எங்கள் வீட்டு விசேஷம்

” ம்மா நாம் இரண்டு பேரும் மேரேஜ் டே ல ஒரே மாதிரி டிரஸ்ஸிங் , ஜுவல்ஸ் ஓ.கேவா ? ” தோள் சாய்ந்து கொஞ்சுகிறாள் .இளஞ்சிவப்பு வெண்ணெய் குவியலாய் , பொக்கை வாய் திறந்து ங்காயிட்டபடி இருந்த அவள் , டாக்டரம்மாவால் என் வயிற்றின் மீது வெதுவெதுப்பாய் போடப்பட்ட தருணம் சிலிர்ப்பாய் எனக்குள் . இப்போதுதானே என் கைகளுக்குள் பொதிந்து கிடந்தாள் …அதற்குள்ளாகவா….? பிரமிப்பின் பேரதிர்வு என்னுள் . கடந்து விட்ட காலங்களின் வேகங்கள் நம்ப முடியாதவை . நற்சலனங்கள் சில நீரலை மேல் காற்றாய் எனை சுகமாக அலைக்கழிக்கின்றன . சுடர் விடும் சுந்தரி அவள் – என் மகள் .திருமணம் நிச்சயிக்கப்பட்டு இல்லற வாழ்வு புக தயாராகிறாள். உங்கள் ஆசீர்வாதங்களை அளியுங்கள் தோழமைகளே .

 

 



 

அரைச்ச மாவையே அரைச்சிட்டிருக்கீங்களே …புதிதாக கதை எழுதும் ஐடியா இல்லையா ? உரிமையோடு கேட்கிறார்கள் சில தோழிகள் . உங்கள் ஆர்வம் புரிகிறது தோழமைகளே .மகளின் கல்யாண வேலைகளால் எனது எழுத்துப் பணி சிறிது பாதிக்கப்பட்டுள்ளதே தவிர , வேறு ஒன்றும் இல்லை .வதந்திகளை நம்ப வேண்டாம் . என் நிலைமை புரிந்து கொண்டு பொறுமை காக்கும் எனது பதிப்பாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைபட்டுள்ளேன் 
. தற்போது #class=”_58cm”>இது_ஒரு_காதல்_மயக்கம்



 

 கதையை குடும்ப நாவலுக்காகவும் , #தங்கத்தாமரை_மலரே கதையை பதிப்பகத்திற்காகவும் எழுதி வருகிறேன் .இந்த மாத இறுதிக்குள் இவற்றை முடித்துவிட முயற்சிப்பேன் . இக் கதைகளின் பின் சிறு இடைவெளி வரலாம் .மகளின் திருமணம் ஜீன் மாதத்தில். அது முடியும் வரை கதைகளிலோ …தளத்திலோ அதிக கவனம் செலுத்த முடியாது .புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன் . என் இல் வேலைகளை முடித்து விட்டு முற்றும் புதிப்பிக்கப்பட்ட தளத்துடன் , தளத்திற்கெனவே எழுதிய மேலும் அதிக புதுக் கதைகளுடனும் விரைவில் உங்களை சந்திக்க வருவேன் .திட்டாமல் காத்திருப்பீர்கள்தானே ….?

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

இன்றைய ராசி பலன்(06.05.24)

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று மாலை…

1 min ago

ஓ.. வசந்தராஜா..!-10

10 வியர்த்து வழிய தலை கலைந்து அவள் உள்ளே நுழைந்தபோது வசந்த் அவளுக்காக டேபிளில் காத்திருந்தான். வேகமாக சென்று அமர்ந்ததும்…

12 hours ago

கோடை காலத்தில் எந்த வண்ணங்களில் ஆடை அணிந்தால் இதமாக இருக்கும்?

சுட்டெரிக்கும் சூரியனுக்கு பயந்து வெளியில் தலைகாட்டவே அச்சமாக இருக்கிறது. நாம் அணியும் ஆடைகள் வெயிலுக்கு இதமாக இருப்பது மிகவும் அவசியம்.…

12 hours ago

முட்டை கிரேவி

அசைவ உணவில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெசிபியில் ஒன்று முட்டை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இதை…

12 hours ago

’தாத்தா’ குறும்பட விமர்சனம்

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு பெற்றோரிடம் பழகுவதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆனால், எப்போதுமே தங்களது குழந்தைகளாகவே பார்க்கும்…

12 hours ago

உடலென நான் உயிரென நீ-1

" ஆஹா அருமை ரூபா மேடம் .  உங்கள் சிகிச்சை அற்புதம் .அந்தப் பெண்ணின் முகம் வழு வழுவென மின்னுகிறது…

15 hours ago