Samayalarai

ஆரோக்கியமான சைவ கோலா உருண்டை

குழந்தை பருவத்தில் சாப்பிட பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாக திகழ்வதுதான் பீட்ரூட். இந்த பீட்ரூட் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் பலரும் விரும்பி சாப்பிடாத ஒரு காய்கறியாகவே திகழ்கிறது. ஆனால் இந்த பீட்ரூட்டில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த இந்த பீட்ரூட்டை பயன்படுத்தி நாம் பொறியியல், கூட்டு என்று செய்வோம்.

அதற்கு பதிலாக மட்டன் கோலா உருண்டை சுவையை மிஞ்சும் அளவிற்கு ஒரு சைவ கோலா உருண்டையை செய்து கொடுத்தோம் என்றால் வீட்டின் இருக்கக்கூடிய அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அருமையான சைவ கோலா உருண்டையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.




தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 2

மீல்மேக்கர் – 50 கிராம்

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 8 பல்

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – 1/2 இன்ச்

கருவேப்பிலை – 1 இனுக்கு

சோம்பு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம் :

  • முதலில் மீல்மேக்கரை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து பிறகு அதில் இருக்கும் தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • பீட்ரூட்டை தோலை நீக்கிவிட்டு கேரட் துருவுவது போல் பொடியாகத் துருவி கொள்ளுங்கள். இதனுடன் நாம் கேரட்டை கூட சேர்த்து செய்யலாம். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மீல்மேக்கர் இவை அனைத்தையும் சேர்த்து மூன்று முறை பல்ஸ்மோடில் வைத்து அரைக்க வேண்டும்.




  • பிறகு அரைத்த இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிவிட்டு இதனுடன் பொடியாக துருவிய பீட்ரூட்டையும் சேர்க்க வேண்டும். அடுத்ததாக சோம்பு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா இவை அனைத்தையும் சேர்க்க வேண்டும்.

  • பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொட்டுக்கடலை மாவிலிருந்து மூன்று டீஸ்பூன் அளவிற்கு இந்த கலவையுடன் சேர்த்து நன்றாக பிணைந்து மாவை தயார் செய்ய வேண்டும்.

  • மாவு தயாரான பிறகு கோலா உருண்டை உருட்டுவது போல இதையும் உருட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் கோலா உருண்டையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும்.

  • எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கோலா உருண்டையை எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு பிறகு பிரட்டி விட்டு இரண்டு நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான பீட்ரூட் கோலா உருண்டை தயாராகி விட்டது.

  • இந்த கோலா உருண்டையை நாம் சப்பாத்திக்கு கிரேவி செய்யும் பொழுது சேர்த்து செய்யலாம். மட்டன் கோலா உருண்டை குழம்பு வைப்பது போல இதை பயன்படுத்தி சைவ கோலா உருண்டை குழம்பும் வைக்கலாம்.

  • எப்பொழுதும் ஒரே மாதிரி சமைத்து தருவதற்கு பதிலாக இப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் வித்தியாசமாக செய்து கொடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!