Categories: Serial Stories

Kadal Kaatru – 6

                                               6

வெயில் சுட்டெரித்தது் .அதுவும் அந்த கடற்கரைமணல் வெய்யிலை பல மடங்காக்கி சமுத்ராவின் மீது வீசிக்கொண்டிருந்த்து.

அணிந்திருந்த செருப்பை தாண்டி பாதங்களை பதம் பார்த்தன வெயில் கதிர்கள்.வந்த வேலை சிறிது நடந்திருந்தாலாவது இந்த வேதனை சிறிது குறைந்திருக்க கூடும் .ஆனால் சொல்லி வைத்தது போல் இவளை ஏற இறங்க பார்த்த அந்த குப்பத்து பெண்கள் அனைவருமே வாயை சிறிது கூட அசைக்க மறுத்தனர் .

இப்படி இருந்தார்களானால் அவள் எப்படி தனது கட்டுரையை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்புவாள் ? ஆயாசத்துடன் அங்கிருந்த பாறை மீது அமர்ந்தாள் .

பேசாமல் அவன் சொன்னதை கேட்டிருக்க வேண்டுமோ?

்.இரவு சரியாக உண்ணாததால் வெகு காலையே விழிப்பு வந்து விட எழுந்து அறைக்குள்ளேயே யோகா செய்ய தொடங்கினாள் சமுத்ரா .

யோகா முடிந்த்தும் ஏதாவது உண்ண கிடைக்குமா ? என சந்தேகித்தபடி அறையை விட்டு வெளியே வந்தாள் .ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்தபடி இருந்த யோகேஸ்வரன் புன்னகைத்து காலைவணக்கம் சொன்னான் .



இவன் இரவு எவளுடனோ …இலலையில்லை அவனுடைய அந்த அவளுடன் கொஞ்சி விட்டு இப்போது எனக்கு இனிய காலை வணக்கமா…?

வீட்டில் ஒருத்தியை விருந்தினள் என கூறி வீட்டில் தங்க வைத்தோமே …அவளுக்கு ஒழுங்கான உணவு கிடைத்ததா ? என்று கூட கவனிக்காமல் …உல்லாசமாக இருந்து விட்டு இப்போது காது வரை உதடுகளை இழுக்காவிட்டால் என்ன ?

மனம் நிறைந்த வெறுப்புடன் அங்கிருந்த நீர் ஜாடியில் தண்ணீர் பிடித்து அருந்தி விட்டு அவனை கண்டு கொள்ளாமல் நடந்தாள் .பின்புற தோட்டத்தில் நின்று தூரத்தில் தெரிந்த கடல் அலைகளை  பார்த்தபடி அவள் நின்றிருந்த்து வெறும் ஐந்து நிமிடங்களாகத்தான் இருக்கும் .

மணக்க மணக்க அவள் முன் காபி நீட்டப்பட்டது .உடன் பிஸ்கட்டுகளும் .நிமிர்ந்து பார்த்தாள் .மேகலைதான் முகம் முழுவதும் குரோத்த்துடன் காபியை நீட்டியபடி நின்றிருந்தாள்.

நேற்று அவள் கொடுத்த சப்பாத்தி நினைவு வர, காபியை எடுக்காமல் அவளை உறுத்து  பார்த்தாள் .

” எதற்கு முட்டை கண்ணை உருட்டுகிறாய் ? எடுத்து குடித்து தொலை .” கடினமான சொற்களை உதிர்த்தாள் .ஆனால் கடித்த பற்களுக்க்கிடையே மிக குறைந்த சத்தத்தில் ….

என்ன இது பாம்பு விஷப்பற்களுக்கு போர்வை போர்த்தியுள்ளதே …மெதுவாக திரும்பி பார்த்தபோது பின்வாசலில் மறைந்த யோகேஸ்வரனின் உருவத்தை பார்த்தாள் .

ஓஹோ..்இது அவனுக்கான நாடகமா ? …நிதானமாக க1பியை எடுத்தவள் ” இருந்து கப்பினை வாங்கி கொண்டு போ ” என்றாள் .இரவு சாப்பிடாத வெறும் வயிறு பேசியது்.

,கோபத்துடன் அவளை முறைத்தவள் சமுத்ரா உள்ளே திரும்பி யோகேஷ்வரனை கூப்பிடுவது போல் பாவனை காட்டவும் அவசரமாக தன் முக பாவனையை மாற்றிக் கொண்டு பாதங்களை பூமியில் அழுத்தமாக ஊன்றி தன் கோபத்தை காட்டினாள் .

” காலை உணவுக்கு இட்லியும் , பொங்கலும் பண்ணிவிடுகிறாயா ? இரண்டு வடை கூட தட்டிப்போட்டு விடு ” ,இனிமையாக கூறியபடி காலி கப்பை நீட்டினாள் .

