தோட்டக் கலை

மாடித்தோட்டத்தில் தர்பூசணி பயிரிடும் முறை

இப்போதேல்லாம் பலர் சொந்தமாக பல விஷயங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் நாம் ஏதாவது ஒரு விஷயம் செய்யவேண்டும். எனவே நம் வீட்டு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ செடிகளை வளர்த்து நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை உருவாக்கலாம். அந்த வகையில் மாடித்தோட்டத்தில் தர்பூசணி பயிரிடும் முறை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க.




மாடி தோட்டம் தொட்டியில் மண் கலவை எப்படி தயார் செய்ய வேண்டும்?

மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது தொட்டிகளை பயன்படுத்தினால் அவற்றில் சிறிதளவு அதாவது மாட்டுச்சாண‌ம் 1 பங்கு, தேங்காய் நார் கழிவு 2 பங்கு, சமையலறை கழிவு 1 பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டிகளை நிரப்ப வேண்டும்.

உங்க தோட்டத்துல தர்பூசணி கொடி வளத்திருக்கீங்களா,grow watermelon in your garden, - YouTube

இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. பத்து நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைகளை நடவு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.




மாடி தோட்டத்தில் தர்பூசணி விதையை நடவு செய்யும் முறை:

மாடி தோட்டத்தில் தர்பூசணி செடி  நன்கு வளர நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் வரை நட்டுவைக்கலாம்.

நீர் நிர்வாகம்

மாடித்தோட்டம் தர்பூசணி வளர்ப்பு முறை  பொறுத்தவரை விதைகளை விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும்.

தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

மாடி தோட்டம் பந்தல் அமைக்கும் முறை

 மாடியில் பந்தல் அமைப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி கொள்ளுங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக நட்டு மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.

அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும்.

இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். இந்த பந்தல் மற்ற காய்கறி செடிகளுக்கு நிழலாகவும் பயன்படும்.

மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இதன் காய்கள் அதிக எடை அளவு கொண்டதால் பந்தல் உறுதியானதாக இருக்க வேண்டும். இலையெனில் சுவற்றின் மீதும், தரையிலும் கூட படர விடலாம்.

Terrace Garden | WaterMelon Cultivation | Seed to harvest | Step By Step | Tharpoosani Vallarpu - YouTube

உரங்கள்

பொதுவாக செடிகளுக்கு உரமாக  வீட்டில் உள்ள சமையலறை கழிவுகளை பயன்படுத்தலாம் அதாவது சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்கலாம்.

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.




பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும்.

இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.

அறுவடை

 காய்களை சரியான பருவம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!