Author's Wall Coming Soon Serial Stories

Coming Soon

” சும்மா லேசாக அவர்னு ஒரு கோடி காட்டுனோம் .நீ உடனே கனவுலோகத்திற்குள் போக ஆரம்பிச்சிட்ட ….”

” இரண்டு பேரையும் வேனிலிருந்து உருட்டிடுவேன்டி .ஒழுங்காக சொல்லுங்க ….அவரை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் …? “

” நீயே சொல்லியிருக்க வேண்டும் .சொல்லவில்லை .அதனால் எங்களுக்கு தெரியாமலா போய்விடும் .நாங்கள் உன் அப்பாவும் , அம்மாவும் பேசிக் கொண்டிருந்த போது ஒட்டுக் கேட்டோமே ….”

ஜோதி இன்னமும் குழம.பினாள்.அம்மாவும் , அப்பாவுமா …ஹர்ஷாவை பற்றியா …என்ன பேசினார்கள் ….?ஜோதியின் மனது படபடவென அடித்துக் கொள்ள துவங்கியது .

” அம்மா , அப்பாவா …ஹர்ஷாவை பற்றியா ….? என்னடி பேசிக் கொண்டிருந்தார்கள் …? ” எவ்வளவோ மறைக்க முயன்றும் ஆவலில் பிதுங்கி விழுந்தன ஜோதியின் இதழ் சொற்கள் .

” ஹர்ஷாவா …? அது யாருடி …? “

மல்லிகாவின் இந்த கேள்வி ஜோதியின் மனதில் சுரீரென இறங்கியது .

” அ …அது …வந்து ….”

” நாங்கள் உனக்கு திருமணம் செய்ய பேசி வைத்திருக்கும்  அந்த அவரை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம் .நீ யாரை என்று நினைத்தாய் …? “

வேனின் திறந்திருந்த சன்னல்கள் வஞ்சனையன்றி ஙெளிக்காற்றை அள்ளி உள்ளே எறிந்து கொண்டிருந்த்தால் , இறுக்கமற்ற குளிர் சூழல்தான் வேனினுள் .ஆனாலும் ஏனோ ஜோதிக்கு வியர்த்து விட்டிருந்த்து .

கடவுளே …இவர்கள் யாரை பற்றி பேசினால் …நான் யாரையென்று நினைத்து …ஏன் இப்படி நினைத்தேன் …? கசகசத்த கழுத்தடியை துடைத்தபடி அவர்களுக்கான பதிலை யோசித்தாள் .


தலையிலும் உடலிலும் விழுந்த தலையணை அடிகளை புன்னகையும் , விளையாட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த ஜோதியின் காதில் ” என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் …? ” என்ற கதிரேசனின் குரல் கடித்த பற்களுக்கிடையே சன்னமாக கேட்டது .

மாமன் மகனையும் இந்த செல்ல விளையாட்டில் இழுத்துக் கொள்ளும் எண்ணத்துடன் நிமிர்ந்த ஜோதியின் பார்வை நிலை குத்தி நின்றது .

அங்கே அவஸ்தையான முகத்துடன் பற்களை கடித்தபடி நின்று கொண்டிருக்கும் கதிரேசனின் அருகில் நிறபவன் யார் …?

தலையில் விழுந்த அடியில் கண்களின் பார்வை கொஞ்சம் மங்கலாகி விட்டதோ …? தலைமுடி பறந்து வந்து கண்களை மறைத்ததால் எதிரிலிருப்பது சரியாக தெரியவில்லையோ …?




அந்த உயரமும் , நிமிர்வும் , ஆகிருதியும் …ஜோதியிடம் அவன்தான் …அவன்தானென பறையடிக்க ,

ஜோதி நம்பமுடியாமல்  தன் கண்களை மீண்டும் மீண்டும்  தேய்த்து விட்டுக் கொண்டாள் .

எப்படியும் போ என்று அவளை நினைத்த முகிலினியால் அந்த புது லெக்சரர் வரவும் அப்படி நினைக்க முடியவில்லை .ஏனென்றால் புதிதாக வந்த லெக்சரர் யதுநந்தன் .

கண்களை விரிய திறந்து வைத்தபடி நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவனையே  பார்த்தபடி இருந்தாள் முகிலினி .அலட்டலில்லாத நேர் நடையுடன் உள்ளே வந்தவன் ” ஹாய் ஸ்டூடெண்ட்ஸ் …” என்றான் பளிச் சிரிப்புடன் .

ஒரு நிமிடம் வகுப்பறையே அமைதி போர்த்திக்கொண்டது போல் தோன்றியது .

” நான் யதுநந்தன் .உங்கள் புது லெக்சரர் .உங்களை  அறிமுகப்படுத்திக்கொள்கிறீர்களா ? முதலில் இங்கிருந்து …” என்றபடி மாணவர்கள் வரிசைக்கு சென்றான் .

