Author's Wall Coming Soon Serial Stories

ENNULLE ENGO ENGUM GEETHAM – 18

18

‘‘பப்பிம்மா எங்கேடா… வெளியே போக வேண்
டுமா?” ஆதரவாய்க் கேட்டான்.
‘‘இ… இல்லை படுக்க வேண்டும்..” அறைக்குத்
திரும்ப முயன்றவளைத தடுத்தான்.
‘‘பரவாயில்லை… இவ்வளவு நேரம் படுத்துத்தானே
இருந்தாய். வா..அப்படியே மெல்ல நடந்து வரலாம்.”
அவள் கை கோர்த்து வெளியே அழைத்துப் போனான்.
வெளிககாற்று பட்டதும் சுவாசம் சீராவது போல்
தோன்ற தலை பாரம் குறைந்தது. ஆனால் பண்ணையின்
ஒவ்வொரு இடமும் தந்தையை நினைவுபடுத்த, அவளுள்
துக்கம் மீண்டும் பீறிட ஆரம்பித்தது. உதட்டை மடித்து
அழுகையை அடக்கியவளின் தோளை அழுத்தமாகப்
பற்றி தன்னோடு இறுக்கினான் சூர்யபிரகாஷ்.
‘‘பப்பிம்மா வேண்டாம்டா.. அடக்காதே, அழுது
விடு..”
இந்த ஆதரவு சொல்லுக்காகவே காத்திருந்தாற்போல்
வெடித்து வந்தது அவளது அழுகை. தாழ்வாக போன 

மரக்கிளை ஒன்றில் அவளை அமர வைத்தவன்,
தானும் அருகமர்ந்து அவளைத் தன்னோடு அணைத்துக்
கொண்டான். தலை வருடியபடி, வழிந்த கன்னங்களைத்
துடைத்தபடி மனம் வலிக்க வலிக்க அவளைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தான்.
பத்மினியின் அழுகை சந்தம் குறைந்து விசும்பலாகி
நின்றதும் அவளை எழுப்பி தண்ணீர் குழாயருகே கூட்டிப்
போய் முகம் கழுவ வைத்தான்.
‘‘நான் ரொம்ப பெரிய சுயநலவாதி பப்பிம்மா…
இரண்டு வருடங்களாக இரக்கமே இல்லாமல் உன்னை
பிரிந்து இருந்தேனே… ஆனால் நம் பிரிவு இவ்வளவு
நீளமாக மாறிவிடும் என நான் நினைக்கவே இல்லை.”

 

 




 

 

‘‘எப்போதுமே உங்களுக்கு நீங்கள் நினைத்ததுதானே
நடக்க வேண்டும். இப்போதும் அதுதானே நடந்திருக்
கிறது..”
‘‘என்ன.. நான் நினைத்தது..?” சூர்யபிரகாஷின்
குரலில் நிதான பொறுமை.
‘‘இதோ.. இதுதான் வேறு போக்கிடமோ.. ஆதரிப்ப
வரோ இன்றி நான் உங்களிடம் அடங்கிக் கிடக்க
வேண்டுமென்பது..”
அழுகை கலந்த வறண்ட குரலில் இதனைக் கூறிய
பத்மினி சூர்யபிரகாஷை விட்டு விலகவில்லை. அவன்
அணைப்பை ஆதரவு வருடலை உடலால் மறுக்க
வில்லை. ஆனால் தனது முழு எதிர்ப்பையும் குரலில்
வழியவிட்டாள்.
சூர்யபிரகாஷ் அவளை அணைத்திருந்த பிடியை
மெல்ல விலக்கினான். அவளை விட்டு விலகி நின்றான்.

‘‘வா.. போகலாம்..” முன்னால் நடந்தான். ஏதோ ஓர்
திருப்தியுடன் பத்மினி அவனைப் பின்தொடர்ந்தாள்.

