lifestyles News

கண்டிப்பா முதல இதை செய்யுங்க! அப்போ தான் கேஸ் சிலிண்டர் மானியம் கிடைக்கும்?

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஜூன் 1 முதல் புதிய விதிகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போது ரூ.855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, மத்திய அரசு மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்கிறது.

வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்களுக்கு ரூ.40.71-ஐ மானியமாக வழங்கும் மத்திய அரசு, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு கூடுதல் மானியத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்கிறது. மீதமுள்ள பணத்தை நுகர்வோர் சிலிண்டருக்கு செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும்.




சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் சிலருக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட மானியம் கிடைக்கவில்லை. இதனிடையே, சமையல் எரிவாயு வைத்திருப்பவர்கள் அனைவரும் கேஸ் ஏஜென்சிக்கு சென்று, தங்களது ஆதார் மற்றும் கைரேகையை பதிவிட வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கு முன்பு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், தற்போது மே 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், KYC முடித்தவர்களுக்கு மட்டுமே ஜூன் 1 முதல் மானியம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, KYC செய்யாதவர்களுக்கு குறைவான சிலிண்டர்களே வழங்கப்படும் என்றும், மானியமும் வழங்கப்படாது என்றும் மத்திய அரசு புதிய விதிகளை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க, உடனடியாக KYCஐ முடிப்பது அவசியமாகிறது.

இதற்காக, எரிவாயு நுகர்வோர் எண், முகவரி ஆவணமாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குத்தகை ஒப்பந்தம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கேஸ் ஏஜென்சியில் வழங்க வேண்டும். இதையெல்லாம் முடித்த பிறகும் மானியம் கிடைக்காவிட்டால், 18002333555 அல்லது 1906  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் புகாரை பதிவு செய்து தீர்வு காணலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!