Categories: Serial Stories

ஓ.. வசந்தராஜா..!-10

10

வியர்த்து வழிய தலை கலைந்து அவள் உள்ளே நுழைந்தபோது வசந்த் அவளுக்காக டேபிளில் காத்திருந்தான். வேகமாக சென்று அமர்ந்ததும் தனது வாட்ச்சை திருப்பி பார்த்து “ஐந்து நிமிடம் தாமதம்” என அறிவித்தான்.

 அஸ்வினிக்கு சப் என்று அவன் கன்னத்தில் அறையும் ஆசை வந்தது. “எங்கள் வீட்டிலிருந்து உங்களது இந்த பிரான்ஜிற்கு ஒரு மணி நேரம் ஆகும் தெரியுமா?”

” அதனால் என்ன? உனக்குத்தான் தூரம் சரியாக தெரிகிறதே? அதற்கு ஏற்றாற் போல் தானே நீ கிளம்பியிருக்க வேண்டும். கூடவே இந்த சென்னை டிராபிக்கையும் கணக்கிட்டிருக்க வேண்டும். சரி விடு சாப்பிட என்ன சொல்லட்டும” அவன் வெகு சாதாரணமாக கேட்க அஸ்வினியினுள் ஆத்திரம் கனன்றது.

” ஆருயிர் காதலர்களா நாம்? ஒவ்வொரு இடமாக போய் சாப்பிட்டு கொண்டிருக்க? எனக்கு எதுவும் வேண்டாம். நான் பேச மட்டும்தான் வந்திருக்கிறேன்” அவளை மீறி வந்த வார்த்தைகள்தாம்.எப்படி வந்ததென அவளே அறியாள்.

 “காதலா? உன்னோடா? நானா?” என்ற அவனது இகழ்ந்த குரலில்தான், பேசிய வார்த்தைகளையே உணர்ந்தாள். 

மட மட்டி என்னத்தையடி உளறி வைத்திருக்கிறாய் தன்னையே திட்டிக் கொண்டிருந்தபோது அவனுடைய இகழ்ச்சி கருத்தில் பட்டது.எளிமையான ஜீன்ஸ் டி ஷர்ட்டிலும் நிமிர்வும்,கம்பீரமுமாக நாணின் விறைப்புடன் எதிரே அமர்ந்திருந்த ஆடவன்,அவள் மனதிற்குள் சலனத்தை பரப்பினான்.

இதென்ன இப்படி கேட்டு விட்டான்…விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.மிக உடனே கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொள்ள விரும்பினாள்.நான் அழகானவளா? இல்லையா? இத்தனை வருடங்களாக தோன்றாத மனக்கலக்கம் இப்போது அஸ்வினிக்கு வந்தது.

இரண்டே நிமிடங்கள்தான் தன்னை மீட்டெடுத்து விட்டாள்.போடா உன் முகரைக்கு நான் குறைந்து போய் விட்டேனாக்கும்… ஞாபகமாக உதடுகளை உள்ளே மடித்துக் கொண்டே மனதில் எண்ணமிட்டாள். 

இப்போதெல்லாம் அவளையறியாமல் வார்த்தைகள் வெளிவந்து விடுகிறது. அதென்னவோ இவனைப் பார்த்தாலே நிதானமிழந்து போய் விடுகிறேன். தனது சுயத்தையே மாற்றிய அவனை வெறுப்பாக பார்த்தாள் .

 அவளையே பார்த்திருந்தவன் கண்களில் அவனது இகழ்ச்சியான பேச்சுக்கான அஸ்வினியின் எதிர் கேள்வியின் எதிர்பார்ப்பு துல்லியமாக தெரிய, உதடுகளை சுழித்து அவன் கேள்வியை அலட்சியம் செய்து ஒதுக்கினாள். தனது பேச்சின் திசையை மாற்றினாள்.

“ஆக உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது?”

” என்ன தெரிந்திருக்கிறது?” அப்பாவியாக கேட்டான் அவன்.

” என் பென் டிரைவ் “

“ஓ அந்த பென் ட்ரைவ் உன்னுடையதா? என்னுடைய லேப்டாப்பில் சொருகியிருந்தது. யாரோடதோ என்று தெரியாமல் எடுத்து வைத்தேன்” பேன்ட் பாக்கெட்டில் இருந்த அவனது வேலட்டை எடுத்து அதற்குள் இருந்த பென் டிரைவை இரு விரல்களில் பிடித்தபடி மெல்ல சுழற்றினான்.

” அதை கொடுத்து விடுங்கள்” கை நீட்டி பென்டிரைவை தொட முயன்றாள். சட்டென கையை பின்னால் இழுத்துக் கொண்டவன் மறு கையால் நீண்ட அவள் கையை மடக்கி டேபிள் மேல் வைத்து அழுத்தினான்.

“இதை வைத்து எவ்வளவோ சாதிக்க வேண்டும். அவ்வளவு எளிதாக கொடுத்து விடுவேனா?” அவன் முகம் மிகச் சாதாரணமாக கனிவோடு கைப்பிடித்து பேசுவது போல் இருந்தது.

