Entertainment lifestyles

பூ வளர்ப்பில் 300 கோடி பிஸ்னஸ்..!!

சில நேரங்களில் நிராகரிப்புகள், நம்மை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைத்து வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வைக்கும். அந்த வகையில் ஷார்க் டேங்க் இந்தியாவில் நிராகரிப்பட்ட ஒரு தொழில் தற்போது 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.




ஷேட்ஸ் ஆஃப் ஸ்ப்ரிங் ( Shades of spring ) எனப்படும் பூக்களை டெலிவரி செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது 300 கோடி மதிப்புள்ள நிறுவனமாக செயல்பட்டு வருகிரது. கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி குப்தா மற்றும் அனுஜ் பாகத் ஆகியோர் இணைந்து ஷேட்ஸ் ஆஃப் ஸ்ப்ரிங் என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவினர். அதாவது விவசாயிகளிடம் இருந்து பூக்களை நேரடியாக வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் இவர்களது நிறுவனத்தின் வேலை.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் பூக்கள் பிரஷ்ஷாக இருக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் இவர்களிடம் விரும்பி பூக்களை வாங்கினர். இதனை அடுத்து சந்தா முறையை கொண்டு வந்தனர். பிரஷ்ஷான பூக்களை வாங்க விரும்புபவர்கள் இவர்களிடம் சப்ஸ்கிரைப் செய்து கொள்ள வேண்டும். வாராந்திர மற்றும் நாள்தோறும் என்ற வகையில் சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்கு பூக்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட 48 மணி நேரங்களுக்குள் டெலிவரி செய்யப்படுவதால் பூக்கள் ஏழு நாட்கள் வரை பிரஷ்ஷாகவே இருக்கும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இதுபோல 500க்கும் அதிகமான வகை கொண்ட பூக்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்கின்றனர். அலங்காரத்திற்கு தேவையான பூக்கள், பிறந்தநாள், வளைகாப்பு, திருமண நிகழ்ச்சி, வீட்டு கிரகப் பிரவேசம், பொக்கே செய்வது என அனைத்துக்கும் தேவையான பூக்கள் இவர்களிடம் கிடைக்கின்றன.




இந்த தொழிலை தொடங்கிய முதல் ஆண்டில் இவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.இது 2021 – 22 ஆம் ஆண்டில் வருவாய் 9 கோடி ரூபாய் என உயர்ந்தது. சப்ஸ்கிரைப் செய்பவர்களின் எண்ணிக்கையும், பல்வேறு நிறுவனங்களும் இவர்களிடம் பூக்களை வாங்க தொடங்கியதால் படிப்படியாக இவர்களது வருவாயானது அதிகரித்து வந்தது. தற்போது இவர்களது நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி ஆகும்.

இவர்கள் ஸ்டார்ட் அப் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஷார்க் டேங்க் இந்தியாவில் பங்கேற்றனர். அப்போது மூன்று கோடி ரூபாய் முதலீடு வேண்டும் என்று நடுவர்களிடம் கோரிக்கை வைத்தனர் ஆனால் நடுவர்கள் இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டனர்.

ஆனால் தற்போது இவர்களது நிறுவனம் 300 கோடி நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது இவர்களின் நிறுவனம் சென்னை, ஹைதராபாத், மும்பை பெங்களூரு ஆகிய நகரங்களில் டோர் டெலிவரி செய்து வருகிறது. படிப்படியாக தொழிலை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்து வருகின்றனர். தங்கள் இணையதளம் மூலம் பொக்கே, கிஃப்ட் பாக்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!