நெஞ்சம் படபடத்தது முகிலினிக்கு .இதைத்தான் நேற்று சொன்னானா ? சே நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே ? தனது முறைக்காக நகத்தை கடித்தபடி இருந்தாள் .

அவள் முறை வந்ததும் எழுந்து நின்றவளுக்கு அவன் முகம் பார்த்ததும் சொல்ல வந்தது மறந்துவிட்டது .





” ஏய் என்னடி சொன்ன அந்த பொண்ணுகிட்ட ? “

” ஒண்ணுமில்லையே நீ என் தோழதான .உனக்கு கொஞ்சம் மனநிலை பாதிப்பு உண்டு .கோபம் வந்தால் பக்கத்திலிருக்கிறவங்களை கடித்து வைத்துவிடுவாய்னு சொன்னேன் .அதான் ….” என்றாள்

” ஏய் எவ்வளவு கொழுப்புடி உனக்கு .என்னை பற்றி இப்படி கன்னாபின்னான்னு சொல்லி வச்சிருக்கிற ? உன்னை ….” என்றபடி வைஷ்ணவியின் முதுகில் அடிக்க தொடங்கினாள் .

குனிந்து அவள் அடிகளை வாங்கியபடி , அந்த பெண்ணை பார்த்தாயா ? என்பது போல் பார்த்தாள் வைஷ்ணவி .

முகிலினி அந்த பெண்ணை பார்த்த போது , அவள் சிறிது கலவரத்துடன் நகர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்து போய் நின்று கொண்டாள் .அடிக்கடி பயத்துடன் முகிலினியை திரும்பி பார்த்துக்கொண்டாள்.

இப்போது முகிலினிக்கே சிரிப்பு வந்தது .வைஷ்ணவி எப்போதுமே இப்படித்தான் .இது போன்ற குறும்புகளை செய்து சுற்றியிருப்போரை மகிழ்வித்துக்கொண்டே இருப்பாள் .ஆனால் இப்போது அவள் செய்த காரியம் …அவளையும் , யதநந்தனையும் அன்று தன் வீட்டில் பார்த்தது  நினைவு வர தன் புன்னகையை தொலைத்துவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள் முகிலினி .


அவன் வைத்துவிட்டு போன தட்டு அப்படியே கிடக்க , மனம் வாடிப்போனாள் முகிலினி .சாப்பிடாமல் போய்விட்டானே .நான் கொடுத்தேன் என்றா? …அன்று கூட அப்படித்தான் காபியை குடிக்காமல் போய்விட்டான் ….இல்லை இன்று விடக்கூடாது .இதனை நானே கொண்டுபோய் கொடுக்கிறேன் .

எழுந்து அந்த தட்டை எடுத்துக்கொண்டாள் .சுற்றி பார்த்தாள் . அனைவரும் அரட்டையில் ஆழ்ந்திருக்க மெல்ல படியிறங்கினாள் .முதல் படியில் கால் வைத்ததுமே பக்கவாட்டு இருளில் இழுக்க பட்டாள் .

திடீரென நிகழ்ந்த இந்த நிகழ்வில் கத்துவதற்கு வாயை திறக்க எண்ணியபோது உணர்ந்த ஸ்பரிசம் யதுநந்தனை உணர்த்த வாயை மூடிக்கொண் டாள் .இல்லை அவளது வாய் மூடப்பட்டது யதுநந்தனின் வாயினால் .திமிற முயன்றவள் சுவரோடு சேர்த்து அழுத்தப்பட்டாள் அந்த ஆணின் உடலினால் முரட்டுத்தனமாக .

மூச்சு முட்ட தொடங்கியது முகிலினிக்கு .இன்னும் சிறிது நேரத்தில் தன் எலும்புகள் அனைத்தும் நொறுங்கி விடுமென்றே எண்ணினாள் .கைகளால் அவன் தோள்களை பற்றி தள்ள முனைந்து தோற்றாள் .

எவ்வளவு நேரம் …? ஒரு மணி நேரம் போல் தோன்றிய இரண்டு நிமிடங்களுக்கு பின் அவளை விடுவித்தான் யதுநந்தன் .கால்கள் துவள சரிய போனவளை தூக்கி நிறுத்தியவன் அவள் நிற்க தடுமாற அவளை தாங்கி கீழே அமர வைத்தான் .

” தெளிவுபடுத்த சொன்னாயே …அதுதான் படுத்தினேன் …” சொன்னவன் படபடவென கீழே இறங்கி சென்றுவிட்டான் .

அவனுக்காக கொண்டு வந்த பண்டங்கள் சுற்றிலும் சிதறிக்கிடக்க மெல்லிய விசும்பலுடன் அங்கேயே அமர்ந்திருந்தாள் முகிலினி .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Saranya
5 years ago

Super

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!