lifestyles Uncategorized

பெண்களே விஷமாக மாறும் உணவு…..இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்!

ஒரு சில உணவு வகைகளை மீண்டும் சூடு செய்வதனால் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைவது மட்டுமின்றி விஷமாகும் அபாயம் உண்டாகிறது.‌தற்போது அந்த உணவு வகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு:விஷமாக மாறும் அபாயம்.....இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்!

அடிக்கடி நாம் பயன்படுத்தும் கிழங்கு வகை உருளைக்கிழங்கு. பொரியல் மற்றும் குழம்பு ஆகியவற்றில் உருளைக்கிழங்கு பயன்படுத்தி இருக்கும் நிலையில் அதனை மீண்டும் சூடு செய்யப்படுவதால் அதன் தன்மை விஷமாக மாறக்கூடும். அதில் உள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள் சூடு செய்யப்படும் பொழுது மாற்றி அமைக்கப்பட்டு செரிமானத்துக்கு எதிராக வினை புரியும். மேலும் இது சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது.




சிக்கன்:விஷமாக மாறும் அபாயம்.....இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்!

சிக்கன் போன்ற இறைச்சி உணவு வகைகளை மீண்டும் சூடாக்குவதனால் விஷமாக மாறக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. சரியான வெப்பநிலையில் அதனை மீண்டும் சூடுபடுத்தும் போது பாக்டீரியாக்கள் அதன் மேற்பரப்பில் பெருகும் அபாயம் ஏற்படுகிறது. அதேசமயம் சிக்கனில் உள்ள புரதங்கள் மீண்டும் சூடுபடுத்தப்படும் போது கடினமாகவும் உலர்ந்ததாகவும் மாறிவிடுகிறது. இதனால் விரும்பத்தகாத அமைப்புகள் உண்டாகிறது. சிக்கன் மட்டுமல்ல பொதுவாக எந்த இறைச்சியாக இருந்தாலும் அதனை சூடுபடுத்தாமல் உடனடியாக சாப்பிட்டு முடிப்பது நல்லது.




அரிசி:விஷமாக மாறும் அபாயம்.....இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்!
அரிசியானது மீண்டும் சூடுபடுத்தப்படும் போது அதில் உள்ள மாவு சத்துக்கள் அதிகமாகிறது. இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படுவது மட்டுமின்றி பாக்டீரியாவின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. இதனால் இது நச்சுத்தன்மை உடையவையாக மாறுகிறது.

எண்ணெய்:
ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்துவதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. அதாவது உடலில் வீக்கம் உண்டாகிறது. எனவே எண்ணெயை மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.




கீரைகள்:
முக்கியமாக கீரையை மீண்டும் சூடு செய்யவே கூடாது. கீரை போன்ற உணவு வகைகளில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இதை மீண்டும் சூடுபடுத்தப்படும் போது தீங்கு விளைவிக்கும் கலவையாக மாறிவிடுகிறது. இது நோய்களை உண்டாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது எனவே கீரைகளை மீண்டும் சூடுபடுத்துதல் கூடாது.

காளான்:

காளான்கள் மீண்டும் சூடுபடுத்தப்படும் போது விரைவாக சிதைக்கும் கலவையை கொண்டதாக மாறிவிடுகிறது. எனவே காலன்களை மீண்டும் சூடு செய்வதன் மூலம் அதன் அமைப்பு மற்றும் சுவையை இழக்க நேரிடுகிறது. எனவே காலன்களை சூடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

முட்டை:விஷமாக மாறும் அபாயம்.....இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள்!

முட்டைகளை மீண்டும் சூடாக்குவதன் மூலம் பாக்டீரியா மாசுபாட்டின் அபாயம் ஏற்படுகிறது. எனவே இதனை சூடுபடுத்தும்போது இதில் இருக்கும் புரதங்கள் உடைந்து விரும்பத்தகாத அமைப்பை உருவாக்குகின்றன. எனவே பழைய முட்டைகளை தவிர்த்து விட்டு புதிதாக சமைத்த முட்டைகளை உட்கொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!