 ஆனால் அவன் கைகளின் பலமோ… அஸ்வினி பற்களை இறுக கடித்து வேதனையை அடக்கினாள். டேபிளுக்கும் அவன் கைக்குமிடையே நசுங்கிக் கொண்டிருந்தது அவளது கை. வினாடிக்கு வினாடி அவன் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போக ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் “ப்ளீஸ் விடுங்க” என முணுமுணுத்தாள்.



 நீர் திரையிட்ட கண்கள் தெரியாமல் இருக்க இமைகளை தாழ்த்திக் கொண்டாள். மெல்ல தன் கைகளை எடுத்துக் கொண்டவன் “அச்சோ சிவந்துடுச்சே!” என்றபடி டேபிளில் வைத்திருந்த இதமான சுடுதண்ணீரில் டிஷ்யூவை லேசாக நனைத்து மெல்ல அவள் கை சிவப்பில் ஒற்றினான்.

“எவ்வளவு மென்மையானவள் நீ… இதற்கே கை சிவந்தால் மற்றதெல்லாம் எப்படி…?” கேட்டுவிட்டு அவன் லேசாக கண்சிமிட்ட அஸ்வினியின் இதயம் திதும் திதும் என அடித்துக் கொண்டது.என்ன கண்றாவியை பேசித் தொலைகிறான் என்று நினைத்தபடி வெடுக்கென தன் கையை இழுத்துக் கொண்டாள். 

“சேஃப்ரான் மஸ்ரூம், ஸ்பிரிங் கார்போனரா” கையில் உணவு தட்டுடன் கடந்த பேரரை அழைத்து அவன் ஆர்டர் சொல்ல இவன் என்ன எனக்கு சாப்பிட  உணவு சொல்வது என்றெண்ணியவள் “எனக்கு இதுதான் வேண்டும்” அந்த பேரர் தட்டில் வைத்திருந்ததை கேட்டாள்.

பேரர் வசந்தத்தை பார்க்க அவன் தலையசைக்க கையில் இருந்ததை அஸ்வினி முன் வைத்துவிட்டு நகர்ந்தான். இரண்டாவது நிமிடம் அவனுக்கு கேட்ட உணவுகள் வந்தன. கத்தியையும் போர்க்கையும் வைத்து தன் தட்டில் இருந்ததை சாப்பிட ஆரம்பித்தாள் அஸ்வினி. எப்படியும் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பேசப்போகிறேன் என்று சொல்வான். என்றெண்ணியபடி வேக வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“டேஸ்ட் பிடித்து விட்டது போல…” தண்ணீரை அவளுக்கு நகர்த்தி வைத்தான்.

 வெண்ணையில் வாட்டி ஆலிவ் ஆயிலில் பொரித்தெடுத்த சிறு சிறு சிக்கன் துண்டுகள் பெரிய பன்னுக்குள் பொதிக்கப்பட்டு பக்குவமாக பேக் செய்யப்பட்டிருந்தன. தொண்டையில் அடைக்க அடைக்க அந்த பண்டத்தை விழுங்கினாள்.

” ரொம்ப டேஸ்டோ?” எதிரில் இருந்தவன் கேட்க “ஆமாம்” என்றபடி தொடர்ந்தாள். 

“அடிக்கடி சாப்பிட்டு பழக்கமோ?” அடுத்த கேள்வி.

என்ன இவன் சாப்பிடவும் விடாமல் நை நையென்று… தினமும் மூன்று வேளை சாப்பிடாமல் எப்படியடா ஒரு மனுசியால் உயிர் வாழ முடியும் மடையா! மனதிற்குள் பேசியபடி உண்ணுவதில் கவனம் செலுத்தினாள். ஓரக்கண்ணால் பார்க்க அவன் முன்னால் பாஸ்தாவும் மஸ்ரூமும் இருந்தன.

” உங்கள் 5 ஸ்டார் ஹோட்டல்களில் இந்த சாதாரண பண்டத்திற்குத்தான் வாயில் நுழையாத பெயர் வைத்துக் கொள்வீர்களாக்கும்?” இடக்காக கேட்டாள்.

” ஒரே பண்டம்தான் சமைக்கும் முறையில் வித்தியாசம் உண்டு. அப்புறம் இது பைவ் ஸ்டார் ஹோட்டல் அல்ல. த்ரீ ஸ்டார்தான்.என்னுடைய ஹோட்டல்கள் எல்லாமே த்ரீ ஸ்டார்தான். விரைவிலேயே பைவ் ஸ்டார் ஆக்கும் முயற்சியில் இருக்கிறேன்” 

அவன் விளக்க “யாருக்கு வேண்டும் இந்த விளக்கங்கள்…?” என்றபடி ஸ்பூனை தட்டில் போட்டுவிட்டு கிண்ணத்தில் வைத்திருந்த நீரால் உதட்டை தொட்டு டிஷ்யூவால் 

ஒற்றிக் கொண்டாள்.”இப்போது நாம் பேசலாமா?”

