Samayalarai

மணத்தக்காளி கீரை ரசம்…

மணத்தக்காளியை மிளகு தக்காளி என வேறு பெயரிலும் சொல்வதுண்டு. இதில் கருப்பு, சிவப்பு என இரண்டு வகைகள் உள்ளது. இலை, காய், பழம் என அனைத்தும் மருத்துவ பயனுடையது. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.  வாய் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரையில் ரசம் செய்யலாம்.




தேவையான பொருட்கள்:

நெய் – 2 டீஸ்புன்
கடுகு – 1 டீஸ்புன்
சீரகம் – 1 டீஸ்புன்
மிளகு- 1 டீஸ்புன்
வரமிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10-15
தக்காளி – 2
மணத்தக்காளி கீரை – 4 பேர் சாப்பிடும் அளவிற்கு
அரிசி கழுவிய நீர் – தேவைகேற்ப

வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை: இன்னும் பல நன்மைகள் - லங்காசிறி நியூஸ்

செய்முறை விளக்கம் 

1. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,மிளகு சேர்க்கவும். பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2. நன்கு வதங்கியதும் அதனுடன் நறுக்கிய தக்காளியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். இப்போது அதில் மணத்தக்காளி கீரை மற்றும் அரிசி கழுவிய நீர் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது ரசம் ரெடி..

3. இந்த ரசம் கோடை காலத்திற்கு ஏற்றது.. உடலை குளுமையாக வைத்திருக்கும்…




மணத்தக்காளி கீரையின் பயன்கள்

1. மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க நன்கு தேய்த்து வந்தால் குணமாகும்.

2. மணத்தக்காளி கீரைக்கு நுண்கிருமிகளை வேரறுக்கக் கூடிய தன்மையும், நோய் கிருமிகளை அழிக்கும் தன்மையும் உள்ளது. இதன் காய்களை வற்றலாக செய்து சாப்பிடுவது மூலமாகவும் உடலுக்கு நன்மை கிடைக்கிறது.

3. மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!