Cinema Entertainment

சிட்டியை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய மீனா…சிறக்கடிக்க ஆசை அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கார் செட்டுக்கு செல்கிறார் அப்பொழுது  செல்வம் சவாரி வந்து இருக்கு என கிளம்பும் நேரத்தில் மீனா செல்வத்திடம் நீங்களும் உண்மையை  சொல்லாம மறைச்சுட்டீங்க இல்ல என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து கார் சவாரிக்கு சென்றுள்ளனர் என பொய் சொல்கிறார். உடனே மீனா எனக்கு எல்லாமே தெரியும் ஆனா நீங்க கூட மறைச்சிட்டீங்களே என பேசுகிறார்.




அதற்கு முத்து சிசிடிவி பார்த்ததால தான் என செல்வம் சொல்ல வர மீனை உடனே நீங்க எதுவும் பேசாதீங்க அந்தக் காரை வித்தது எனக்கு தெரியும் என கூறுகிறார். எதற்காக விற்றார்அப்படி என்ன அவருக்கு செலவு என பேச உடனே சிட்டியை முத்து அடித்ததால் உடனே எங்களுடைய பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என கூறிவிட்டார் அதனால் முத்துவை காலில் விழ சொன்னால் விட்டு விடுகிறேன் என பேசினார் ஆனால் முத்து பிடிக்கவில்லை உடனே தன்னுடைய காரை வித்து எங்க கடனை அடைத்து விட்டான் என கூறுகிறார்.

அது மட்டும் இல்லாமல் அங்கு இருந்தவர்கள் நாங்கள் இப்பொழுது நாங்கள் கார் வைத்து ஓட்டுகிறோம் என்றால் அது முத்து செய்த தியாகம்தான் ஆனா நாங்க கூட முத்துவ தப்பா நினைச்சுட்டோம் ஆனா முத்து நல்ல மனசு அவன மாதிரி நண்பன் கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும் என பேசுகிறார்கள். அந்த சிட்டி என் புருஷனை காலில் விழ சொன்னானா நான் அவன போய் பாத்துக்குறேன் என மீனா கோபத்துடன் சிட்டி பார்க்கப் போகிறார்.

சிட்டி டேய் சிட்டி பொறுக்கி நாயே என் புருஷனையா கால்ல விழ சொன்ன அப்படியே செவுள்ள விட்டானா என அறையப் போகிறார் அந்த சமயத்தில் இரண்டு ரவுடிகள் வந்து ஏய் எனக் கத்த  உடனே சிட்டி இவங்க சத்யாவோட அக்கா இவங்கள போய் எதிர்த்து கைநீட்டி பேசுறியா என ரவுடிகளை அடக்கி வைக்கிறார் ஆனாலும் மீனா என்னடா என் புருஷன கால்ல விழ சொல்ற அவருடைய தகுதி என்ன நீனே ஒரு பொறம்போக்கு பொறுக்கி என பேசுகிறார்.




அதுமட்டுமில்லாமல் இன்னொரு டைம் அவர் வழியில் குறுக்க வந்தினா நானே எல்லார் முன்னாடியும் செருப்பை கழட்டி அடித்து விடுவேன் என பேசுகிறார். இந்த நிலையில் அவர் சென்றவுடன் இவள இவன் புருஷன் கூட சேரவே விட கூடாது அது எப்படி நம்மளால முடியும் என மற்ற இருவர்கள் கேட்க அதற்கு அதான் சத்யா நம்ம கூடவே இருக்கான்ல அவனை வச்சு காய் நகர்த்துவோம் என பேசுகிறார்.

மற்றொரு பக்கம் மனோஜ் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது  ஒருவரிடம் மனோஜ் கடன் வாங்கி இருப்பார் அவர் வீட்டிற்கு தேடி வருகிறார் மனோஜ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரோகிணி வந்தவுடன் ரோகினி இடம் உங்கள் புருஷன் என்னிடம் கடன் வாங்கி இருக்கிறார் என பேசுகிறார் அதற்கு ரோகிணி எனக்கு தெரியாது எனக் கூற இவன் சொல்லி இருக்க மாட்டான் எனக்கு நல்லாவே தெரியும் இவன் எந்த வேலையுமே செய்ய மாட்டான் ஒழுங்கா,  இவனை நம்பி நான் கடன் கொடுக்கல உங்களை நம்பி தான் கடன் கொடுத்தேன் என பேசுகிறார்.




உடனே ரோகிணியிடம் காசு கொடுக்க லேட் ஆச்சுன்னா இந்த ஆள வச்சு மெரட்டுறது ஆள தூக்குறது இதெல்லாம் எனக்கு எதுவும் பிடிக்காது நான் எப்படி காசு கொடுத்தேனோ அதே மாதிரியே சத்தமே இல்லாம காச கொடுத்துடனும் என  மிரட்டி விட்டு செல்கிறார். உடனே ரோகினி நான் இன்னும் எத்தனை பேருக்கு தாண்டா காசு கொடுத்து கிட்டே இருக்கணும் என மனோஜ் திட்டி விட்டு செல்கிறார்.

அடுத்த காட்சியில் மீனா வர வழியில் தன்னுடைய தங்கையை பார்த்து நடந்த விஷயத்தை கூறுகிறார் சத்யாவை இனிமே அங்க வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லு என கூறிவிட்டு செல்கிறார். அதேபோல் மீனா அண்ணாமலை இடம் காரை இதற்காக தான் விற்று உள்ளார் என கூற அண்ணாமலை அவன் மனசை பத்தி எனக்கு நல்லா தெரியும் தன்னால யாரும் பாதிக்கப்பட கூடாதுனு நினைக்கிறவன் என பெருமையாக பேசுகிறார்.

முத்து வந்தவுடன் முத்துவிடம் மீனா காரை விற்றது எனக்கு தெரியும் என பேசுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!