“மிகவும் ரசித்து சாப்பிட்டாய் போல, பீப் கறி சாப்பிட்டு பழக்கமோ?” அவன் கேட்க அஸ்வினிக்கு புரையேறியது.

” என்ன மாட்டுக்கறியா? நான் சிக்கன் என்று நினைத்தேனே…”

” நீ தானேமா விரும்பிக் கேட்டாய்.ஆனால் வசந்த் பீப்பை சிக்கன் போல் சமைத்து விட்டாய். வெல்டன்” தன் தோளில் தானே தட்டிக் கொண்டான்.

“உண்மையைச் சொல்லுங்கள், அது நிஜமாகவே மாட்டுக்கறிதானா?” அஸ்வினியின் வயிற்றுக்குள் சிறு சிறு பிரளயங்கள் உண்டாக துவங்கியது.

 “ப்ராமிஸ்மா,ஆனால் நான் உனக்கு ஆர்டர் செய்தது ‘பிக் சீக்” அதை சாப்பிட்டு பார்த்து எனக்கு டேஸ்ட் சொல்லுவாய் என்று நினைத்தேன்”

” என்னது…?” அஸ்வினி அலறினாள்.

 “ப்ச்,ஆங்கிலம் தெரியாதா? பன்றி கன்னம். நீ சாதாரண பாஸ்தா என்றாயே, இதோ பாஸ்தாவுடன் சேர்த்திருப்பது பிக் சீக்” வசந்த் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்து சுவைத்து மெல்ல அஸ்வினியின்  வயிற்று பிரளயங்கள் வெடித்து மேலேறி வந்தன. கையால் வாயை பொத்தினாள்.

“நோ…நோ வாந்தி எடுப்பதானால் அங்கே…இங்கே இடத்தை பாழாக்கினால் ஹோட்டலுக்கு பைன் கட்ட வேண்டும்” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாயை மூடிக்கொண்டு பாத்ரூமிற்கு ஓடினாள்.

 இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டது கூட வந்து விடும் அளவிற்கு ஓங்கரித்து வாந்தி எடுத்தாள். பாவி எப்படியெல்லாம் பழி வாங்குகிறான்! முகத்தில் தண்ணீரை வாரியடித்தாள். “டேய் வசந்த் உருப்படுவியா நீ?” கைகளை உயர்த்தி சாபமிட்டாள்.



” ஏன் உருப்படாமல் போகப் போகிறேன்?”, கதவை திறந்து கொண்டு உண்மையில் அவனே உள்ளே வந்துவிட தடுமாறினாள்.

” இது லேடிஸ் பாத்ரூம். இங்கே நீ எப்படி வரலாம் ?” எகிறினாள்.

“என்னுடைய ஹோட்டல். நான் எங்கே வேண்டுமானாலும் வருவேன்” என்று அறிவித்தவன் ஒற்றைத் தோளை சுவரில் சாய்த்து கைகளை கட்டிக்கொண்டு அவள் உமட்டுவதை நிதானமாக பார்த்தான். இன்னமும் அதிகமாக உமட்ட முகத்தை வாஷ்பேசினுக்குள் குனிந்து கொண்டாள்.

“ப்ளீஸ் வெளியே போங்க” கலங்கிய குரலை காட்டாதிருக்க முயன்றாள். அவன் இன்னமும் கால்களை அழுத்தமாக ஊன்றிக்கொண்டு மேலும் கண்களில் அலட்சியம் காட்டினான். அப்படியே நின்றான்.அஸ்வினியின் கண்ணீர் நீரோடு கலந்து மறைந்தது. 

டிஷ்யூவை உருவி முகத்தை துடைத்தபடி அவள் வெளியேற, அவனும் பின்னேயே வந்தான்.பாத்ரூம் வாசலிலேயே நின்றிருந்த ஹோட்டல் பணிப் பெண்ணிடமிருந்த சுத்தமான வெண்ணிற டவலை வாங்கி இவளுக்கு கொடுத்தவன், “நீ போய் வேலைகளை பார்”என அவளை அனுப்பினான்.

வேறு யாரும் வராமலிருக்க அவளை வாசலில் நிறுத்தியிருந்தான் போலும்.அவனது முன்னேற்பாடுகள் அஸ்வினிக்கு மிகுந்த தலை வேதனையை கொடுத்தன.இனியாவது பேசலாமா என்பது போல் அவள் ஏறிட,”வாந்தியெடுத்து ரொம்பவும் களைத்து விட்டாய்.வீட்டிற்கு போ.நாளை பேசலாம்” என்றான்.

மனம் வெறுத்து வீடு திரும்பினாள்.கவலையாய் பார்த்த சைந்தவிக்கு ஒன்றும் ஆகாது தைரியமாக இரு என ஆறுதல் சொல்லி தூங்க வைத்து விட்டு, தேற்ற ஆளில்லாமல் தூக்கமின்றி விட்டத்தை வெறித்தபடி கிடந்தாள் அஸ்வினி.



What’s your Reaction?
+1
33
+1
20
+1
2
+1
0
+1
4
+1
0
+1
3

Radha

View Comments

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

6 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

6 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

6 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

6 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

10 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

10 hours ago