Categories: Samayalarai

முட்டை கிரேவி

அசைவ உணவில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ரெசிபியில் ஒன்று முட்டை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இதை சாப்பிடுவார்கள். மேலும் இது புரதம் நிறைந்த உணவாகும்.

எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு ஸ்டைலில் முட்டை கிரேவி வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • முட்டை – 3

  • பெரிய வெங்காயம் – 1

  • உப்பு – சுவைக்கேற்ப

அரைக்க தேவையானவை :

  • துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

  • தக்காளி – 2

  • பூண்டு – 3 பல்

  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

  • சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

  • கொத்தமல்லி தூள் – 3 டீஸ்பூன்

  • கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன்

  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

  • தாளிக்க தேவையானவை :

  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • இலவங்கப்பட்டை – 1

  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை விளக்கம் :

  • முதலில் முட்டையை வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ளுங்கள்.

  • பின்னர் முட்டைகளை மெதுவாக நாலாபக்கமும் கீறி தனியே வைக்கவும்.

  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், தக்காளி, கருப்பு மிளகு, பூண்டு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  • அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை வறுத்துக்கொள்ளுங்கள்.

  • பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.

  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறவும்.

  • பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அதில் அவித்த முட்டைகளைச் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.



வீட்டுக் குறிப்பு:

  • கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம். சத்தாக இருக்கும்.

  •  வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும் அபாரமாக இருக்கும்.

  •  ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

7 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

7 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

7 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

8 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

11 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

11 hours ago