Author's Wall Coming Soon Serial Stories

coming soon

என் கதைகளை ஆரம்பத்திலிருந்தே வாசித்துக் கொண்டிருக்கும் தோழமைகளுக்கு தெரிந்த , வாசித்த கதைதான் .ஆனாலும் இப்போது புதிதாக என்னை அறிந்து கொள்ள தொடங்கியிருப்பவர்களுக்கு புது கதை . ” மலையோரம் வீசும் காற்று ” அசோகன் சாரின் ஜீயே பப்ளிகேசன்ஸ் மூலம் மீண்டும் வெளியாகி உள்ளது . ஆதிநாதன் – மணிரூபா , விவசாயிகளின் பிரச்சனைகளுக்கிடையே இவர்களின் காதல் .கை கூடியதா ? புத்தகம் இப்போது உங்கள் ஊர் கடைகளில் கிடைக்கிறது .வாங்கி வாசியுங்கள் தோழமைகளே…

———————————

 

 

வித்யாவின் கையை பற்றியபடி வேகமாக ஓரம் ஒதுங்கினாள் மணிரூபா .தன் வழியில் இடறியவர்களையெல்லாம் எடுத்து வீசியபடி ஓடி வந்ணு கொண்டிருந்த்து அந்த யானை .இந்த தள்ளுமுள்ளில் மணிரூபா கை பிரசாதக் கூடை தவறி விழுந்து நடுரோட்டிற்கு ஓடியது .

பன்னிரெண்டு வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டு அந்த பிரசாத்த்தை மட்டுமே அன்றைய உணவாக உண்பேன் என்பது அவளது அன்னையின் வேண்டுதல் .இன்று அம்மா வசந்தாவிற்கு காலை எழ முடியாத அளவு காய்ச்சல் .எனவே தானே கோவிலுக்கு வந்தாள் மணிரூபா .

ஒரே விநாடிதான் யோசித்தாள் .சட்டென அந்த தெருவில் பாய்ந்தாள் .உருண்டு சென்று கொண்டிருந்த பிரசாத கூடையை பிடுத்து நிமிரும் போது அவளுக்கு வெகு அருகே யானை .கண்சிமிட்டும் நேரம்தான் …தான் இன்று சட்னிதான் என எண்ணியபோது திடீரென அவளது கால்கள் அந்தரத்தில் பறந்து பின் பூமியில் ஊன்றின.


” அவர் இந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் பண்ண இருக்கிறாராம் .அதுதான் அப்பா நல்ல இடமாக முடித்து தருவதாக கூறி இங்கேயே தங்க சொல்லியிருக்கிறார் ” வான்நிலவு விழியில் மின்ன கூறினாள் மணிரூபா .

பாரின் காரில் வந்து இறங்கியவன் நிலம் வாங்கி விவசாயம் செய்வானாமா …? இப்படியா ஒரு ஏமாளி குடும்பம் இருக்கும் ? வித்யாவிற்கு தூணில் பலமாக மோதிக் கொள்ளலாமென்று தோன்றியது .

அன்று இரவு உணவிற்கு பின் குடும்பத்தோடு பால்கனியில் அமர்ந்திருந்த  போது ,” உங்கள் குடும்ப விபரம் சொல்லுங்க தம்பி ” ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு கேட்டார் சடகோபன் .

‘ மவனே நீ மாட்டுனடா …’ என எண்ணியபடி ஆதிநாதனை பார்க்க அவன் ” நாங்களும் உங்களைப் போன்ற விவசாயக் குடும்பந்தான் அங்க்கிள் . காலத்திற்கேற்ப இப்போது சிறிது தொழிலை மாற்றிக் கொண்டோம் .நான் வெளிநாட்டில் படித்து விட்டு இங்கே வரவும் விவசாயத்தின் மீது ஆசை வந்து விட்டது .அப்பாவிற்கு இப்போது இதில் அவ்வளவாக ஆவல் இல்லாததால் நானே முயற்சி செய்ய லாமென வந்தேன் .தெய்வாதீனமாக அந்த ரங்கநாதனே அதற்கான ஏற்பாடுகளை செய்து விட டார் ” அங்கே இல்லாத ரங்கனை பவ்யமாக சேவித்துக் கொண்டான் ஆதிநாதன் .


” இந்த எலும்பை இப்படி பின்னால் ஒரு கடி கடிச்சுட்டு முன்னால் உறிஞ்சுனீங்கன்னா உள்ள இருக்குறது ஈஸியா வாய்க்கு வந்திடும் ” நல்லி எலும்பை சாப்பிடும் முறையை விளக்கினான் சந்திரன் .

முயன்று பார்த்துவிட்டு தன்னால் முடியாதென தோன்ற  மெல்ல அந்த எலும்புகளை இலையின் ஓரம் தள்ளினான் ஆதிநாதன் .அவனது செய்கையில் எழுந்த சிரிப்பை  மறைக்க வாய் நிறைய சோற்றினை அடைத்துக் கொண்டாள் மணிரூபா .

அதனை கண்டுகொண்ட ஆதிநாதன் நாக்கை வெளியே நீட்டி உரைக்கவில்லை …?என அவளிடம் ஜாடை கேட்டான் .இல்லை பழகிவிட்டது என அவனுக்கு பதில் ஜாடை சொன்னாள் அவள் .

