Serial Stories

Kannam Vaitha Kalvanae – 41

     41

” இல்லையே ….” அவசரமாக தனது போனை அணைத்து மறைத்தாள் .

” வர்த்தன் குரூப்ஸ்னு டைப் பண்ணு ஜோதி .எங்கள் குடும்ப தொழில்கள் எல்லாமே வரும் ….”

” எனக்கு தேவையில்லை ….”

” அச்சா …..” நகை கலந்திருந்த்து அவன் குரலில் .

உன் ” அச்சா ” வில் தீ வைக்க ….முகத்தை மேடைக்கு திருப்பிக் கொண்டாள் .

கோபத்திற்கு , ஆராய்தலுக்கு , கேலிக்கு ….என்று எதற்கும் ஒரு அச்சா ….இவனும் இவன் பாஷையும் ….உதட்டை சுளித்துக் கொண்டாள் .

” என்னைத்தானே திட்டிக் கொணடிருக்கிறாய் …? ” அவள் உதட்டை கூர்ந்து பார்த்தபடி கேட்டான் .

” இல்லையே ரொம்ப கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் ….”

” அச்சா ….”

அடேய் …பல்லைக் கடித்தபடி எழுந்துவிட்டாள் ஜோதி .பந்தி நடந்து கொண்டிருந்த இடத்தில் போய் நின்று கொண்டாள் .அங்கிருந்த உறவினர்களை உபசரித்தபடி அந்த ஹாலை வலம் வரத் துவங்கினாள் .

பந்தியின் முடிவில் பரிமாற ஐஸ்க்ரீம் கப்புகள் டிரேயில் வைத்து கொண்டு வரப்பட , ஜோதிக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆசை வந்தது .

தன் கையை பார்த்தபடி எப்படி சாப்பிட , யாரையாவது உதவிக்கு அழைக்கலாமா …என யோசித்தபடி இருந்தவளின் கட்டுப்போட்ட கை மேல் மேல் பேப்பர் அட்டை நீக்கப்பட்டு மர ஸ்பூன் குத்திட்டு நின்ற ஐஸ்க்ரீம் கப் வைக்கப்பட்டது .

” இந்த கையால் உன் உடம்போடு கப்பை சேர்த்து பிடித்துக் கொண்டு , இந்த கையால் எடுத்து சாப்பிடு ஜோதி .கஷ்டமாயிருந்தால் நான் கப்பை  கையில் வைத்துக்கொள்கிறேன் நீ எடுத்து சாப்பிடு ….” ஐடியா சொன்னபடி அருகில் நின்றான் ஹர்ஷவர்த்தன் .

” கையை உடைத்துவிட்டு ….இப்போது சாப்பிட ஐடியா சொல்கிறீர்களா …? என் அக்காவின் மேரேஜ் …எனக்கு எவ்வளவு முக்கியமான விழா …அந்த விழாவில் என்னை இப்படி நொண்டிக் கையோடு நிற்க வைத்துவிட்டீர்களே ….சை ….அந்தப் பக்கம் போங்கள் .உங்களை பார்க்கவே பிடிக்கவில்லை ….”




பந்தி இடத்தின் கசகச பேச்சோடு பிறரது கவனத்தை கவராத வகையில் அடிக்குரலில் படபடத்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் .அவன் கொண்டு வந்து தந்த ஐஸ்க்ரீம் நழுவி கீழே விழுந்து பாழானது .

சே ….என் வீட்டு கல்யாணத்தில் இவனை பார்த்து பயந்து அப்போதிருந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறேன் .மண்டபத்தின் பின்வாசல் வழியாக பின்புறம் வந்து அங்கிருந்த மரங்களில் ஒன்றின் பின்னால் போய் நின்று கொண்டாள் .

கண் மூடி ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் .

அவளது இடது கை மெல்ல பற்றப்பட்டு அதில் ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது .கண்ணை திறந்து பார்க்க , அவளது கையில் ஒரு கோன் ஐஸ்க்ரீம் வைக்கப்பட்டிருந்த்து .

” இதை சாப்பிடு …” அதட்டலாக சொன்னபடி அருகே நின்ற ஹர்ஷவர்த்தன்  ஐஸ்க்ரீமை அவள் கையோடு சேர்த்து உதட்டருகே கொண்டு போய் தீற்றினான் .

