Entertainment lifestyles News

Justdial உருவானது எப்படி தெரியுமா..?

குடும்ப வறுமைச் சூழ்நிலை காரணமாக வெங்கடாசலம் ஸ்தானு சுப்ரமணி (விஎஸ்எஸ் மணி) தனது சிஏ பரிட்சையை எழுதாமல் விட்டுவிட்டார். ஒரு இன்பர்மேஷன் டைரக்டரி கம்பெனியான யுனைடெட் இன்பர்மேஷன் டேட்டாபேஸ் இந்தியாவில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்தார். அதன்பின்னர் தான் அவருக்கு அந்தப் பிரச்னை புரிந்தது.

Justdial - Wikipedia

கஷ்டமான விவரங்கள் பட்டியலைக் கொண்ட எல்லோ பேஜஸ் புத்தகத்துக்காக அவர் பல மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது. அது நேரத்தை விழுங்கும் வேலையாக இருந்தது மட்டுமல்லாமல் அவுட்டேட்டடாக இருந்தது.




இதை ஒரு போன்கால் மூலம் செய்யலாம் என நினைத்தார். 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுப்ரமணி தனது வேலையை விட்டு விட்டு ஆஸ்க்எஃப்எம் (Askfm) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆஸ்க்எஃப்எம் நிறுவனம் (Askfm) 5 நகரங்களில் செயல்பட்டது.

ஆனால் அப்போது மக்கள் தொகையில் 1 சதவீதத்தினரிடம் தான் போன் இருந்தது. டயல் இன் கட்டணம் ரூ.15000 ஆக இருந்தது. இதனால் அவரது யோசனை வெற்றி பெற வில்லை. இந்தச் சூழ்நிலையில் முயற்சியைக் கைவிடலாம் என்று யோசித்தார், ஆனால் அவரது தந்தை மரணத்திற்கு பின்பு அவரது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.

1996 ஆம் ஆண்டில் டெலிகாம் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் அப்போது லேண்டு லைன்களும் மொபைல் போன்களும் இருந்தன. வெறும் ரூ.50,000 முதலீட்டுடன் 5 ஊழியர்களை வைத்து 300 சதுர அடியில் சிறிய கேரஜை தனது அலுவலகமாக மாற்றினார். அதை தனது இறுதி முயற்சியாக விஎஸ்எஸ் மணி இந்த அலுவலகத்தை தொடங்கினார்.

1996 இல் ஜஸ்ட் டயல் பிறந்தது, டயல் இன் சர்வீஸை 888-8888 என்ற சிறப்பு எண்ணை வைத்துத் தொடங்கினார். அந்த எண்ணில் மக்கள் தங்களுக்குத் தேவையான டாக்டர்கள், ரெஸ்டாரென்ட்கள் விவரங்களை எல்லோ பேஜஸைப் பார்க்காமலேயே தெரிந்து கொண்டனர். இந்த எண்ணை அவர் இன்டர்நெட்டில் கொடுத்து தொடர்பு தருபவர்களுக்கு கமிஷன் அளித்தார். அதேவேளையில் 2001இல் இந்தியாவில் டாட் காம் தொழில் பெரிய அளவில் உருவானது. அவரது வெப்சைட் கிராஷ் ஆனது.

மணி தனது நல்லநேரம் விரைவில் வரும் என்று நம்பினார். இதனிடையே டயல் இன் பிஸினஸை அவர் ரூ.48 கோடி வருவாய் வரும்படி 2006இல் உயர்த்தினார். இந்த வளர்ச்சியைப் பார்த்துவிட்டு எஸ்ஏஐஎஃப் பார்ட்னர்கள் ரூ.48 கோடி முதலீடு செய்தனர். இந்த நிதியுடன் அதிர்ஷ்டம் எல்லாவற்றையும் மாற்றியது. 2007இல் இன்டர்நெட் மீண்டும் புத்துயிர் பெற்றது.

ஜேடி ஆம்னி என்ற ஆன்லைன் பிஸினஸ் சொல்யூஷன்ஸை மணி தொடங்கினார். இந்த நிறுவனம் சிறு தொழில்முனைவோருக்கான தீர்வுகளைத் தந்தது. 2009இல் இன்டர்நெட் பரவல் 3 சதவீதமாக இருந்தபோது அவர் எல்லா சேவைகளையும் ஒரே பாக்கெட்டில் தந்து விற்பனை செய்தார். பின்னர் நடந்தது மாயாஜாலம். ஜஸ்ட் டயல் 57 மில்லியன் யூசர்கள் அளவுக்கு வளர்ந்தது. 254 மில்லியன் கேள்விகளுக்கு விடை தரப்பட்டது.




ஐந்து முறை தோல்வி அடைந்த பின்னர் ஜஸ்ட் டயல் இறுதியாக பொதுவில் பட்டியலிடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதியன்று ரூ.950 கோடிக்கு ஐபிஓ வெளியிடப்பட்டது. இது 12 மடங்கு வளர்ச்சி பெற்று முதலீட்டாளர்களுக்கு 850 சதவீத லாபத்தைத் தந்தது. ஐபிஓ வெளியான பின்னர் ஜஸ்ட் டயல் நிறுவனம் பெரும் வளர்ச்சி பெற்று கிளாசிபைட்ஸ் மெசேஜ்கள் மற்றும் விளம்பரங்களில் ஈடுபட்டது. நடிகர் அமிதாப் பச்சன் பிராண்டு அம்பாசிடராக விளம்பரத்தில் நடித்தார்.

2020 ஆம் ஆண்டில் ஜஸ்ட் டயல் நிறுவனம் 30 மில்லியன் ஆக்டிவ் பிசினஸ் லிஸ்டிங்குடன் இருந்தது. அதன் வெப்சைட்டில் காலாண்டுக்கு 153.3 மில்லியன் பார்வையாளர்கள் வந்தனர். இந்தியாவின் கூகுள் போன்று ஆன ஜஸ்ட் டயல் அதற்கு விலையைப் பெற்றது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் பி2பி வணிகத்தில் நுழைய திட்டமிட்டது. ஜஸ்ட் டயல் நிறுவனம் 30.4 மில்லியன் பிஸினஸ் லிஸ்டிங்குடன் ரூ.100000 கோடி மதிப்புள்ள வர்த்தகத்தை செய்வதால் இது நல்லதொரு நிறுவனமாகப் பார்க்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று அந்தத் தலைப்புச் செய்தி வெளியானது. ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 66.95 சதவீதப் பங்கை ரிலையன் ரீடெய்ல் ரூ.5700க்கு வாங்கியது. தனது முயற்சியில் மூன்று முறையும் லிஸ்டிங் செய்வதில் ஐந்து முறையும் தோல்வி அடைந்த விஎஸ்எஸ் மணி 25 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தான் சந்தித்த விமர்சனங்களையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டு வெற்றியைக் கண்டார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!