Cinema Entertainment

பைக்கை கிப்ட் பண்ணிய ஷாலினி.. வைரலாகும் அஜித் பிறந்தநாள் கிப்ட் போட்டோஸ்!

ஆசை நாயகன், காதல் மன்னன், தல என்று பல்வேறு பரிணாமங்களில் சினிமாவை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் அஜித்குமார். மே 1 என்றால் உழைப்பாளர் தினம் ஞாபகம் வருகிறதோ இல்லையோ, அஜித் பிறந்தநாள் எல்லோருக்கும் ஞாபகம் வந்துவிடும்.




Ajith | Dark Devil (@ajithFC) / X

இப்பதான் அமராவதி படத்தில் தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே என்று அரும்பு மீசையுடன் பாடிய அஜித்தை பார்த்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள தலைவனுக்கு 53வது பிறந்தநாள் வந்துடுச்சு. முன்னெல்லாம் அஜித் பிறந்தநாள் நாம தான் கொண்டாடிட்டு இருப்போம்.

அவர் எங்க என்ன பண்ணிட்டு இருக்காருன்னு எந்த விஷயமும் வெளியே வராது. ஆனால் எப்போ ஷாலினி சமூக வலைத்தளத்திற்குள் வந்தாங்களோ அன்னைல இருந்து அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். இந்த வருட பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மாசாக வெளியிட்டு விட்டார் ஷாலினி.

‘ உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என்ற ஒரு பாட்டிலேயே ஆதர்ஷ தம்பதிகளாக மாறிவிட்டார்கள் அஜித் மற்றும் ஷாலினி. கடந்த மாதம் 24 ஆம் தேதி தான் இருவருக்கும் திருமண நாள் வந்தது. அப்போது கேக் வெட்டி இருவரும் ஊட்டிக்கொண்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலானது.

அஜித்தின் 53வது பிறந்த நாளை பயங்கர கோலாலமாக கொண்டாடி இருக்கிறார் ஷாலினி. அத்தோடு மட்டுமில்லாமல் அஜித்துக்கு ரொம்ப பிடித்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். 30 லட்சம் மதிப்பிலான டுகாட்டி என்னும் பைக் தான் அவர் பரிசளித்திருப்பது.




கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த பைக் நிறுவனம் புகழ்பெற்று இருந்தாலும், சென்னைக்கு இப்போதான் புதுசு. மோட்டார் சைக்கிள் ரேஸுக்கு அதிகம் பயன்படுத்தும் பைக் வகைகளில் முன்னணியில் இருப்பது இதுதான். இந்த பைக் உடன் ஏர்பேக் இணைக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க பைக் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த பைக் நிறுவனம் இதில் நிறைய டெக்னாலஜியை புகுத்தி இருக்கிறது. இந்த பைக்கின் எடை 193.5 கிலோ. 1,180 மில்லி மீட்டர் நீளமும், 2,105 மில்லி மீட்டர் அகலமும் கொண்டது.

இந்த பைக்கின் சீட் உயரம் 850 மில்லி மீட்டர் கூடிய சீக்கிரம் அஜித் இந்த பைக்கை ஓட்டும் வீடியோவும் வெளியில் வர வாய்ப்பு இருக்கிறது. ஷாலினி இந்த பைக்கை அஜித்துக்கு பரிசளித்திருப்பதால் கண்டிப்பாக சென்னையில் டுகாட்டி பைக் பெரிய அளவில் வைரலாகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!