உச்சந் தலையில் வீழ்ந்த நீர் கண்களின் எரிச்சலை
அதிகப்படுத்த உடல் முழுவதும் வேதனை!
உணர்ந்தாள் பத்மினி. ஏனிந்த வேதனை.. ஒரேயடியாய்
போய்விட்டால் என்ன என்ற வெறுமை வந்தது. முதல்
நாள் இரவு வந்து படுத்ததிலிருந்து ஒரு நிமிடம் கூட
கண் மூடவில்லை. வெளியே வெளிச்சம் பரவுவதைப்
பார்த்ததும் எழுந்து குளிக்க ஆரம்பித்திருந்தாள்.
பாத்ரூமை விட்டு வந்தபோது அறைக்குள் கற்பகம்
நின்றிருந்தாள். ‘‘குளிச்சிட்டிருந்தியாம்மா… கூப்பிட்டுப்
பார்த்தேன். நீ பதில் சொல்லாததால்தான் உள்ளே
வந்தேன்.. தப்பாக நினைத்துக் கொள்ளாதம்மா..”
‘‘இல்லை..” என முணுமுணுத்தபோதும் என்னைக்
கண்காணிக்க அம்மாவை அனுப்பியிருக்கிறான் என்று
அவள் மனதில் தோன்றவே செய்தது.
‘‘தலையைத் துவட்டிக் கொள்ளம்மா..” கற்பகம்
அன்பாக அவள் தலையைச் சுற்றியிருந்த ஈர டவலை
எடுத்தபோது, அந்த அன்பை அவளால் மறுக்க முடிய
வில்லை.
‘‘அம்மா அழுக்குத் துணி இருக்குங்களா..?”
கேட்டபடி சாமந்தி வந்து நின்றாள்.
‘‘பாத்ரூம்ல இருக்கும்னு நினைக்கிறேன்” சொன்ன
படி கற்பகம் பாத்ரூமுக்குள் போய் சற்று முன் தான்
கழட்டிப் போட்டிருந்த அழுக்குத் துணியுடன் வருவதைக்
கண்ட பத்மினி திடுக்கிட்டாள்.

‘‘ஏன் இப்படி என்னை தர்மசங்கடப்படுத்து
கிறீர்கள்…?” அவள் கையிலிருந்த தனது அழுக்கு உடைகளைப்
பிடுங்கினாள்.
‘‘இதில் என்னம்மா இருக்கிறது? என் மகளென்றால்
செய்ய மாட்டேனா..?” பரிவுடன் கன்னம் வருடியவள்…
‘‘வா உட்கார்… தலையை உலர்த்தி விடுகிறேன்” அமர
வைத்து ஈரக் கூந்தலை உலர்த்தத் தொடங்கினாள்.
‘‘ஆஹா என்ன ஒரு மாமியார் & மருமகள்” வாயெல்
லாம் பல்லாக தெரிய அவர்களை சந்தோசமாகப்
பார்த்தபடி போனாள் சாமந்தி.
‘‘பத்மினி தலையைக் காய வைக்கவே ஒரு மணி நேரம்
வேண்டும் அத்தை. எவ்வளவு முடி பாருங்களேன்…”
சொன்னபடி வந்து நின்றாள் நிஷாந்தி. அவள் கை
பத்மினியின் கூந்தலை அளைந்தது.
இப்படிப் பேசுபவளா இவள்… பத்மினி நிஷாந்தியை
வெறித்தாள்.
‘‘டிரையர் போடலாமா…?” நிஷாந்தியின் யோச
னையை ‘‘அதெல்லாம் வேண்டாம்” என மறுத்தாள்
கற்பகம். துண்டினாலேயே முடியை பிரித்து துடைத்து
முடிக்க, நிஷாந்தி அழகாக அவளுக்குப் பின்னலிட்டு
முடித்தாள்.
‘‘வாம்மா சாப்பிடலாம்” இருவரும் அவளை
அழைத்துக் கொண்டு மாடியிறங்க, டைனிங் டேபிளில்
அமர்ந்திருந்த சந்திரபிரகாஷ் எழுந்து அவளுக்கு சேரை
இழுத்துப் போட்டான். சௌந்தரபிரகாஷ் அவளுக்குத்
தட்டை Gkzx வைத்தார்.