” தள்ளினால் உன் ப்ட்டு சேரிதான் பாழாகும் ….,” எச்சரித்தான் .

ஐஸ்கரீமை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டவள் ” சாப்பிடுறேன் .நீங்க முதலில் இங்கிருந்து வெளியே போங்க ” நிர்தாட்சண்யமாக சொன்னாள் .

தன் பேன்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்தபடி அவளை பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் நின்றவன் ,

” சாரி ஜோதி ….” தாழ்ந்த குரலில் மென்மையாய் மன்னிப்பை வேண்டினான் .முன் சாய்ந்து தலையை லேசாக குனிந்தான் .

” மன்னிப்பை அளிக்கிற அளவு சாதாரண வேலை இல்லை நீங்கள் செய்தது ….”

” எனக்கு வேறு வழி தெரியவில்லை ஜோதி .நீ மிகவும் பிடிவாதமாக இருந்தாய் .அதனால்தான் நான் அந்த முடிவுக்கு வர வேண்டியதிருந்த்து ….”

” நீங்கள் ஒரு சாடிஸ்ட் …நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமென்பதற்காக கொலை செய்யக் கூட தயங்க மாட்டீர்கள் .அன்று சற்றே வேகமாக இடித்து என்னை தூக்கியிருந்தால் , இந்நேரம் நான் இல்லாமல் போயிருப்பேன் .அப்படியே செய்திருக்கலாமே …இந்த தொல்லை இல்லாமல் நான் ஒரேடியாக போய் சேர்ந்திருப்பேனே ….நீங்களும் நிம்மதியாக ….”

திடுமென பேச்சு பாதியில் உறைய ஜோதிக்கு நடந்த்து புரியவில்லை .மிக மெலிதான அந்த கழுத்தை ஒட்டி இருந்த தங்க செயின் கண்களுக்கு மிக அருகே தெரிந்த போதுதான் , அவனது மார்பில் தான் இருப்பதை உணர்ந்தாள….அவளை வேகமாக இழுத்து தன் மார்பின் மீது போட்டுக் கொண்டிருந்தான்  ஹர்ஷவர்த்தன் .  

மூச்சு விடுகிறேனா …இல்லையா …ஜோதிக்கு சந்தேகம் வந்தது .இடக்கையால் தனது நாசி துளையை தொட்டு பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள் …தன்னையே …

இவன் என்ன செய்கிறான் …? ஏன் இப்படி செயகிறான் ….மசமசத்த மூளையை தேய்த்து யோசித்து தனை மீட்க முனைந்தாள் .

” வேண்டாம்  ஜோதி .அப்படி சொல்லாதே …நான் அப்படி நினைக்கவில்லை …நான் செய்த்தெல்லாம் உன் நன்மைக்காகத்தான் ..நீ உயர்ந்த வாழ்வு வாழ வேண்டியவள் ஜோதி .இந்த சாதாரண வாழ்க்கை உனக்கு வேண்டாம் .என்னுடன் வந்து விடு .நான் உன்னை மகாராணி போல் ….”

அவன் பேச …பேச அருவெறுப்பு வர அவனை உந்தி தள்ளினாள் .என்ன வார்த்தை பேசுகிறான் …? இவன் என்னை என்ன நினைத்தான் …

” உன்னுடனா …? எதறகு உனது வரிசையான ப்ரெண்டுகளில் நானும் ஒருத்தியாக உன் பின்னால் வரவா …? “

” ஸ்டுப்பிட் உளறாதே …”

” செய்வதையெல்லாம் நீ செய்துவிட்டு முட்டாள் பட்டம் எனக்கு கட்டுகிறாயா …? நீ பெரிய பணக்காரனாக இருக்கலாம் . உனது பணம் உன்னிடம் …அது எனக்கு தேவையில்லை .கோடி கோடியாக எனக்கு நீ கொட்டிக் கொடுத்தாலும் உன் பின்னால் நான் வரமாட்டேன் ….போடா …”

” அதையும் பார்க்கலாம்டி .உன் அப்பா அம்மாவை விட்டு பிரித்து உன்னை என் பின்னால் வர வைக்கிறேன் பார்க்கிறாயா …? “

” ஓ அப்படி ஒரு திட்டமா உன்னிடம் …? பார்க்கலாமா ..?..”

