lifestyles

இந்தியாவில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளதா..? உண்மை நிலவரம் என்ன..?

உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நேர வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியுள்ளது. பொதுவாக அமெரிக்க டாலர் உயரும் போது தங்கம் விலை குறையும். ஆனால், இன்றைய சூழலில் இந்த விதி தலைகீழாக மாறியுள்ளது.




உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நேர வர்த்தகத்தில் உயர்வுடன் தொடங்கியுள்ளது. பொதுவாக அமெரிக்க டாலர் உயரும் போது தங்கம் விலை குறையும். ஆனால், இன்றைய சூழலில் இந்த விதி தலைகீழாக மாறியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் சுமார் $2,360 என வர்த்தகமாகி வருகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் மூடும் போது தங்கம் விலை 2343 டாலராக இருந்த நிலையில், இன்று வாரத்தில் முதல் நாளில் 0.70 சதவீதம் அதிகமான விலையில் வர்த்தகமாகி வருகிறது.

தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு உள்ள போர் பதற்றம் முக்கியமான காரணமாக அமைகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.




இதனால் முதலீட்டுச் சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருகின்றனர். இதன் காரணமாக, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளில் முதலீடு செய்வது கடந்த 24 மணிநேரத்தில் அதிகரித்து வருகிறது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீதான ஈரான் ராணுவத்தின் 200 ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் எதிர் தாக்குதல் எப்படியிருக்கும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் தங்கம், பத்திரம், ரியல் எஸ்டேட் போன்ற பாதுகாப்பான பிரிவில் முதலீடு செய்ய துவங்கும் காலம் வந்துவிட்டது. கடந்த சில நாட்களில் தங்கம் விலையில் 1.60 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ரூ.70,000 என்ற அடிப்படை ஆதரவு விலை தொடர்ந்து வலுவாக இருப்பதால், தொடர்ந்து ஏற்றம் காணும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். எவ்வாறெனினும், உலக அரசியல் சூழல் ஸ்திரப்படுத்தப்படாவிட்டால், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து தங்கத்தில் முதலீடு செய்வது உத்தமம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!