இந்த பார்வை பரிமாற்றம் வித்யாவிற்கு கோபத்தை உண்டாக்கியது .ஆதிநாதனை முறத்தபடி ” ஏய் அடங்குடி ..நீ தின்னது போதும் .எந்திரிச்சி வா …” என்றாள் தோழியிடம் .

பின்னால் கை கழுவியதும் ஆதிநாதனிடம் பேச எண்ணி சற்று ஓரமாக மறைந்து நின்றாள் வித்யா .அவன் வந்து கை கழுவியதும் பேச அவனை நோக்கி போவதற்குள் அலாவுதீன் பூதமாய் கையில் துண்டுடன் அங்கே தோன்றினாள் மணிரூபா .

” கையை தொடச்சிக்கோங்க .பாவம் ரொம்ப காரமா ..?”

” நன்றிங்க .எப்படிங்க இவ்வளவு காரம் சாப்பிட முடியுது உங்களால் ..?”

” அது சின்ன வயசிலிருந்து எங்களுக்கு பழகிடுச்சுங்க ” 
பாவம் உங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லை போல ” 
கண்களால் சிரித்தாள் .

” ம் …” என்றபடி ஒருவரையொருவர் பார்த்தபடி சிறிதுநேரம் நின்றனர் .


” நேற்று கொடுத்த லிஸ்டில் பாதிதான் வந்திருக்கிறது .முக்கியமானதையெல்லாம் காணோம் .நான் எப்படி நாளைக்கு சமைப்பது ? “

” அம்மா இருக்கிறதை வச்சு கொஞ்சமா சமைங்க .இருக்கிற எல்லா அயிட்டமும் நாளைக்கே சமைக்கனும்னு இல்லை ” கிண்டலடித்தாள் மணிரூபா .

” நீ சும்மா இருடி ..ஒருநாள் ..ஒரு பொழுது …ஒரு நல்ல நாளுக்கு நான் நினைச்சது போல் செய்ய முடிகிறதா ? ” விசாலம் தொடர ..




” டேய் சந்திரா நீ பைக்ல திருச்சி போய் அம்மா கேட்கிற சாமானகளை வாங்கிட்டு வந்திடுடா ” சடகோபன் முடித்தார் .

” அப்பா வீட்டு சாமானை பற்றி எனக்கென்ன தெரியும் ? நான் வேண்டுமானால் சங்கீதாவை கூட்டிப் போகட்டுமா …? ” இதை சாக்காக வைத்து மனைவியுடன் ஒரு பைக் பயணத்திற்கு தயாரானான் .

ஆவலுடன் உள்ளிருந்து வந்த சங்கீதாவை பார்த்து முறைத்துவிட்டு ” அவளுக்கு வேலையிருக்கு .நீ நம்ம பாப்பாவை கூட்டிப் போ ்பாப்பா அண்ணன் கூட போடா ..” என்றாள் விசாலம் .

சுருங்கிய முகத்துடன் உள்ளே போன சங்கீதா ” அக்கா இந்த கிழவி ..தொல்லையும் , இந்த பாப்பா தொல்லையும் தாங்க முடியலை .எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கிடைச்சா இவளுகளை இரண்டில் ஒன்று பார்க்காமல் விட மாட்டேன் .” சாருமதியிடம் புலம்பினாள் .


தெரியாதவர்கள் போலவே காட்டிக்கொண்ட இருவரின் பேச்சிக்களில் ஏற்கெனவே கனன்று  கொண்டிருந்த மணிரூபாவின் கோபம் , இந்த பரிசளித்தலில் எரிமலையாகி வெடித்தது .இவன் என்ன கொடுத்தாலும் இளித்துக் கொண்டு வாங்கி விடுவேனென்று நினைத்தானா ..?

அவனளித்த பரிசை வாங்கி கீழே வீசினாள் .பெட்டி பிரிந்து அதனுள்ளிருந்து கீழே விழுந்த்து மெல்லிய சங்கிலியாய் தங்க கொலுசொன்று .

” யார் நீ ..? எனக்கு பரிசு கொடுக்க நீ யார் ? ..ஏய் ..” கையை சொடுக்கி வித்யாவை அழைத்தாள் .” உனக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம் .என்ன திட்டத்தோடு , யாரை ஏமாற்ற எங் கள் வீட்டினுள் நுழைந்திருக்கிறீர்கள் ..?

” ரூபா …நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாக கேளடி ..” என ஆரம்பித்த வித்யாவின் கைகளை பிடித்தான் ஆதிநாதன் .

” வித்து …அவளுக்கு எல்லாம் தெரிந்து விட டதென்று நினைக்கிறேன் .மேலே ..மேலே எதுவும் சொல்ல வேண டாம் ” என்றான் .

பிடித்திருந்த இருவரின் இணைந்த கைகளை வெறுப்புடன் பார்த்துவிட்டு ” சை …எவ்வளவு மட்டமான ஆட்கள் நீங்களிருவரும் .என்ன கண்றாவி உறவு …உங்களிருவருக்குமிடையே ..? “

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Vasanthi
Vasanthi
5 years ago

Y no updates for last one week and we are waiting, pls update

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!