” பார்க்கலாமா ….? “

கட்டைவிரலை மட்டுமதான் உயர்த்திக் கொள்ளவில்லை .மற்றபடி இருவரும் பகிரங்கமகவே சவால்தான் இட்டுக் கொண்டனர் .ஒருவரை ஒருவர் உஷ்ணமாக முறைத்தபடி நின்றிருந்தனர.

என்ன தைரியம் இவனுக்கு …எப்படி இந்த மாதிரி சவால் விடுவான் …ஆத்திரத்தில் நெஞ்சம் ஏறி இறங்க கட்டுப்படுத்த இயலா கோபத்துடன் வேக மூச்சுடன் நின்றிருந்த ஜோதியை இறுகிய முகத்துடன் பார்த்து நின்றிருந்தான் ஹர்ஷவர்த்தன் .

இரண்டே நிமிடங்கள்தான்…தனது முக பாவத்தை எளிதாக மாற்றிக் கொண்டான் .மந்தகாசமான மயக்கு புன்னகை ஒன்றுடன் , முகத்தை ஒளிர வைத்தபடி அவளை நெருங்கி கன்னம் தட்டினான் .

” சவால் விட்டாச்சா …முடிஞ்சதா…  சரி போ …போய் சாப்பிடு …”

அழகாக ரைம்ஸ் படித்து விட்டாயே என்ற வகுப்பாசிரியையின் பாராட்டை போல் இருந்த்து அவனது கன்னம் தட்டல் . அந்த நிதானம் ஜோதிக்கு மேலும் வெறியேற்ற …இவனை …என்ன செய்யலாம் …சுற்று முற்றும் பார்த்தாள் .




” ஏய் …ஜோதி …நோ …நோ …வயலன்ட் ….ப்ளீஸ் …” இரு கைகளையும் பாதுகாப்பு போல் அவன் குறுக்கே வைத்தபடி கேட்டுக் கொண்டிருக்கும் போதே , தன் கையிலிருந்த கரைந்து கொண்டிருந்த கோன் ஐஸ்க்ரீமை அப்படியே அவன் மூஞ்சியில் கொட்டி பரப்பினாள் .அப்படியே கோனை வைத்தே தேய்த்தாள் .

முதலில் தடுத்தவன் பிறகு அப்படியே நின்றான் .இரு கைகளையும் சரண் போல் தூக்கி ஒப்புக் கொடுத்தான் .

” முடிஞ்சதா …திருப்தியா….? “கண் மேல் அப்பியிருந்த்தை கர்ச்சீப்பால் துடைத்தபடி   ஐஸ்க்ரீம் ஒழுகும் மூஞ்சோடு கேட்டவன் ஜோதிக்கு சிரிப்பை தர வாய்க்குள் சிரிப்பை மென்றபடி  படு திருப்தியாக தலையசைத்தாள் அவள் .

” ஹப்பா சிரிச்சாச்சா …? ” மூக்கை துடைத்தபடி அவள் முகத்தில் பார்வை பதித்து கேட்டான் .

நான் சிரித்தால் என்ன …சிரிக்காவிட்டால் இவனுக்கென்ன மீண்டும் உர்ரென முகத்தை வைத்துக் கொண்டவளை பார்த்து ….

” அம்மா தாயே திரும்ப மலையேறாதே …உனக்காகத்தான் இந்த மாதிரியெல்லாம் பூசிட்டு நிற்கிறேன் . எவ்வளவு பிசுபிசுப்பாக இருக்கிறது தெரியுமா …? “ஒற்றை விரலால் கன்னத்து ஐஸை தொட்டு பார்த்தபடி  ஹர்ஷவர்த்தன் கெஞ்சல் போல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ….

” ஜோதி ….” என பின்னால் கதிரேசனின் குரல் கேட்டது .

கதிரேசன் …ஹர்ஷவர்த்தனை பற்றி மிக தெரிந்தவன் …அவனது உயரம் அறிந்தவன் .அவனை சந்திக்கும் ஆவலில் இருப்பவன் .அவன் முன்னால் தி கீரேட்  ஹர்ஷவர்த்தன் இப்படி ஒரு கோலத்தில் கோமாளி போல் நிற்பதா …?

ஜோதியின் மனது கேட்கவில்லை .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!