Beauty Tips

BEAUTY

அழகை விரும்பாத மனிதர்கள் இருக்க முடியுமா …? குறிப்பாக நாம் …பெண்கள் . பெண்ணென்றாலே அழகுதான் .ஒவ்வொரு பெண்ணும் ஒரு வித அழகுதான் .பளபள கறுப்பும் அழகுதான் …வெளிறிய வெளுப்பும் அழகுதான் … மசமச மாநிறமும் அழகுதான் . அலங்காரம் என்பது நமது அழகை வெளிப்படுத்துவது .புகை படிந்து கிடக்கும் அரிக்கேன் விளக்கின் கண்ணாடியை துடைத்தால் உள்ளே முத்துப் போல் சுடர் விடுமே தீப ஒளி அதுவே பெண்ணின் அழகு .அந்தக் கண்ணாடியை துடைத்து மெருகேற்றும் முறையையே இங்கே நாம் பார்க்க போகிறோம் .
இங்கே குறிப்புகளை எழுதுபவர் எனக்கு தெரிந்த உறவின பெண் .நிறைய படித்தவர் .உயர் பதவியில் இருப்பவர் .அழகியலில் ஈடுபாடு கொண்டவர் .நவீன அலங்கார சாதனங்களை அன்றாடம் உபயோகிப்பவர் .அதனால் அவற்றின் சாதக பாதகங்களை அறிந்தவர் .எனது வேண்டுகோளின் கீழ் நம் தளத்தில் அழகு குறிப்புகள் சொல்ல ஒத்துக் கொண்டுள்ளார் . அவரது பதிவுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கும் .ஆனால் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும் . குறிப்புகளை பற்றிய அலங்கார பொருட்களை பற்றிய உங்கள் சந்தேகங்களையும் அவர் தீர்த்து வைப்பார் . மேலும் உங்களுக்கு தெரிந்த அலங்கார விசயங்களை , நுட்பங்களை நீங்கள் அவருடன் பகிர்ந்து கொள்ளலாம் .இவை நம் தளத்தின் மற்ற வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இனி உங்களை அழகு படுத்திக் கொள்ள தயாராகுங்கள் .
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!