பாதங்களை எத்தி எத்தி நடந்து தன் கோபத்தை காட்டியபடி சென்றாள்் மேகலை .

பரவாயில்லை இரவு இங்கே சமுத்ராவின் நிலைமையை அவன் ஊகித்திருக்கிறான்.ஏதோ ஒரு இனம் புரியா திருப்தி அவளுள் .

காலை உணவின் போது மேஜையில் அவளருகே அமர்ந்தவன் ” உனக்கு இங்கே எதுவும் உதவி தேவைப்படுமா ?” அக்கறையாக வினவினான் .

என் …என்ன உதவி ..? லாவண்யாவை பற்றி விபரம் வேண்டும் ..ஆனால் உடனே எப்படி இவனிடம் கேட்க …? திணறியபடிகேள்வியாய் நோக்கியவளிடம் ” கடலோர காத்திருப்புகள் ,” இதுதானே் கட்டுரை தலைப்பு ….ம் …” புருவம் உயர்த்தினான் .

புரையேறியது சமுத்ராவிற்கு .இவன் எனது பத்திரிகை விசயம் பேசினானா ? நான் லாவண்யாவை நினைத்து….

தண்ணீரை தேடினாள் .இவளுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து அருந்திக் கொண்டிருந்தாள் செல்வமணி .இவளை கவனியாத பாவனை வேறு.

” மேகலை சும்மா நிற்கிறாயே . மேடத்தின் தலையை தட்டி விடலாமேம்மா…?” மிகுந்த கரிசனம் யோகேஸ்வரன் குரலில் .

மேகலையோ கையிலிருந்த கரண்டியை பார்த்து விட்டு அவளை திரும்பிபார்க்க …சமுத்ரா அவசரமாக தன் தலையை தானே தட்டிக்கொண்டாள் .

தனது தண்ணீரை அவளுக்கு நகர்த்திவிட்டு ” பார்த்து …பார்த்து….” என்றான் .என்ன அக்கறை அவனை முறைத்தபடி தண்ணீரை அவசரமாக பருகிய பின்புதான் இவன் முன்பே இதில் தண்ணீர் குடித்திருந்தானோ ? என தோன்ற மீண்டும் புரையேறியது அவளுக்கு.

இந்த களேபரத்தில் அவனிடம் எதுவும் கேட்க மனமற்று முகத்தை திருப்பிக் கொண்டு வந்து விட்டாள் .ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென்று இப்.போதுதான் தெரிந்த்து.

கடவுளே முருகா ….இப்படி கட்டாய வாய் பூட்டு போட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எப்படி புரிய வைப்பது ? கால்களை மடக்கி பாறை மேல் அமர்ந்து அதில் தலையை சாய்த்து கொண்டாள் .

அவள் லாவண்யா விசயமாக யோகேஸ்வரனை அவனது இடத்திற்ற்கே சென்று சந்திக்க முடிவு செய்து அதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது , இது போல கடல்புர பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து எழுதும் வேலையை அவர்கள் பத்திருக்கை ஆசிரியை அறிவித்தார் .

வேறொரு பெண்ணிற்கு போன அந்த வாய்ப்பை தனக்காக கேட்டு வாங்கி வந்திருந்தாள் சமுத்ரா.பனிரெண்டு வாரங்கள் தொடர்ந்து வரப் போகும் இக்கட்டுரை மூலம் அப்பெண்களின் நிலைமையையும் அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்து செல்லலாமே என்ற எண்ணம்தான் அவளுக்கு .

ஆனால் இந்த பகுதியின் முக்கிய ஆள் சொல்லாமல் இந்த பெண்கள் வாயை  திறக்க மறுக்கிறார்களே .இதனைத்தான் உதவி வேண்டுமா ? என கேட்டான போலும் .

”  என்ன மேடம் , உங்கள் முயற்சி இம்மியளவு கூட நிறைவேற வில்லை போலவே ? ” கேட்டவன் இளைஞன் .இதே கடல புறத்தை சேர்ந்தவன்தான் .அவர்களுடைய உடையான கைலி , சட்டையில் இருந்தாலும் முகத்தில் படிப்பு தெரிந்த்து .



ஓரளவிற்கு படித்திருக்க வேண்டும் .

,” என் பெயர அமல்ராஜ் ” கை குவித்தவன் ” இங்கே அமரவா ? ” அனுமதி கேட்டு அருகே அமர்ந்தான் .

” நீங்கள் என்னதான் தலையால் தண்ணீர் குடித்தாலும் இந்த ஜனங்க அவர்கள் முதலாளி சொல்லாமல் வாயை அசைக்க மாட்டார்கள் ” கசப்பு வழிந்த்து அவனது குரலில் .

