Uncategorized

மகாபாரதக் கதைகள்/துரோணாச்சாரியரின் பிறப்பு

மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணாச்சாரியரின் பிறப்பானது மிகவும் சுவாரசியம் நிறைந்தது. சொல்லப்போனால் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை துரோணாச்சாரியர் என்றால் அது மிகையல்ல. முனிவர் பரத்வாஜருக்கும் கிருதாஜி என்ற அப்சரா என்பவருக்கும் மகனாய் பிறந்தவர் தான் துரோணர். முனிவர் பரத்வாஜர் ஒரு மாலை பொழுதில் வழிபாடு செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எப்போதும் கங்கை நதியில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் அன்று குளிக்கும் போது ஒரு அழகான பெண் அந்த கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மயங்கி நின்றார்.




முதல் சோதனைக் குழாய் குழந்தை?

முனிவர் பரத்வாஜரைப் பார்த்ததும் அந்த அழகான அப்சரா கிருதாஜி ஒரு இடுப்பு துணியை உடுத்திக் கொண்டு கங்கை ஆற்றிலிருந்து வெளியே வந்தார்‌. முனிவர் பரத்வாஜர் அந்த இந்திரனும் சொக்கிப் போகும் பேரழகில் மயங்கி நின்றார். அந்த ஈர உடையின் அழகில் மயங்கிய அவருக்குத் தானாகவே விந்து வெளியேறியது. அப்போது அந்த விந்தணுவை ஒரு களிமண் பானையில் சேகரித்துக் கொண்டு அவருடைய ஆசிரமத்தில் ஒரு இருண்ட அறையில் சேமித்து வைத்தார். அந்த பானையில் இருந்து தான் துரோணர் பிறந்தார். ‘துரோணம்’ என்றால் பானை என்று பொருள், அதிலிருந்து ‘துரோணர்’ என்பது பானையிலிருந்து பிறந்தவர் என்ற பொருளில் வழங்கப்படுகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!