Author's Wall Coming Soon

Coming Soon

வணக்கம் தோழமைகளே ,

இந்த தீபாவளி சிறப்பிதழாக ஜீயே பப்ளிகேசன்ஸ் மூலம் வெளியாகி உள்ள ” எங்கே நீயோ …நானும் அங்கே ” நாவல் இங்கே பதிவேற்றம் செய்யப்பட போகிறது .ஜீயே பப்ளிகேசன்சின் இந்த குடும்ப நாவலை இப்போது நீங்கள் உங்கள் ஊர் கடைகளில் வாங்கி படிக்கலாம் 

 

கீழே உங்களுக்காக கதையின் சிறு டீசர் ..





 

” நா …நான் உணர்ந்துவிட்டேன் அப்பா .உங்களை …அம்மாவை …என்னையே நான் அறிந்து கொண்டுவிட்டேன் .இந்த ஐந்து வருடங்கள் என்னையே எனக்கு உணர்த்தியிருக்கிறது .இனி … இனி ஒரு நிமிடம் கூட உங்கள் அனைவரையும் பிரிந்திருக்க முடியுமென்று எனக்கு தோன்றவில்லை .ஓடி வந்துவிட்டேன் ….”

கட்டிய கைகளுடன் தலை குனிந்து நின்ற மகனை உறுதியற்ற பார்வை பார்த்தார் வள்ளிநாயகம்.சரோஜா இப்போது திரும்ப வாயிலுக்கு வந்திருந்தாள் .இதயத்தின் படபடப்பு கண்களில் தெரிய கணவரையும் , மகனையும் பார்த்தபடி இருந்தாள் .

” எப்படி நம்புவது …? “

ஒரு சிறிய கேள்விதான் அதில் இது போன்றதோர் கூர் கத்தி சொருக முடியுமா …?

தந்தையை நிமிர்ந்து பார்த்த சந்திரமோகனின் கண்களில் வேதனை தெரிந்த்து.

———-

அவளது கஷ்டத்தை குறைப்பவன் போல் தான் முன்வந்து படியிறங்கினான் சந்திரமோகன் .பாதி படியில் நின்று கையை நீட்டினான் .

” துளசி …எப்படி இருக்கிறாய் …? “

கணவன் ….   மனைவிதான் …தாலி கட்டி குடும்பம் நடத்தி முத்து போல் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள்தான் .ஆனாலும் விதியின் விளையாட்டில் வருடங்களாக பிரிந்திருந்து இப்போது மீண்டும் பார்க்கும் தருணத்தில்  சிறு புது அறிமுகம் போலிருக்கட்டுமே என கையை நீட்டினான் .

தன் முன் நீண்ட கையை பார்த்ததும் துளசியின் முகம் வெளுத்தது …. வியர்த்தது.  கண்கள் சொருகின .தன்னுணர்விழந்து கீழே சரிய தொடங்கினாள் .

நொடியில் மனைவியின் நிலையை உணர்ந்தவன் தாவி போய் அவள் கீழே விழும் முன் கைகளில் தாங்கினான் .வள்ளிநாயகமும் , சரோஜாவும் பதறியபடி வர அவர்களையும் ஆசுவாசப்படுத்தினான் .

” உள்ளே போகலாம்….” சொன்னபடி மனைவியை கைகளில் தூக்கிக் கொண்டான் .

——-

” துளசி போதும் நிறுத்து .பழையதை பேச வேண்டாம் …”

” ஏன் பேசக்கூடாது …? அதெல்லாமே என் மனதில் ரணமாக இருக்கிறதே .என்னால் எப்படி மறக்கமுடியும் …? இதோ இந்த குழந்தையை வயிற்றிலேயே அழிக்க சொன்னவர்தானே நீங்கள …? “

” துளசி என்னம்மா சொல்ற …? ” இவர்களின் சண்டை சத்தம் கேட்டு வந்த சரோஜா அதிர்ந்து கேட்க

, சந்திரமோகன் ” துளசி வாயை மூடு .குழந்தைகள் கவனிக்கிறார்கள் …” எச்சரித்தான் .

ஆனால் துளசி அவனை காயப்படுத்தி விடும் ஒரே நோக்கத்தோடு ” ஆமாம் அத்தை இவர் தட்சணா வயிற்றில் உண்டானது தெரிந்ததும் , இவரோடு நான் அமெரிக்கா வருவதில் தடை வருமென்று அவளை ….” பேச்சு முடியும் முன்பே ” சப் ” என கன்னத்தில் அடி வாங்கினாள் .

” போதும் வாயை மூடு ….” உறுமினான் .பெற்றோர்கள் சண்டையில் நடுங்கிய குழந்தைகள் பாட்டியிடம் ஒடுங்கினர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Uma srinivasan
Uma srinivasan
5 years ago

Mam, please mam, write new novels

Shanthi
Shanthi
5 years ago

Ithu erkanave vantha kathaiyaa

Padma Grahadurai
Reply to  Shanthi
5 years ago

ஆமாம் சாந்திக்கா . இது மறு பதிப்பு

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!