Entertainment health benefits lifestyles

பெண்களே 40 வயதை தொட்டுட்டீங்களா..? கொலஸ்ட்ரால் விஷயத்தில் கவனம்

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பாலின பாகுபாடு இன்றி பெரும்பாலான மக்களுக்கு உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.. குறிப்பாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது என்பது அனைவருக்கும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களில் பலரும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். அது ஏன் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?




சமீபத்திய ஆய்வின்படி ஆண்களை விட பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அவர்களுக்கு அதிகளவு எச்டிஎல் (HDL) கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் ரிசர்ச் இன் அறிக்கையின் படி பெண்களின் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது அவர்களின் மாதவிடாய் சுழற்சியை பொறுத்து மாறுபடலாம். ஏனெனில் அந்த காலங்களில் அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜெனின்ன் அளவில் மாறுபாடு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் பெண்கள் தங்களுடைய மெனோபாஸ் காலகட்டத்தை அடைந்ததும் அவர்களின் உடலில் எல்டிஎல்(LDL) கொலஸ்ட்ராலின் அளவானது அதிகரித்து ஹெச்டிஎல் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயமானது அவர்களுக்கு அதிகரிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹெச்டிஎல்(HDL) கொலஸ்ட்ரால் ஆனது உடலுக்கு நன்மை செய்யும் கொலஸ்ட்ரால் ஆகும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் (LDL) என்பது உடலுக்கு தீமை செய்யும் கொலஸ்ட்ரால் ஆகும். இதில் 40 வயதை நெருங்கும் மதிம வயது பெண்களுக்கு அவர்களது உடலில் கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் தான் அவர்களுக்கு பல்வேறு வித பிரச்சனைகள் உண்டாகின்றன.




40 வயதை நெருங்கிய பெண்களுக்கு உடலில் கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள்:

இன்றைய காலத்தில் ஆண் பெண் என பாகுபாடு இன்றி அனைவருமே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதில் பெரிய தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக கொழுப்புச்சத்து நிறைந்த இறைச்சி, பால் பொருட்கள், துரித உணவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, எண்ணெயில் பொறித்த நொறுக்கு தீனிகள் ஆகியவை உடலுக்கு தீங்கு செய்யும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.

போதுமான அளவு உடல் இயக்கம் இல்லாமை: இன்றைய கால மத்திம வயது பெண்கள் பலரும் மிகவும் குறைவான அளவில் உடல் இயக்கத்தை மேற்கொள்கின்றனர். உடல் இயக்கத்தை அதிகரிக்கும் வகையிலான வேலைகளில் அவர்கள் ஈடுபடும் போது, உடலுக்கு கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் அளவை குறித்து நன்மை செய்யும் கொலஸ்ட்ராலின் அளவானது அதிகரிக்கிறது.

அதிக உடல் எடை: அதிக அளவு உடல் எடை அல்லது உடல் பருமன் ஆனது உடலில் தேங்கும் அதிக அளவில் கொழுப்பு சத்துடன் நேரடியாக தொடர்புடையது ஆகும். அதிக அளவு உடல் எடையானது கொலஸ்ட்ரால் வளர்ச்சிதை மாற்றத்தில் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி உடலுக்கு கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க வழி செய்கிறது.

பரம்பரை காரணங்கள்: மரபணுக்கள் இந்த கொலஸ்ட்ரால் அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. அது கொலஸ்ட்ராலாக இருந்தாலும் சரி அல்லது இதய சம்பந்தப்பட்ட நோய்களாக இருந்தாலும் சரி. அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் இதுபோன்று வியாதி இருந்தால் அது அவர்களது சந்ததிகளையும் பாதிக்கும் வாய்ப்பானது அதிகமாகும் என்பது குறிப்பிடதக்கது.




ஹார்மோன் மாற்றங்கள்: பெரிமெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் காலகட்டங்களில் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் உடலில் தேங்கும் கொலஸ்ட்ரால் அளவை பெருமளவில் பாதிக்கிறது. பெண்களின் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜென் உடலுக்கு நன்மை தரும் ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை சீரான அளவில் வைக்க உதவுகிறது. ஆனால் அவர்களின் மெனோபாஸ் காலகட்டங்களின் போது ஹெச்டிஎல் அளவு குறைந்து எல்டிஎல் எனப்படும் கெடுதல் செய்யும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது.

உடலுக்கு கெடுதல் செய்யும் கொலஸ்ட்ரால் ஏற்படாமல் தற்காத்து கொள்வது எப்படி?

10 Foods every Women Needs – Foodwise

ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடு: பச்சை காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், புரதச்சத்து வாய்ந்த உணவுகள், உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்பு சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

தினசரி உடற்பயிற்சி: உடலில் கெடுதல் செய்யும் கொழுப்புகள் சேர்வதை தவிர்ப்பதற்கு பெண்கள் ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது அவசியமானதாகும். தினசரி வாக்கிங், ஜாகிங் செய்வது அல்லது நீச்சல் பயிற்சியை மேற்கொள்வது அல்லது சைக்கிளிங் செய்வது ஆகியவை அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி மேற்கொள்வது தசைகளை வலுவாக்குவதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவும்.

 




சீரான உடல் எடை: மத்திய பெண்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று உடல் எடையை சீரான அளவில் பராமரித்து வருவது. இதற்கு சரியான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பதுடன் தினசரி உடல் இயக்கத்தை அதிகரித்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது கெடுதல் செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.

மகளிர் உடற்பயிற்சி மையங்கள்- பெண்களுக்கு சொந்தமான வணிகங்களின் புதிய சகாப்தம்

சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனை: சீரான இடைவெளியில் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். இது அவ்வப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய உதவுவதோடு இதயத்தின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும் உதவுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இந்த அறிவுரைகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். எனவே தகுதியான மருத்துவரை ஆலோசித்து அவரின் அறிவுரை படி உங்களுக்கு ஏற்ற வழிமுறையை பின்பற்றுவது சிறந்ததாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!