Entertainment lifestyles

அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு போக வேண்டிய 5 மலைப்பிரதேசங்கள்..

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் வெயில் வாட்டி வதைக்கிறது. அதனாலேயே ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களில் பலரும் குவிந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அந்த இடங்களை தாண்டி தமிழ்நாட்டில் அழகும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் இருக்கின்றன. அதில் இந்த ஐந்து மலைகள் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ற இடமாக உள்ளது.




பன்றி மலை

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலை இருக்கிறது. நீர்வீழ்ச்சிகள், நீரோடைகள், பசுமையான சூழ்நிலை என இந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடம் தான் இந்த பன்றி மலை.

மஞ்சு மலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அன்செட்டியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மஞ்சு மலை இருக்கிறது. ட்ரெக்கிங், கேம்ப்பிங் செய்வதற்கு இது ஏற்ற இடம் ஆகும். அதேபோல் குளிர்ச்சியான வானிலையும் நமக்கு புத்துணர்வை கொடுக்கும்.

சிறுமலை

திண்டுக்கல்லில் இருந்து 25கி.மீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் இந்த மலை இருக்கிறது. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி, பழமையான சிவாலயம், வெள்ளிமலை முருகன் கோவில், வேளாங்கண்ணி தேவாவையம் என பல இடங்கள் பார்ப்பதற்கு ஏற்றது.




கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலை மௌண்டைன் ஆப் டெத் என்று அழைக்கப்படுகிறது. மலைத்தொடர்கள் நீர்வீழ்ச்சி என இயற்கை மனம் மாறாமல் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது. அதேபோல் இங்கு வீட்டிற்கு தேவையான பொருட்களும் தரமான விலையில் கிடைக்கும்.

கொழுக்குமலை

உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் பகுதி இது. தேனி மாவட்டத்தில் இருக்கும் இந்த மலை மூணாரின் இதயம் என்றும் சொல்லப்படுகிறது. கேரளாவில் சூரியநெல்லி வழியாக இந்த பகுதிக்கு செல்ல வேண்டும்.

இந்த மலையில் சூரிய உதயத்தை காண்பது அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதே போல் அங்கு கிடைக்கும் டீயும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

அது தவிர அங்கு பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது. அங்கேயே தங்கி பார்க்க வேண்டும் என்றால் அதற்கான வசதியும் செய்து தரப்படும். இது எல்லாம் மொத்த பேக்கேஜாக பணம் செலுத்தி விட்டால் சுவையான உணவில் இருந்து டென்ட் போட்டு தங்குவது வரை அனைத்து வசதிகளும் கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!