Entertainment lifestyles News

தூக்கிப் போடும் பிளாஸ்டிக் குப்பையில் குவியும் வருமானம்

இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு சாக்லேட் வாங்கினால் கூட பிளாஸ்டிக் கவரில் சுற்றித் தரப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு பொருளிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மக்களுடன் ஒன்றிப் போய்விட்டது. நாமும் மஞ்சள் பை, துணிப்பையை விட்டு பிளாஸ்டிக் அடிமைகளாத் திகழ்கிறோம். தினமும் நம் வீட்டில் சேரும் குப்பையில் பெரும்பங்கு வகிப்பது பிளாஸ்டி பொருட்களே.




Plastic

நம் ஒரு வீட்டில் இவ்வளவு குப்பைகள் இருந்தால் உலகம் முழுவதும் மலைபோல் குவிந்து பல மில்லியன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணை மலடாக்குகின்றன. இதிலிருந்து மீள ஓராயிரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நாம் திருந்துவதாக இல்லை. ஆனால் இதைக் கண்ட ஒரு மனிதர் மண்ணை பிளாஸ்டிக் மலடாக்குவதைக் கண்டு வருந்தி மெல்ல மெல்ல இயற்கையைக் கொல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து மறுசுழற்சி செய்து அதை தனது வருமானமாக்கி இன்று லட்சங்களில் சம்பாதிக்கிறார் இயற்கை ஆர்வலர் ஒருவர்.

புனேவைச் சேர்ந்த நந்தன் பாட்டன் என்பவர் ஒருமுறை மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் உண்பதைக் கண்டு மனமுடைந்தார். மேலும் சுற்றுச் சூழலும் மிகுந்த பாதிப்படைந்ததைக் கண்டு தமக்குள் ஓர் லட்சியம் கொண்டு EcoKaari என்றொரு நிறுவனத்தினைத் தொடங்கினார்.

கடந்த 2020-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 20 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து மீண்டும் மறுசுழற்சி செய்து கைத்தறி நெசவின் மூலம் பல கலைப்பொருட்களையும், துணிப் பைகளையும் உருவாக்கி அந்தத் தொழிலில் தற்போது ஜெயித்தும் காட்டியிருக்கிறார்.

தற்போது இந்நிறுவனமானது மாதத்திற்கு 8 இலட்சம் வரை வருவாயைக் இயங்கி வருகிறது.  இந்நிறுவனத்தை இவர் ஆரம்பித்த போது சரியாக மக்களிடம் சென்று சேரவில்லை. ஒரு சமூக இணையதளத்தில் இவரது பணி குறித்த வீடியோ ஒன்று வைரல் ஆனதைத் தொடர்ந்து இவர் இந்தியா முழுவதும் கவனம் பெறத் துவங்கினார்.




Eco

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கைத்தறி பொருட்கள் தயாரிக்கும் இவரது தொழில் முறை கவனம் ஈர்த்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் பேசப்பட இன்று EcoKaari நிறுவனமானது சுற்றுச் சூழலின் நண்பனாகவும், அதே சமயம் சிறந்த ஒரு ஸ்டார்ட் அப் தொழிலாகவும் விளங்கி வருகிறது.

இன்று இவர்களின் தயாரிப்புகள் 300 முதல் 3000வரை வெளி மார்க்கெட்டுகளில் விற்பனையாகின்றன. மேலும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இவர்கள் தயாரிப்புக்கு மார்க்கெட் கூடவே மளமளவென இவரது நிறுவனம் வளர்ந்து வருகிறது.

இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகள் நன்கு கழுவி பின்னர் பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் பின்னர் நீண்ட கீற்றுகளாக வெட்டப்படுகின்றன, பின்னர் அவை சர்க்கா மீது உருட்டப்பட்டு, பின்னர் துணி தயாரிக்க கைத்தறியில் நெய்யப்படுகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!