தோட்டக் கலை

மாடித்தோட்டம் – திராட்சை கொடி விதைப்பது எப்படி?

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – இரகங்கள்:

திராட்சையில் இரண்டு இரகங்கள் உள்ளது. இவற்றில் கருப்பு திராட்சை சாகுபடி பற்றி தான் இந்த பக்கத்தில் பார்க்க போகிறோம்.

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – பருவகாலம்:

Sale > grape plant at home > in stock

திராட்சை கொடி சாகுபடி பொறுத்தவரை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பயிரிப்படுகின்றன. குறிப்பாக குளிர்காலம் மற்றும் மழை காலங்களில் பயரிடக்கூடாது. ஏன் என்றால் அப்போது பயிரிட்டால் செவட்டை நோய் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எனவே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் திராட்சை சாகுபடி செய்வது மிகவும் சிறந்தது.

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – தொட்டிகள்:

செம்மண் மற்றும் மணல் கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும் அல்லது வண்டல் மண் கலந்து தொட்டியை நிரப்ப வேண்டும்.

மண் கலவை கலந்த உடனே திராட்சை குச்சிகளையோ அல்லது விதைகளையோ விதைக்க கூடாது. இரண்டு நாட்களுக்கு பிறகு தான் செடிகளை நடவேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – விதை விதைக்கும் முறை:

திராட்சை விதை கிடைக்க வில்லை என்றால் குச்சிகளை வாங்கி நடலாம், திராட்சை குச்சிகளும் மிக எளிதில் வளரக்கூடியது.

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்புவ – நீர் நிர்வாகம்:

குச்சிகளை நட்டவுடன் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

பிறகு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்தால் போதும்.




மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – பந்தல் அமைக்கும் முறை:

மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும், நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.

அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது.

பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும்.

இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.

திராட்சையை கொடிகளை தொட்டியில் வளர்ப்பதை விட தரையில் வளர்ப்பது மிகவும் சிறந்தது.

வேணும் என்றால் தரையில் திராட்சை கொடிகளை நட்டு மாடி பகுதிக்கு ஏற்றிவிட்டால் திராட்சை கொடிகள் நன்றாக வளரும். அதிகளவு காய்களும் பிடிக்கும்

அதாவது கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் தரையில் திராட்சை கொடியை நட்டு மடியில் ஏற்றி விடவும்.

மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – உரங்கள்:

திராட்சை சாகுபடிக்கு உரங்களாக கடலை பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு, மண்புழு உரங்கள் ஆகியவற்றை அடி உரங்களாக இடலாம்.

அதாவது கடலை பிண்ணாக்கு, வேப்பம்பிண்ணாக்கு மற்றும் மண்புழு உரங்கள் ஆகியவற்றை ஒரு ஒவ்வொரு கைப்பிடி எடுத்து கொடியின் வேர் பகுதியில் உரங்களை இட வேண்டும்.




மாடித்தோட்டம் திராட்சை கொடி வளர்ப்பு – பூச்சி தாக்குதல்களுக்கு:

பூச்சி தாக்குதல்களுக்கு வேப்பம்பிண்ணாக்கு, தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்க வேண்டும் அல்லது இஞ்சி பூண்டு விழுது அரைத்து அவற்றை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளிக்கலாம். இவ்வாறு தெளிப்பதினால் பூச்சி தாக்குதல்கள் சரியாகும்.

பயிர் பாதுகாப்பு:

பயிர் பாதுகாப்பிற்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவை தண்ணீரில் கலந்து கொடிகளின் மீது தெளித்து விட வேண்டும்.

அறுவடை:

திராட்சை கொடியில் காய் பிடிப்பதற்கு குறைந்தது 15 மாதங்கள் ஆகும். அதன்பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

திராட்சையின் பயன்கள்:

  1. திராட்சை உடலில் உள்ள பித்தத்தை நீக்கும்.

  2. இரத்தத்தை தூய்மை செய்யும்.

  3. நரம்பு, கல்லீரல், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றை வலிமையாக்கும்.

  4. திராட்சையில் அதிகளவு நீர் சத்து உள்ளதால் உடல் வறட்சியை நீக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!