Author's Wall Coming Soon Serial Stories

Coming Soon

( இந்த நாவல் லட்சுமி பாலாஜி பப்ளிகேசன்ஸ் மூலம் வெளியானது .இப்போது கிண்டிலில் வாசிக்க , வாங்க கிடைக்கிறது . புத்தகத்தை வாங்க – 9566942486 )

” ஏய் கலாட்டா பண்ணாமல் சும்மா இருக்க மாட்டீர்களா …? ” தனது கன்னத்தை தேய்த்தபடி மீரா மெல்லிய குரலில் கூறினாள் .கன்னம் சிவந்நிருக்கிறதாம்மா ..இருக்கும் அவனை முதன்முதலில் பார்த்ததும் கன்னத்தில் ஏறிய சிவப்பு இது .போக மாட்டேனென்கிறது .அழுத்தி தடவிக்கொண்டாள் .

” என்னது கலாட்டா பண்ணக்கூடாதா …? பிறகு நாங்கள் எதற்காக காலேஜ் , ஆபிஸெல்லாம் லீவ் போட்டுவிட்டு இங்கே ஓடி வந்திருக்கிறோமாம் .கல்யாணம் முடிவதற்குள் உன்னையும் , உன்னவரையும்  ஒரு வழி பண்ணிவிடுவோம் …” ஆனந்த் உற்சாகமாக கூறினான் .

அவனது அந்த உன்னவரில் ஏதோ ஓர் சிலிர்ப்பு மீராவின் உடலில் ஓடியது .என்னவர் ….அவர் என்னவர் …ஆமாம் எனக்கே உரியவர் .நாளை இந்நேரம் நான் அவருக்கும் , அவர் எனக்கும் உரியவராயிருப்போம் .

நந்தகுமரனின் உருவம் மனதினுள் வந்து நிற்க , கண்கள் சொக்கி ஒரு மயக்கத்திற்குள் போனாள் .அன்று ….

மீரா நாக்கை கடித்தாள் .மறதியாக இரண்டு தடவை உப்பை போட்டு தொலைத்தேனா ….?

” சாரி …சாரி ..நான் கவனிக்கவில்லை….” கொழுந்தனிடம் வாயால் கேட்ட மன்னிப்பை கணவனிடம் கண்ணால் கேட்டாள் .

இப்போதுதான் அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்றிய நந்தகுமார் ” டேய் எங்கே போகிறாய் …? ” தம்பியிடம் கேட்டான்.

” எனக்கு காலேஜுக்கு நேரமாச்சுண்ணா …”

” சட்னியை வச்சுடு .சாம்பார் தொட்டு சாப்பிட்டு போ ….அவனுக்கு சாம்பார் ஊற்று …” மீராவிடம் இதை கூறியபோது அவனது பார்வை மீண்டும் தட்டிற்கு சென்றிருந்த்து .

இருவருக்கும் வேறு தட்டு வைத்து பரிமாறியபடி மீண்டுமொரு முறை ” சாரி ….” என்றாள் .

” அண்ணி தயவுசெய்து சொல்லிடுங்க .உங்களுக்கு சமைக்க தெரியுமா …? தெரியாது …? “

எவ்வளவு அலட்சியமான கையசைவு என்று நினைத்தாலும் அங்கே பார்க்கில் வைத்து பேசிய கொடூர பேச்சிற்கு இந்த பேச்சு பரவாயில்லை போல் தோன்றியது மீராவிற்கு .இருவரும் குரலை முணுமுணுப்பாக்கி மிக மெதுவாக பேசிக்கொண்டிரந்தனர் .

” ரொம்ப சந்தோசம் .என் பக்கத்தில் வருவதோ …என்னை தொடுவதோ …இது எதையும் நான் விரும்பவில்லை .அதையும் மனதில் வைத்துக்கொண்டு பழகுங்கள் …” வெட்டென கூறிவிட்டு போர்வையை முகத்திற்கு மேலே மூடிக்கொண்டாள் .

அதற்கு பதிலின்றி அழுத்தமான காலடியுடன் எழுந்து நின்றவன் அவளை நோக்கி வரலானான் .முகம் மூடியிருந்தாலும் அவனது இந்த வரவை உணர்ந்த மீராவின் மனது திடுக்கிட்டது .

என்ன இவன் …வராதே என்றால் …இப்போதுதான் வேகமாக வந்து கொண்டிருக்கிறான் .இப்போது என்ன செய்ய …? எழுந்து கதவை திறந்து வெளியே ஓடிவிடலாமா …? ஆனால் வெளியே இவன் அம்மா படுத்திருப்பாரே .அவருக்கு என்ன பதில் சொல்ல ….?இப்போதுதானே நமது பிரச்சினை நம்மோடு …அதனை வெளிக்காட்டிக்கொள்ளகூடாது என பேசியிருந்தோம் ….பேசியபடி இருக்க இவன் விட மாட்டான் போலவே ….

