Entertainment lifestyles News

இன்று மகளிர் தின ஸ்பெஷலாக பிசினஸ் தொடங்கி சாதித்து காட்டிய டாப் 10 பெண் தொழிலதிபர்களின் லிஸ்ட் பார்க்கலாம் !

பெண்கள் வெளியில் இறங்கி வேலைக்கு செல்லவே பல தடைகள் இருக்கும் இந்த காலத்திலும், பெண்கள் சின்ன சின்ன தொழில்களில் ஆரம்பித்து அதில் வளர்ந்து பெரிய அளவிற்கு வளர்ந்தும் உள்ளார்கள். அப்படி சாதித்த மிக முக்கியமான டாப் 10 பெண் தொழிலதிபர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.




பெண்கள் வெளியில் இறங்கி வேலைக்கு செல்லவே பல தடைகள் இருக்கும் இந்த காலத்திலும், பெண்கள் சின்ன சின்ன தொழில்களில் ஆரம்பித்து அதில் வளர்ந்து பெரிய அளவிற்கு வளர்ந்தும் உள்ளார்கள். அப்படி சாதித்த மிக முக்கியமான டாப் 10 பெண் தொழிலதிபர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

கிரண் மஜூம்தார் ஷா: பையோகான் மருத்துவ கம்பெனியின் தலைவர் ஆவார். கேன்சர் டைபெட்டிஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகளை தயாரித்து விற்பதில் இவரது கம்பெனி முன்னணி வகிக்கிறது. இவரின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, மலிவு விலையில் மருந்துகளை கொடுப்பது என அவரின் அர்பணிப்பிற்காகவே பலமுறை விருதுகளை வென்றுள்ளார்.

falguni nayar

ஃபால்குனி சஞ்சய் நாயர்: யாருக்கு தெரியுதோ இல்லையோ பெண்கள் இவரை கண்டிப்பாக தெரிந்து இருப்பீர்கள். நைக்கா ஆன்லைன் தளத்தில் விற்கப்படும் அழகு சாதனங்களை வந்தவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். அந்த நிறுவனத்தின் நிறுவனர் இவர் தான். இவர் தனது 50வயதில் தான் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.




shraddha sharma

ஷ்ரத்தா சர்மா: CNBC டிவி 18ல் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் யூர்ஸ்டோரி என்ற ஸ்டார்ட்ப் கம்பெனி ஆன ஊடக நிறுவனத்தை நிறுவினார். அதன் பின்னர் ரத்தன் டாடா போன்ற பெரிய நிறுவனங்களிடமிருந்து பண்ட் கிடைக்க தற்போது முன்னணி தொழிலதிபராக உள்ளார்.

upasana taku

உபாசனா தகு: சாப்ட்வேர் மற்றும் ப்ரொடக்ட் மேனேஜ்மென்ட் இல் சிறந்து விளங்கிய இவருக்கு மொபைல் மற்றும் அதில் செயல்படும் பணப்பரிமாற்றம் அதன் சேவைகள் பற்றிய புரிதல் இருந்தது. அதனால் மொபிக்விக் என்ற பணபரிமாற்ற செயலியை தனது நண்பருடன் இணைந்து தொடங்கி தற்போது பிரபல தொழிலதிபராக வலம் வருகிறார்.

sneha choudhry

சினேகா சவுத்திரி: கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு , தரம் மற்றும் அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு தங்குவதற்காக விடுதிகளை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்து தனது நண்பர்களுடன் சோலோ என்ற நிறுவனத்தை தொடங்கினர். 9 வருடங்களிலேயே அவர் இதில் சாதித்தும் காட்டியுள்ளார்.




divya gokulnath

திவ்யா கோகுல்நாத்: பல பெற்றோர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இவரது கம்பெனி உதவியாக இருந்துள்ளது. அப்படி என்ன என்று பார்த்தால் டியூஷன் செல்ல முடியாத குழந்தைகள், இன்னும் அதிகமாக கற்று கொள்ள நினைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு உதவும் வகையில் பைஜூஸ் என்ற ஆன்லைன் கல்வியை கொண்டு வந்தார். அவரது இந்த கம்பெனியை உலக தரத்திற்கு உயர்த்தினார்.

richa kar

ரிச்சா கர்: பெண்களில் பலருக்கும் இவர் அல்லது இவரது கம்பெனியை தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. பெண்களின் உள்ளாடைகள் மற்றும் நைட் டிரஸ் போன்ற பெண்களுக்கு தேவையான உடைகளை நல்ல தரத்தில் குறைந்த விலையில் கொடுக்கும் ஜிவாமி என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஆன்லைனில் தொடங்கிய நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கடைகளாகவும் விரிவு படுத்தியுள்ளார்.

vanthana luthra

வந்தன லூத்ரா: ஒரு பியூட்டி ப்ரொடக்ட் ஆக தொடங்கிய VLCC நிறுவனத்தை தற்போது உடல் எடை, தலை முடி என பல வழிகளில் பெரிது படுத்தியுள்ளார். இவர் 1980ல் தனது நிறுவனத்தை டெல்லியில் தொடங்கி சவுத் ஆசியா, தென் ஆப்பிரிக்கா என பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.




swati bhargava

ஸ்வாதி பார்கவா: இவர் கேஸ்கரோ என்ற கம்பெனியை 2013ல் தொடங்கி உள்ளார். மக்கள் தங்கள் வாங்கும் பொருட்கள், செலவு செய்யும் ஹோட்டல் அல்லது ட்ராவல் என எதை எடுத்தாலும் அதில் ஆஃபர் இருக்காதா என எதிர்பார்த்ததை இவர் ஒரு செயலி மூலம் மக்களுக்கும் கொடுத்துள்ளார். அவரும் முன்னணி தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

ராதிகா அகர்வால்: ஷாப்குளூஸ் என்ற ஆன்லைன் வர்த்தகத்தை 2011ல் தொடங்கினார். இதன் மூலம் மக்கள் இருந்த இடத்திலே பொருட்களை வாங்க உதவியாக இருந்தது. அதன் பிறகு 2021ல் கைன்ட்லைப் என்ற செயலியை தொடங்கி ஆர்கானிக் பியூட்டி பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!