Cinema Entertainment

மிஸ் பண்ணாம பார்க்க 5 மலையாள க்ரைம் திரில்லர் படங்கள்..

க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால் கோலிவுட்டில் கமர்சியல் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனாலும் ராட்சசன் போன்ற திரில்லர் படங்களும் வருவதுண்டு.

இதில் மலையாளத் திரையுலகை எடுத்துக் கொண்டால் அங்கு இது போன்ற படங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அவை அனைத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. அப்படி மலையாளத்தில் வெளிவந்த சிறந்த ஐந்து திரில்லர் படங்களை பற்றி இங்கு காண்போம்.

வேட்டா

குஞ்சாக்கோ போபன், மஞ்சுவாரியர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. காணாமல் போன நடிகையை இரண்டு போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை.

நொடிக்கு நொடி திருப்பங்களும் த்ரில்லரும் நிறைந்த இப்படம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். இதன் தமிழ் டப்பிங் யூடியூப் தளத்தில் உள்ளது.




ஃபாரன்சிக்

கடந்த 2020ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வரிசையாக காணாமல் போகும் பெண் குழந்தைகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவார்கள்.

அதை கண்டுபிடிக்க வரும் போலீசுக்கு உதவியாக பாரன்சிக் ஆள் ஒருவரும் வருவார். இறுதியில் குற்றவாளி யார் என்பதை இப்படம் திரில்லர் பாணியில் சொல்லி இருக்கும். பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைக்கும் இப்படம் தமிழில் கடைசி நொடிகள் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.

கண்ணூர் ஸ்குவாட்

மம்முட்டி நடிப்பில் கடந்த வருடம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் இருக்கும் இந்த கதை இறுதிவரை பரபரப்பாக நகரும்.

சிக்கலான ஒரு வழக்கை கண்டறியும் தனிப்படை அதன் மர்ம முடிச்சுகளை எப்படி அவிழ்க்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் இப்படத்தை நீங்கள் கண்டு களிக்கலாம்.




ஜன கண மன

பிரித்விராஜ் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு அரசியல் திரில்லர் கதையாகும். மர்மமான முறையில் கொல்லப்படும் கல்லூரி பேராசிரியைக்காக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

அது வன்முறையாக மாறும் நிலையில் போலீஸ் இந்த வழக்கை கையில் எடுக்கின்றனர். அதைத்தொடர்ந்து வக்கீலாக வரும் பிரித்விராஜ் இந்த வழக்கை எப்படி தீர்க்கிறார் என்பதுதான் கதை. பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்.

லூசிஃபர்

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அரசியல் திரில்லர் கதையான இதில் முதல்வர் இறந்து விடுவார். அதை தொடர்ந்து நடக்கும் பதவி போட்டிகளும் மர்மங்களும் தான் படத்தின் கதை.

அடுத்து என்ன என்று நொடிக்கு நொடி எதிர்பார்க்க வைக்கும் இப்படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!