(இந்த நாவல்  விஷ்ணு பப்ளிகேசன்ஸில் மாத நாவலாக வெளியானது .இப்போது கற்பகம் புத்தகாலயம் மூலம் மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளது .புத்தகத்தை வாங்க – 9600063554 )

இந்தக் கல்யாணம் நடந்துடுமா சித்தி..?” கவிதா நான்காவது தடவையாக இந்த கேள்வியை சரளாவிடம் கேட்கிறாள்..
“ம்..ம்.. பார்க்கலாம்..” இந்த ரீதியில்தான் இருக்கின்றன சரளாவின் பதில்கள்.. அவளுக்கே தெரியாத ஒன்றை, புரிபடாத ஒன்றை கவிதா கேட்டால் அவளும்தான் என்ன சொல்வாள்..?
அவளை பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம்.. இந்த திருமணம் நடக்க கூடாது.. நடந்து விடக் கூடாது என்பதில் மட்டும் அவள் மிக உறுதியாக இருக்கிறாள்..
“இங்க பாரு கவிதா உன்னை மாதிரியே எனக்கும் இந்த கல்யாணம் நடப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.. இதை நிறுத்த என்னென்ன வழியிருக்கோ அத்தனை வழியையும் நான் செய்வேன் கவலைபடாதே..”
“இப்போ என்ன செய்ய போறீங்க சித்தி..?”
ஆவலாய் கேட்டவளுக்கு பதிலாக அழுத்திக் கொண்ருந்த தனது போனை திருப்பி காட்டினாள்.. நாராயணசாமிக்கு அழைப்பு செல்கிறது என்றது போன்..
“இங்வே வரச் சொல்லியிருக்கிறேன்.. வருவான்.. அவன்தான் ஏதாவது ஐடியா சொல்லனும்..”
“இங்கேயா..? வீட்டிற்கு வரச் சொல்லிருக்கலாமே சித்தி..?” கவிதா முகம் சுளித்தாள்..
“நாராயணசாமி என் தம்பியாய் பிறந்துட்டானே… உங்க வீட்டுக்குள்ளே வருவதற்குத்தான் அவனுக்கு 144 போட்டு வச்சிருக்கீங்களே..” சரளாவிடம் கோபம் வந்துவிட்டிருந்தது..

—————————-

—————————

“நேத்து என்ன ஏமாத்துனேன்..?”
“நேற்று நீங்க என்னை..” வேகமாக ஆரம்பித்து விட்டு தொடர முடியாமல் தடுமாறி நிறுத்தினாள்..
நேற்று அவளை ஏமாற்றினான்தான்.. குழந்தைக்கு காட்பரீஸ் பிரித்து கொடுத்து கன்னத்து முத்தம் வாங்குவதை போல், அவளிடம் தேவைகளை வாங்கிக் கொண்டான்.. அவளும் குழந்தை மாதிரி அவனது ஏமாற்றிற்கு பணிந்து.. நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது கவிதாவிற்கு..
சை.. நான் நேற்று ஏன் அப்படி இருந்தேன்.. நேற்று என்னை ஜெயித்த தைரியம்தானே இன்று இவனை இப்படி திண்ணக்கமாக பேச வைக்கிறது..
கோபமும், வெட்கமுமாக மாறி மாறி சிவப்புகளை காட்டிக் கொண்டிருந்த அவள் முகத்தை பார்த்தபடி இருந்தான்.. ஆனால் வழக்கமான மோக பார்வையுடன் அல்ல.. ஒரு வகை வெறித்தல் பார்வையுடன்..
“அப்படி ஒண்ணும் என் தேவைகள் முழுசா நிறைவேறலையே..” குறும்போ, கோபமோ ஏதோ ஒன்று தெரிந்த அவன் குரலில் திரும்ப வெட்கம் பரவியது அவளுள்..
முதல் நாளிரவு அய்யனார் எவ்வளவோ அவளது மித மிஞ்சிய கூச்சத்தை போக்க முயன்றாலும் முடியவில்லை.. மாறி மாறி கிடைத்த இடங்களில் எல்லாம் முத்தமிட்ட கணவனுக்கு பதிலாக ஒரே ஒரு கன்னத்து முத்தத்தை தரக்கூட அவளது வெட்கம் அவளை அனுமதிக்கவில்லை.. திரும்ப திரும்ப அவளிடம் கேட்டு பார்த்து விட்டு..
“இன்னைக்கு விட்டுர்றேன் டி.. நாளைக்கு சேர்த்து வச்சு வாங்குறேன் பாரு..” அவளது தலை முடிகளுக்குள் கை நுழைத்து பிடித்து ஆட்டியபடி காதல் சூளொன்றுரைத்தான்.. அந்த சர்க்கரை சபதத்தை எதிர்கொள்ளும் திராணியற்று அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.. அப்போது..
“ஏகத்துக்கும் குற்றச்சாட்டு வைத்துருக்க போல.. கால் வலிக்க போகுது வா.. இங்கே வந்து உட்கார்.. நிதானமாக பேசி முடிப்போம்..” தன் அருகே கட்டிலில் தட்டிக் காட்டி அழைத்தான்..
முத்த சபதங்களிலிருந்து மீண்டவள் மொத்தமாக அதிர்ந்தாள்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Saranya
5 years ago

Super for new novels

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!