Uncategorized

துபாய் புதிய விமான நிலையம்.. சுவாரஸ்ய தகவல்..!!

துபாய் அரசு உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளது. துபாயில் Al Maktoum சர்வதேச விமான நிலையத்தின் நவீன வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்கு அரசு அனுமதி தந்துள்ளது.

Dubai airport maintains its top spot for international passengers | Times of India Travel

இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.




அல் மக்டவும் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய டெர்மினல்களை அமைப்பதற்கான கட்டுமானத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து அல் மக்டவும் விமான நிலையம் திறக்கப்பட்ட உடன் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முஹம்மத் பின் ரஷித் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அல்மக்டவும் சர்வதேச விமான நிலைய பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உலகிலேயே அதிக பயணிகளை கையாளக்கூடிய திறன் கொண்ட விமான நிலையமாக இருக்கும் என கூறியுள்ளார்.

அதாவது ஓராண்டுக்கு 260 பில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் கையாளும் வகையில் கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். அல் அக்டவும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த உடன் துபாய் விமான நிலைய செயல்பாடுகள் முழுவதும் இங்கே மாற்றப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட இது ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதன் மூலம் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக அல் அக்டவும் விமான நிலையம் செயல்படும் என தெரிவித்துள்ளார். புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய அல்மக்டவும் சர்வதேச விமான நிலையத்தில் 400 டெர்மினல் நிறுத்தி வைப்பதற்கான இடங்களும், ஐந்து பேரலல் ரன்வேக்களை கொண்டதாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார். விமான போக்குவரத்து துறையின் நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒரு விமான நிலையமாக இது இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.




ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த விமான நிலையத்தை சுற்றி ஒரு நகரத்தையே கட்டமைக்க இருப்பதாகவும் அங்கே இலட்சக்கணக்கான மக்கள் குடியேற போவதாகவும் கூறியுள்ளார் .உலகின் முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் டிரான்ஸ்போர்ட் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த பகுதியில் வர இருக்கின்றன என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

வருங்கால சந்ததியருக்கான நிலையான மற்றும் பாதுகாப்பான ஒரு விமான நிலையமாக இது செயல்படும் என்றும் உலகின் விமான போக்குவரத்து மையமாக அல் அக்டவும் விமான நிலையம் மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த விமான நிலைய திட்டத்தின் மதிப்பீடு 2,900 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு ஆண்டுக்கு 150 மில்லியன் பயனாளர்களை கையாளும் வகையில் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்த பணிகள் அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் முடிவடையும் என்றும் துபாய் அரசு தெரிவித்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!