health benefits lifestyles

போலியான முந்திரி பருப்புகளை எப்படி கண்டறிவது..?

நம் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற நட்ஸ் வகைகளில் நாம் பெரிதும் விரும்பக் கூடியது முந்திரிப் பருப்புகள் ஆகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பருப்புகளை பலர் ஸ்நாக்ஸ் போல நேரடியாகவே சாப்பிடுகின்றனர். இன்னும் சிலர், இனிப்புகள், இதர சமையல்களில் முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்கின்றனர்.




Cashew Benefits,முந்திரி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் என்னென்ன... எவ்வளவு சாப்பிடலாம் - benefits and side effets of eating more cashew nuts - Samayam ...

அதிலும் இப்போதெல்லாம் சாலையோரங்களில் முந்திரி கொட்டைகளை சுட்டு, ஓடுகளை நீக்கி பருப்புகளை உடனுக்குடன் விற்பனை செய்யும் கடைகள் எண்ணற்ற அளவில் இருக்கின்றன. வாகனங்களில் செல்லும்போது ஓரிரு விநாடி நின்று நாம் அதை வாங்கிச் சென்று விடுகிறோம். இதுபோன்ற சந்தர்பங்களில் நம் கண்ணை மறைத்து, மோசமான தரம் கொண்ட அல்லது போலியான முந்திரி பருப்புகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக தரமான முந்திரி பருப்புகளை வாங்குவது எப்படி, போலிகளை கண்டறிவது எப்படி என்ற வேறுபாடுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.




நிறத்தை கவனியுங்கள் : முந்திரி பருப்புகளை வாங்கும்போது அதன் நிறம் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். முந்திரியின் நிறம் கொஞ்சம் மஞ்சளாக இருந்தால் அது போலியாகும். அதுவே வெள்ளை நிறமாக இருந்தால் அது ஒரிஜினல் என்று நம்பலாம். முந்திரியின் மீது கரும்புள்ளிகள், துளைகள் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். சில சமயம் கெட்டுப் போன பருப்புகளை விற்பனை செய்ய பார்ப்பார்கள்.

விலை உயர்ந்தது : தரமான முந்திரி எப்போதுமே விலை உயர்வாக இருக்கும். அது அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. ஆனால், மோசமான தரம் கொண்ட முந்திரியில் புழுக்கள், பூச்சிகள் போன்றவை இருக்கலாம்.

அளவு : முந்திரி பருப்புகளை அதன் அளவைக் கொண்டு தரம் பிரித்து விடலாம். பொதுவாக நல்லதொரு முந்திரி பருப்பு ஒரு இன்ச் நீளம் கொண்டதாக இருக்கும். அதைவிட நீளமாக அல்லது குறைவாக இருந்தால் அது போலியாக இருக்கலாம்.




முந்திரியின் மனம் : முந்திரி நல்ல வாசம் மிகுந்தது. அதே சமயம், நாம் நுகரும்போது ஆசையை தூண்டுவதாக அமையும். அதுவே தரமற்ற முந்திரி பருப்புகளை நுகர்ந்து பார்த்தால் மோசமான வாசம் தென்படலாம்.

சுவை வேறுபாடு: முந்திரி பருப்புகளை சாப்பிடும்போது அது நம் வாயில் ஒட்டாது. அதுவே போலியான பருப்புகளை சாப்பிடும்போது அது நம் வாயில் பற்களில் ஒட்டிக் கொள்ளும்.

முந்திரியின் சத்துக்கள் : தரமான முந்திரி பருப்புகளை வாங்கிச் சாப்பிடும்போது அதன் முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க இது உதவும். அதன் எதிரொலியாக இதய நோய் மற்றும் ஸ்டிரோக் போன்ற அபாயங்கள் குறையும். முந்திரி சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!