Entertainment lifestyles News

சென்னை saas ஸ்டார்ட் அப் Platos வென்ற கதை!

உணவங்களை நடத்துவது மிகவும் சவாலானது. திட்டமிடுதல் துவங்கி, பொருட்களை கொள்முதல் செய்வது, வீணாவதை தடுப்பது, பட்ஜெட்டை பின்பற்றுவது, கையிருப்பை நிர்வகிப்பது மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது என எண்ணற்ற செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். சமையல் ஏற்பாட்டாளர்களை நாடும் சிக்கலான செயலுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது, உணவு சோதனை நடத்தி, விலைக்கு பேரம் பேசி, தகவல் தொடர்பை கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், வெண்டர்கள் செயல்பாடு சவால்களை எதிர்கொண்டு, பொதுவான நிர்வாக மேடை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.




ஒருங்கிணைப்பு இல்லாத சமையல் தொழிலுக்கு (கேட்டரிங்) சீரான தன்மையை கொண்டு வரும் முயற்சியாக சிறுவயது நண்பர்கள் அர்ஜுன் சுப்பிரணியன் மற்றும் ராஜ் ஜெயின் 2019ல், ஒருங்கிணைந்த உணவக (கேபிடேரியா) தொழிலில் உள்ள வாய்ப்புகளை ஆராயத்துவங்கினர்.

2020 மே மாதம், அவர்கள் கேபிடேரியாக்களின் நிர்வாகத்தை சீராக்கும் தொழில்நுட்ப சேவையான ’பிளாடோஸ்’ (Platos) துவக்கினர். “முன்னதாக சென்னையில் பல காபிடேரியாக்களை வழக்கமான முறையில் நிர்வகித்துள்ளோம். கேன்டீன் செயல்பாடுகளை சீரமைக்க தொழில்நுட்ப சேவை தேவை என்பதை பெருந்தொற்று காலம் உணர்த்தியது,” என்கிறார் பிளாடோஸ் இணை நிறுவனர் மற்றும் சீ.இ.ஓ அர்ஜுன் சுப்பிரணியன். ஸ்டார்ட் அப்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக நம்புகிறோம். பணியிட உணவை மகிழ்ச்சியானதாக்கும் எங்கள் முயற்சியாக பிளாடோஸ் அமைகிறது, என்கிறார். துவக்கம் முதல், 35 பேர் குழு கொண்ட பிளாடோஸ் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ராஞ்சி, ஐதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் 45 கேபிடேரியாக்களுக்கு சேவை அளித்துள்ளது.

தற்போது 45,0000 மாத பயனாளிகளை கொண்டுள்ளது. 2 லட்சம் ஆர்டர்களை நிறைவேற்றுகிறது. ஆண்டு ஜிஎம்வி ரன்ரேட் ரூ.18 கோடியாக உள்ளது. எப்படி செயல்படுகிறது? இந்த சென்னை ஸ்டார்ட் அப் வாடிக்கையாளர்களுக்கு B2B2C கேபிடேரியா நிர்வாக சேவையை அளிக்கிறது. நிறுவனங்கள் மற்றும் உணவு வெண்டர்களுக்கு B2B SaaS  மேடையை அளிக்கிறது.

கேபிடேரியா முழு நிர்வாக மேடை, வெண்டர் தேர்வு, உணவு சோதனைகள், தினசரி ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அளிக்கிறது. “கேட்டரிங் அனுபவத்தை எளிமையாக்கி, வாடிக்கையாளர்கள் மற்றும் வெண்டர்கள் என இருத்தரப்பினருக்கும் எளிமையான செயல்திறன் வாய்ந்த தீர்வு வழங்கி, அனைவருக்குமான கேபிடேரியா அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சூழலை அளிக்க விரும்புகிறோம்,” என்கிறார் ஜெயின்.




தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கேபிடேரியா ஊழியர்கள், மாணவர்கள் ஆர்டர் செய்ய, ரேட்டிங், கருத்துக்கள் வழங்குவதை எளிதாக்குகிறது. கையிருப்பு நிர்வாகம், இணைய மெனு வசதி, அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் வழங்குகிறது. மேலும், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிளாடோஸ் செயலி, பங்குதாரர்களுக்கான செயலை, அட்மின் வசதி உள்ளிட்டவற்றையும் அளிக்கிறது. தற்போது நிறுவனம், கல்லூரிகள், மருத்துவமனைகள், உள்ளிட்டவைக்கு கேபிடேரியா நிர்வாக வசதி அளிக்கிறது. உணவு பிராண்ட்கள், தொழில் கேண்டின்களுக்கான திரட்டியாகவும் விளங்குகிறது.

