தோட்டக் கலை

எலுமிச்சை பழச்செடியில் அதிக காய்கள் காய்க்கவில்லையா?இதோ டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று எலுமிச்சை பழச்செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் எலுமிச்சை பழச்செடியில் அதிக காய்கள் காய்க்கவில்லையே என்று கவலைபடுபவர்களுக்காக தான் இன்றைய பதிவு.

WingDong Lemon Tree Live Plant (1 Healthy Live Plant) with 4 Inches Pot : Amazon.in: Garden & Outdoors

ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் செடிகளின் ஆரோக்கியத்தை பலப்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எலுமிச்சை பழச்செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு உதவும் குறிப்பினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

எலுமிச்சை மரம் வளர்ப்பது எப்படி..?

ஒரு செடி நன்கு செழித்து வளர வேண்டும் என்றால் அதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது மண்கலவை தான். அதேபோல் தான் எலுமிச்சை பழச்செடிக்கும் மண்கலவை மிக மிக முக்கியம்.

அதாவது இதற்கு நீங்கள் தண்ணீர் அதிக அளவு தேங்காத மண்கலவையை பயன்படுத்த வேண்டும். அடுத்து தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க சூரிய ஒளி சரியான அளவில் கிடைக்க வேண்டும்.




அதனால் இந்த எலுமிச்சை பழச்செடி 7 முதல் 8 மணிநேரம் சூரிய ஒளிப்படுகின்ற இடத்தில் பயிரிட வேண்டும். அதேபோல் இந்த எலுமிச்சை பழச்செடி அதிக அளவு காய்க்க வேண்டும் என்றால் அதன் நுனி பகுதியில் உள்ள இலைகளை நறுக்கி விட வேண்டும்.

இதன் மூலம் பூக்கள் அதிக அளவு பூக்கும். இப்பொழுது என்ன உரம் கொடுத்தால் எலுமிச்சை பழச்செடி அதிக அளவு காய்க்கும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

உரத்திற்கு தேவையான பொருட்கள்:

  1. தேன் – 1 டீஸ்பூன் 

  2. சுண்ணாம்பு – 1 சிட்டிகை

  3. தண்ணீர் – தேவையான அளவு

  4. ஸ்ப்ரே பாட்டில் – 1




    செய்முறை:

    முதலில் 1 டம்ளரில் தண்ணீரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் 1 லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 சிட்டிகை சுண்ணாம்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    பிறகு இரண்டினையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் அப்படியே விடுங்கள். பின்னர் அதனை 1 ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்களது எலுமிச்சை பழச்செடியின் நுனிப்பகுதியில் ஸ்ப்ரேசெய்து கொள்ளுங்கள்.

    இப்படி மாதம் ஒருமுறை செய்வதன் மூலம் உங்களது எலுமிச்சை பழச்செடி அதிக அளவு காய்கள் காய்க்க தொடங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!