Author's Wall Coming Soon Serial Stories

coming soon

 Thithikum Sooriyanae

 

 

” அங்கன நம்ம வூட்டுல என்ன நடக்குமோ …ஏது நடக்குமோன்னு பயப்படாதீங்க கண்ணுகளா உங்க மனசு போலத்தான் எல்லாம் நடக்கும் ….” சன்னல் வழியாக வெற்றிலை குதப்பலை துப்பினாள் .

” உங்க அப்பாவுக்கு நானு வாக்கு குடுத்துருக்கேன் .எல்லாம் உங்க இஷ்டம்தேன்னு .நான் எப்பவும் வாக்கு மாற மாட்டேன் …பயப்படாதீக ….”

இந்த நேரத்தில் தங்கள் இருவரின் படிப்பை பற்றியும் பேசி விடலாமென அவசரமாக ” எங்களுக்கு எங்கள் படிப்பு ரொம்ப முக்கியம் ஆன்ட்டி . அதற்கு மட்டும் எந்த இடைஞ்சலும் வந்திடக்கூடாது ….” அவசரமாக சொன்னாள் .

” ம் ….ம் …சொன்னாரு …சொன்னாரு …உங்கப்பா அதைத்தான் முக்கியமாக சொன்னாரு .கவலைப்படாதீங்க கண்ணுகளா …நம்ம தூத்துக்குடியில இல்லாத காலேசா ….இரண்டு பேத்தையும் நல்லா படிக்க வெச்சிடலாம் .”

சஞ்சயின் முகம் மாறியது .என்ன தூத்துக்குடியிலா …அவன் படிக்க நினைக்கும் படிப்பு அங்கே எங்கே இருக்கிறது …?


தீபிகா பயந்த்து போன்றேதான் அந்த சின்னவன் …அந்த சூரியன் இருந்தான் .அப்படியே அப்பா , அண்ணனின் நகலாக …அதே உயரம் , கறுப்பு , மீசை …அதே வெங்கல குரல் …கூடவே முகத்தில் எப்போதும் இறுக்கமும் அலட்சியமும் …

இவனா …இவனையா ..எனக்கு மணமுடிக்க எண்ணினார்கள் ….தீபிகாவின் மனது நொந்த்து .சேதுராமனுக்கு இன்னமும் இந்த திருமணம் நடக்காமல் போனதில் சிறு மனத்தாங்கல் உண்டு .நல்லவேளை அம்மா தலையிட்டு என்னை காப்பாற்றி விட்டார்கள் .நிம்மதி மூச்சு விட்டாள் .

” அக்கா அந்த ஆளை பார்த்தாயா ..? அது எப்படிக்கா இவரை போய் அந்த அம்மா உனக்கு கேட்டு வந்தார்கள் …?இவர்களுக்கெல்லாம் மனட்சாட்சியே கிடையாதா …? “

” டேய் நாம் உட்கார்ந்து கொண்டிருப்பது .அவர்கள் வீட்டில்.இங்கே வைத்தே எதையும் பேசாதே .அந்த விசயம்தான் இல்லையென்று ஆகிவிட்டதே .பிறகு என்ன …? இப்போது அந்த மாதிரி எண்ணம் இங்கே யாருக்கும் இருப்பது போல் தெரியவில்லையே ….”

சொல்லும்போதே எப்படி நேக்கா கோழிக்குஞ்சு போல் தூக்கிட்டு வந்தேன் பார்த்தீர்களா என பெருமையடித்த மயிலம்மாவின் பேச்சு நினைவு வந்த்து .


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Edmundcucky
5 years ago

What we keep here is , gentlemanlyoffers
Are you in? http://bit.ly/2SU1Vqe

Priya
Priya
5 years ago

Lovely super mem

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!