“கேட்டரிங்கில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும் கேட்டரிங்கில் உள்ள வர்த்தகங்களுக்கு உதவுகிறோம். குறிப்பிட்ட தரத்தில் உணவு தயாரிக்கும் தொழில் சார்ந்த கிச்சன் வசதியை நாடும் தேவை இருப்பதால் இவை ஒன்றிணைந்து அமைகிறது. மேலும் ஜிஎஸ்டி மற்றும் இதர உரிமங்களையும் கவனிக்க வேண்டும்,” என்கிறார். அண்மையில் நிறுவனம் முன்னோட்ட B2B2C சேவை தளங்களை அறிமுகம் செய்துள்ளது. உணவு சேவை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

வர்த்தக மாதிரி பிளாடோஸ் தனது சேவைக்காக உறுப்பினர் கட்டணம் வசூலிக்கிறது. மேலும், பரிவர்த்தனக்கு ஏற்ப கமிஷன் பெறுகிறது. கேபிடேரியாக்களுக்கான அனைத்து செயல்பாடுகளை நிர்வகித்து அதற்கேற்ப கட்டணம் பெறுகிறது. “எங்கள் சேவைக்காக மொத்த உணவு விற்பனை மதிப்பில் ஒரு விகிதம், தொழில்நுட்பத்திற்காக 5 சதவீதம் வசூலிக்கிறோம். மேலும், கேபிடேரியா நிர்வாகம், சேவை ஊழியர், போக்குவரத்துக்கு 8 முதல் 25 சதவீதம் பெறுகிறோம்,” என்கிறார் சுப்பிரமணியன்.

தற்போது நிறுவனம் ஆண்டு தொடர் வருமானமாக ரூ.2.5 கோடி கொண்டுள்ளது. எங்கள் வர்த்தக கேபிடேரியாக்கள் ஊழியர்கள் மாணவர்களுக்கு சேவை அளிக்கிறது. உணவு ஆர்டர் செய்ய, செயல்பாடுகள் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு எங்கள் செயலியை பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் ஜெயின். எச்டிஎப்சி வங்கி, பெர்ரோ, எஸ்.எச்.எல், இகோலேப்.




ஜான்சன் கண்ட்ரோல்ஸ், ஹெல்லா ஆட்டோமேட்டிவ், மெட்லைன் உள்ளிட்ட 35 வாடிக்கையாளர்களை நிறுவனம் பெற்றுள்ளது. முக்கிய நகரங்களில் கேபிடேரியாக்களை துவக்குவதில் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், மாத அளவிலான வருவாயில் 15 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது. எதிர்கால திட்டம் இந்திய தொழில் கேபிடேரியாக்கள் 50 லட்சம் ஆர்டர்களை தினமும் பெறுகிறது.

ஆண்டு ஆர்டர் அளவு 2 பில்லியன் டாலராக இருக்கிறது. உலக அளவில் இது 200 பில்லியன் டாலராக இருக்கிறது. சுயநிதியில் உருவான இந்த ஸ்டார்ட் அப் அடுத்த 24 மாதங்களில் 250க்கும் மேலான கேபிடேரியாக்களை இயக்கி, 10 மடங்கு வருவாய் வளர்ச்சி எதிர்பார்க்கிறது. லாபவிகிதத்தை நெருங்கி வருகிறது. ஹங்கர்பாக்ஸ், ஸ்மார்ட்கியூ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடும் பிளாடோஸ், சாஸ் சேவை, கேப்டேரியா நிர்வாகம் ஒருங்கிணைப்பு, சேவை லாஜிஸ்டிக்ஸ் மூலம் தன்னை தனித்து நிற்கச்செய்கிறது.

நிறுவனம் சாஸ் முதலீட்டாளர்கள், வியூக பங்குதாரர்கள் உள்ளிட்டோரிடம், இருந்து 1 மில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளது. “சரியான முதலீட்டாளர்களைக் கண்டறிவது, உங்கள் ஸ்டார்ட் அப் வெற்றிக்கான திசைக்காட்டி,” என்கிறார் சுப்பிரமணியன்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!