 




 

ஆளாளுக்கு அவளைத் தாங்க அனைவரும் தயாராக
இருக்க, பத்மினியால் மனதார அவர்களோடு கலந்து
கொள்ள முடியவில்லை. இவர்களையெல்லாம்
பின்னின்று ஆட்டுவிப்பவன் அதோ அங்கே வெளி
வராண்டாவில் போனை காதோடு ஒட்டி வைத்துக்
கொண்டபடி பார்க்காததுபோல் இங்கேயே பார்த்துக்
கொண்டிருக்கிறானே அவன்தான் என்று தோன்றியது.
நேற்று இரவு அவனிடம் வெறுப்பாகப் பேசியதற்காக
இன்று அவன் பக்கத்தில் வராமல் அவன் சொந்தங்களை
அனுப்பி வைக்கிறானாக்கும். அவனுக்கு முதுகு
காட்டியபடி சேரை திருப்பிப் போட்டுக் கொண்டாள்.
அரை இட்லிக்கு மேல் அவள் தொண்டைக்குள் இறங்க
மறுக்க, தட்டிலேயே கை கழுவினாள்.
‘‘பத்மினி… என்னம்மா…?” கற்பகம் பதற, ‘‘பசி
யில்லை..” என மாடியேறும்போது, விட்டு விடுங்கள்
என சூர்யபிரகாஷ் அன்னைக்கு ஜாடை காட்டுவதைப்
பார்த்தாள். பத்தே நிமிடத்தில் சாமந்தி ஒரு தம்ளர் நிறைய
சத்துமாவுக் கஞ்சியுடன் வந்தாள்.
‘‘என்னங்கம்மா சின்னப்புள்ள மாதிரி அடம்
பிடிச்சிட்டுக்கு. இதையாவது குடிங்க” உரிமை கலந்த
அதட்டலுடன் அவள் வாயில் பொருத்திய சத்து மாவில்
மாமியாரின் கை பக்குவ வாசனையை உணர்ந்தாள்
பத்மினி.
‘‘அத்தை செய்து தந்தாங்களா..?”
‘‘அட எப்படிம்மா கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க…?
ஒருத்தருக்கொருத்தர் இந்த அளவு புரிஞ்சு வச்சுக்கிட்டு
ஏம்மா இப்படி வீம்பு பிடிச்சிட்டு இருக்கீங்க..?”

பத்மினி பதில் சொல்லாமல் சத்துமாவை உறிஞ்சி
னாள்.
‘‘உங்க மாமியார் இப்படி உங்களுக்கெல்லாம் வகை
வகையாக செய்து போடுவாங்களாம்மா..?’
‘‘எங்களுக்கு சமையலா…? அவுங்களுக்கு கோவில்
கோவிலாகப் போகவே நேரம் சரியாக இருக்கும்..
எங்களை எங்கே பார்ப்பார்கள்? நாங்கள் அந்த வீட்டில்
அனாதை மாதிரி இருந்தோம்..”
‘‘என்னம்மா சொல்றீங்க…?”

 




 

பேச வாயெடுத்த பத்மினி இதழ்களை இறுக்கிக்
கொண்டாள். சே… சே…என்ன இது வேலை பார்க்கும்
பெண்ணிடம் அவள் வீட்டு விசயம் பேசலாமா?
பத்மினியின் வாய்தான் மூடிக் கொண்டதே தவிர,
அவள் மனம் திறந்து கொண்டது. அன்றைய சம்பவங்
களுக்குள் நுழைந்து கொண்டது.
அன்று நிஷாந்தியின் அபார்ஷன் விசயம் தெரிந்ததும்
அவள் போன் செய்தது தன் மாமியார் கற்பகத்துக்குத்தான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Shanthi
Shanthi
5 years ago

Pappy manasu udalum ore valiyile seyalpadanum.ivlo pasakaara kudumbam end ithuvarai dedi varalai.pirivirkku maami than kaaranamaa.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!