருவாட்டு கூடையோட இந்த வீட்டு வாசலில் வந்து நின்னதை மறக்க வேணாம் ” செல்லா இப்போது யார் பக்கம் பேசுகிறாள் ? குழம்பினாள் சமுத்ரா.

” ஆமான்டி உங்களை சீராட்ட பொறந்த வீட்டு சீரோட கொள்ளை பொம்பளைங்க வருவாங்க .கனா கண்டுகிட்டு கிடங்க .அதான் உன் அருமை தம்பி மாதம் ஒரு பொண்ணை கூட்டிட்டு வரறானே.இதோ இந்த மேனாமினுக்கியை கூட்டிட்டு வரலை ? “

” இங்கே பாருங்க உங்க ரெண்டு பேருக்குள்ளே பேசும்போது என்னை ஏன் வம்புக்கிழுக்கீங்க ? நான் பாட்டுக்கு நான் என் வேலையை பார்த்திட்டு போயிட்டிருக்கேன் . ” ஒரு சிறு பெண் பேசும் பேச்சை பாரேன் மேகலையை அசூசையுடன் பார்த்தாள் சமுத்ரா.


” எந்த சாயா ? எனக்கு சாயாவென்று யாரையும் தெரியாது .” அலட்சியமாக தலையை சிலுப்பினாள்.

” இன்று யார் யாரை பார்த்தாய் ? என்ன கூறினார்கள் ?” அடுத்த கேள்வி.

” எனது பத்திரிக்கை சம்பந்தமான சந்திப்பு சார் .அதனை எங்கள் ஆசிரியர் ரங்கநாயகி மேடத்திற்கு முறைப்படுத்தி அனுப்பிவிடுவேன் .பயப்படவேண்டாம் சார் .எனக்கு இதிலெல்லாம் நல்ல அனுபவம் உண்டு .மிக நன்றாகவே வடிவமைப்பேன் “

என் வேலை சம்பந்தப்பட்டது உனக்கு ஏன் கூற வேண்டுமென சொல்லாமல் சொல்லிவிட்டு ,அவனை விட்டு விலகி நடந்தாள் .

” நாளை சென்னை பஸ்ஸேற போகிறாயா ?” அதிகாலை ஆறு  மணிக்கு கூட ஒரு பஸ் இருக்கிறது .”

டக்கென நின்று அவனை திரும்பி வெறித்தாள் .எப்படிப்பட்ட மட்டமான ப்ளாக்மெய்ல் .

” இன்றே உன் பத்திரிக்கை வேலையெல்லாம் முடிந்து விட்டது போலவே …” நிதானமாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான் .

முன்பொரு நாள் ஹோட்டலில் வைத்து அந்த கால்கேர்ள்ளுடன் பார்த்த யோகேஷ்வரனை நினைவுக் கு கொண்டு வந்தான் .இவன் வீட்டில் தங்கி இவனது உதவியோடு தன் வேலையை பார்த்தது எவ்வளவு பெரிய தப்பு ?


” ஐயோ , வேண்டாம்மா … இப்போது எதற்கு இந்த கண்ணகி வேடம் .? நம் நண்பர்கள் பார்த்தால் என்ன  நினைப்பார்கள் ..? என்றவன் .குரலை குறைத்து அவள் புறம் சாய்ந்து அவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்திருக்கிறார்கள் தெரியும்தானே  ? ” என்றான் .

முகம் சிவக்க அவர்களது கேலிகளை நினைவுக்கு  கொண்டு வந்தபடி அவர்கள் புறம் திரும்பிய சமுத்ராவிற்கு  அப்படியே மூச்சடைத்தது.

கிடைத்த இடத்தில் முடிந்தளவு தள்ளியமர்ந்திருந்த யோகன் , சமுத்ராவின் கண்ணியம் மேத்யூ , ஒலிவியாவிற்கு தேவைப்பட்டிருக்கவில்லை .அந்த இடத்தில் அமைந்துவிட்ட இடைஞ்சலை சாக்கிட்டு கிட்டத்தட்ட ஒருவர் மடி மீது ஒருவரே அமர்ந்திருந்தனர் இருவரும் .

இவர்களிருவரும் தங்களுக்குள் தர்க்கத்தில் மூழ்கியிருக்க , சுற்றுப்புறம் உயிர்பயத்தில் பரபரப்புற்றிருக்க …இந்த விநோத சூழ்நிலையில் ஒரு மனிதனுக்கு காதல் உணர்வு எப்படி வரும் ? ….ஆனால் அவர்களுக்கு வந்திருந்த்து.மிக நீண்ட இதழ் முத்தத்தில் தங்களையே மறந்திருந்தனர் இருவரும் .

மிக அருகில் அப்படி ஒரு அப்பட்டமான முத்தசூழல் சமுத்ராவை திகைக்க செய்த்து.உடல் ரத்தம் முழுவதும் முகத்தில் குவிந்துவிட முகம் சூடேறி சிவக்க கைகளுக்குள் முகத்தை தாங்கியபடி குனிந்து கொண்டாள





” உனது ஊர் , வேலை எல்லாம் இங்கே மாற்றி க் கொண்டால் …”

” அது எப்படி …..?” கேட்கும் போதே ஏனோ வயிற்றில் புளியை கரைத்தது சமுத்ராவிற்கு ்

” என்னை திருமணம் செய்து கொண்டாயென்றால் எளிதாக இந்த ஊர் உனதாகிவிடும் .நீயும் இங்கே வேலை பார்க்கலாம் ” மிக சாதாரணமாக சாப்பிடலாம். வா என அழைப்பது போல் இதனை கூறினான் .

ஆழ்ந்து வீசும் கடற்கரை காற்று அவன் சொற்களை தப்பு தப்பாக தன் காதுக்கு கடத்துகிறதெனத்தான் நினைத்தாள் சமுத்ரா .காதுகளை நன்றாக தேய்த்து விட்டு கொண்டாள் .

” ம் …சொல்லுங்கள் …” என்றாள் .

” என்னை திருமணம் செய்து கொண்டு இந்த ஊரிலேயே செட்டிலாகி விடு என சொல்லிக் கொண்டிருந்தேன் ” அதிகாரம் அவன் குரலில் .

” உனக்கென்ன புத்தி பிசகி விட்டதா ? இதற்கு நான் எப்படி சம்மதிப்பேன் என நினைக்கிறாய் ” ஆர்ப்பரித்த மனதினை அடக்கியபடி கேட்டாள்

” இதுதான் முடிவென்றானபின் சம்மதமெதற்கு …?”

முடிவு …? யார் வாழ்விற்கு யார் முடிவெடுப்பது …?குமுறியபடி ” ஏன் …? எதற்கு …? இந்த முடிவு …?இந்த மக்களுக்காக என கூறாதே ….அவ்வளவு நல்லவனில்லை நீ …” மிக கடினப்பட்டு நிதானமாக வார்த்தை கோர்த்தாள் .

” ம் …குட் …நிறைய நேரங்களில் சரியான இடங்களை 
தொட்டு விடுகிறாய் …” என்றபடி தனது இதயத்தை வருடிக் கொண்டான் அவன் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!