” யார் அந்த முதலாளி ? ” கேட்டபடி அவன் முகத்தை ஆராய்ந்தாள் ் இவன் முகத்தில் ஒரு பரிச்சய ஜாடை தெரிகிறதே.

” எல்லாம் அந்த யோகேககக….ஸ்வரன்தான் ….அவன்தான் இந்த ஜனங்களிடம் காக்கும் கடவுள் இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறான் .வயிற்றுக்கு உணவிட்டு விடுவதால் அவர்கள் கண்களுக்கும் கடவுளாகவே தோன்றுகிறான் “

” ஆனால் இந்த எளிய ஜனங்களுக்கு மூன்று வேளை உணவிடுவதே பெரிய விசயம்ந்தானே ? பலர் அதற்கு கூட வழியற்றவர்கள் போலத்தானே தெரிகிறது “

” ஆமாமாம் …அதை பயன்படுத்திதான் அவர்கள் உழைப்பை திருடிக் கொள்கிறான் .

” நீங்கள் …?”

” நான் கொஞ்சமே கொஞ்சம் படித்து விட்டேனே ்அதனால் அவன் தில்லுமுல்லெல்லாம் எனக்கு தெரிகிறது “

” நீங்களே அவர்களுக்கு விளக்கலாமே ?”

” முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன் ்ஆனால் எங்கே ….? இவன்தான் கொஞ்சம் நிமிர நினைத்தாலும் பணத்தால் அடித்து விடுகிறானே .மேலே …அந்தந்த வீட்டு பெண்களை வேறு கைக்குள் போட்டுக் கொள்கிறான் .”

” ஓ…”

” ம் .்பணத்திற்கு மயங்காதவர்களை போதைக்கு …”

” என்ன …? “

” ஆமாம் தடையில்லாமல் இவனிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சாராயம் வழங்குகிறான் .இவனே தயாரித்து கொடுக்கிறான் “

இது மிகவும் அதிகப்படியாகவே சமுத்ராவிற்கு தோன்றுகிறது .நம்பி வரும் எளிய மக்களை போதைக்கு பழக்க படுத்துவதா ?

ஆனால் இதனை அரசாங்கம் எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறது ?நினைப்பை அவனிடம் கேள்வியாக்கிய போது

” அங்கேயும் இவன் பணம்தான் விளையாடுகிறது .எந்த அதிகாரியும் இந்த குப்பங்களில் நடப்பதை கண்டு கொள்வதில்லை .”

,,” நீங்கள் பத்திரிக்கை கார்ர்தானே இதையெல்லாம் உங்கள் காதுகளில் போட்டால் ஏதாவது மாற்றம் வராதா ? என்ற ஆதங்கத்தில் தான் எல்லாவற்றையும் உங்களிடம் கொட்டுகிறேன் .

” சம்பளம் இவன் கொடுப்பான் .கடன் கொடுத்து விட்டு வட்டியென இவன் அப்பாவும், சித்தியும் அதை பிடுங்கி கொள்வார்கள் .ரொம்ப எகிறுபவர்களின் லான்ச்சை கடனென பறித்து கொள்வார்கள் “

” பிறகு அந்த மீனவர்கள் வெறும் படகிலேறி சாதாரண கை வலை வீசி இவர்கள் கடனை அடைக்க வேண்டும் “



கிடைத்த தகவல்கள் சமுத்ராவிற்கு மிக அதிர்ச்சியூட்டின. இந்த விஞ்ஞான யுகத்தில் இப்படியும் மக்கள் இருக்கின்றனரா ?

திடிரென அவள் கைகளின் மேல் அழுத்தம் படிந்த்து.அமல்ராஜ்தான் அவள் கைகளை இறுக பற்றிக கொண்டிருந்தான் .உருவ முயன்ற கைகளை அனுமதிக்கவில்லை.

” மேடம் இவர்கள் என் ஜனங்கள் .இவர்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டிமென நினைக்கிறேன் .ஆனால் என்னால் முடியவில்லை .நீங்கள் எனக்கு உதவினீர்களானால் நான் உங்களுக்கு மிகுந்த நன்றியுடன் இருப்பேன் ” சொன்னவன் குனிந்து அவள் கரங்களை கண்களில் ஒற்றிக்கொள்ள திகைத்தாள் சமுத்ரா.

” இங்கே என்ன செய்கிறாய் ? ” எவ்வளவு ஆக்ரோசமான குரல் .யோகேஷ்வரன் .கால்களை அகற்றி இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி ஒரு மதயானையை போல் நின்றிருந்தான் .

அமல்ராஜின் கைகளுக்குள் இருந்த சமுத்ராவின் கைகளை பார்த்தது ம் அவன் கண்களில் தீப்பொறி பறந்த்து.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

8 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

8 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

8 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

12 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

12 hours ago