Cinema Entertainment

ஜெனிக்கு இன்விடேஷன் கொடுத்த பாக்யா.. பாக்கியலட்சுமி தொடர் அப்டேட்!

விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இடம்பெற்று வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் சாதாரண மசாலா பிசினஸை துவங்கி தற்போது ரெஸ்டாரன்ட் ஓபன் செய்யும் வரை முன்னேறியுள்ளார் பாக்கியா. இதனிடையே பெரிய நிறுவனத்திற்கு ஓனராக இருந்த கோபி மற்றவர்கள் விஷயத்தில் குறிப்பாக பாக்கியா விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி மூக்கறுபட்ட நிலையில் தற்போது அவரது பிசினஸ் படுத்து விட்டது. தன்னுடைய சொந்த தொழிலை மூடிவிட்டு தற்போது அவர் வீட்டில் சும்மா இருக்கிறார்.




இதனால் ராதிகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். தன்னுடைய மகனுக்கு நகையை கொடுத்து உதவ முன் வருகிறார் ஈஸ்வரி. பாக்யாவும் தன்னிடம் இருந்த மாமியாரின் நகைகளையும் கொடுத்து கோபிக்கு உதவ நினைக்கிறார். ஆனால் இதை ராதிகா மறுத்து தன்னுடைய கணவனுக்கு தேவையானவற்றை தான் செய்வேன் என்று கூறிவிடுகிறார். பாக்கியா கோபிக்கு உதவ முன்வந்தபோதிலும் அவரை தொடர்ந்து இழிவுப்படுத்துகிறார் கோபி. முன்னதாக அவரது பிசினஸ் அனைத்தும் பாதியிலேயே மூடப்பட்ட நிலையில், ரெஸ்டாரெண்ட் பிசினசும் அப்படியே ஆகும் என்று இழிவுப்படுத்துகிறார். இதற்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் ஏமாற்றிய தன்னுடைய கணவன் தனக்கு விவாகரத்து கொடுக்க நினைத்த நிலையில் ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும் சூழலில் தானே விரும்பி விவாகரத்து கொடுக்கிறார் கதையின் நாயகி பாக்யா. இந்த சீரியலில் விவாகரத்து பெற்ற கோபி, தொடர்ந்து தான் காதலித்த ராதிகாவை மறுமணம் செய்து கொள்கிறார், திருமணமான மகன் உள்ள நிலையில் அவரின் இந்த செயல் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.




ரெஸ்டாரெண்ட் துவங்கும் பாக்கியா: தொடர்ந்து அவரது வாழ்க்கையில் மற்றும் பாக்யா, ராதிகா உள்ளிட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாகக் கொண்டு இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மசாலா பிசினஸ் துவங்கி சமையல் கான்டிராக்ட், கேன்டீன் கான்டிராக்ட் உள்ளிட்ட பல விஷயங்களை சவாலுடன் செய்து முடிக்கிறார் பாக்யா. தற்போது அவரது நீண்ட நாள் கனவான ரெஸ்டாரண்டையும் துவங்கும் வேலைகளில் அவர் ஈடுபடுகிறார். இதனிடையே தன்னுடைய முன்னாள் மனைவி பாக்கியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத கோபி அவரையும் ராதிகாவையும் ஒட்டியே தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

மூடப்பட்ட கோபியின் நிறுவனம்: இதனால் அவரது பிசினஸில் கவனம் செலுத்தாமல் அவரது பிசினஸ் படுத்து விடுகிறது. இதனால் அவர் தன்னுடைய நிறுவனத்தை மூடும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். முன்னதாக தன்னுடைய குடும்பத்தினரின் தேவையையும் அவர்களின் பிரச்சினையையும் தீர்த்து வைக்கும் பாக்கியா, தொடர்ந்து தன்னுடைய தொழிலிலும் கவனம் செலுத்துகிறார். அவருக்கு உறுதுணையாக அவருடைய நண்பர் பழனிச்சாமி செயல்படுகிறார். ஆனால் இவர்களின் நட்பை கேவலப்படுத்தி வருகிறார் கோபி. இந்நிலையில் பாக்யா தற்போது ரெஸ்டாரண்ட் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டு வரும் சூழலில் அவரை தொடர்ந்து அவமானப்படுத்துகிறார் கோபி.




ஏளனப்படுத்தும் கோபி: முன்னதாக கேன்டீன் கான்டிராக்ட் உள்ளிட்டவற்றை பாதியிலேயே விட்டுவிட்டு வந்தது போல ரெஸ்டாரன்ட் வேலையும் பாதியிலேயே விட்டு விடுவார் என்று பாக்யாவை அவர் ஏளனம் பேசுகிறார். ஆனால் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தன்னுடைய வேலையையும் செய்யும் பெண்களுக்கு இது நடக்கக் கூடியது தான். ஆனால் காலையில் எழுந்து குளித்துவிட்டு தங்களுடைய வேலைகளை மட்டுமே பார்க்கும் ஆண்கள் சிலர் பிசினஸை மூடிவிட்டு வருகிறார்கள் என்று பாக்யா சுட்டிக்காட்டுகிறார். மேலும் தொடர்ந்து கத்த வேண்டாம் என்றும் கத்தினால் பிபி அதிகரித்து ஹார்ட் அட்டாக் வரும் என்றும் கோபிக்கு அறிவுறுத்துகிறார் இதனால் கோபி டென்ஷன் ஆகிறார்.




பாக்கியாவிடம் ஆத்திரப்படும் ஜெனியின் அப்பா: இதனிடையே ரெஸ்டாரன்ட் துவக்க விழாவிற்கான இன்விடேஷனை ஜெனியின் வீட்டிற்கு சென்று கொடுக்க முயல்கிறார் பாக்யா. ஆனால் அவரது அப்பா ஜோசப். மருமகள் மீது அதிகமான அக்கறை இருப்பது போல காட்டிக் கொள்ள வேண்டாம் என்று பாக்யாவை குத்தி காட்டுகிறார். மேலும் ஜெனியை பிடிக்கும் என்றால் நாளைய தினம் நீதிமன்றத்தில் வர உள்ள அவர்களது விவாகரத்தில் ஜெனிக்கு விவாகரத்து கொடுத்து செழியன் விலக வேண்டும் என்று அவர் ஆத்திரத்துடன் கத்தி பேசுகிறார். முன்னதாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் வருவது குறித்து செழியன் கண்கலங்குகிறார். அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் பாக்கியா, தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் செழியன் மீண்டும் இணைந்து வாழ்வார் என்று ஆறுதல் கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!