Cinema Entertainment

நடிகை பானுமதி -11

சினிமா என்று எடுத்துக்கொண்டாலே அதில் பல்வேறு துறைகள் இருக்கும். சிலர் நடிப்பார்கள், சிலர் இயக்கவேண்டும் என்று ஆசை கொள்வார்கள், சிலருக்கு இசை மீது ஆர்வம் இருக்கும். வெகு சிலரே பன்முக தன்மை கொண்டவர்களாக, ஆங்கிலத்தில் நாம் சொல்வது போல Jack of All Tradesஆக இருப்பார்கள்.

இவர்களின் பெயர்கள் காலம் கடந்து நம்மிடம் நிலைத்திருக்கும்.

உதாரணத்திற்கு, தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால், டி ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் டி ராஜேந்தரை சொல்லலாம். இவரது படங்களில் இவர் தான் கதை, திரைக்கதை, வசனம், இசை, எழுத்து இயக்கம் எல்லாம்!




NAKARAJAN: தெலுங்கு நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சரித்திரம்- -பிறப்பு 1925 செப்டம்பர் 7

இப்படியாக பட்டியலில் ஒரு பெண்ணின் பெயரும் இருக்கிறது. அதுவும், எம் ஜி ஆர் சிவாஜி என நடிப்பின் திலகங்கள் கொடிகட்டி பறந்த காலத்தில், திரைத்துறையின் ஒரு தவிர்க்க முடியா பெயராக இருந்தார் இந்த அம்மணி.

பழைய பிளாக் அண்ட் வைட் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் தெரியும்,  பானுமதி என்ற ஒரு நடிகை இருந்தார் என்று. இவர் நடித்த படங்களில் சொந்தக் குரலில், பேசுவது மட்டுமல்லாது, பாடவும் செய்திருக்கிறார். சிவாஜி, எம் ஜி ஆர், என் டி ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ் என, டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக, வில்லியாக நடித்தவர் பானுமதி.

“அழகான பொண்ணு நா அதுக்கேத்த கண்ணு தா”, மாசில்லா உண்மை காதலி பாடல்களை பாடாதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

1925ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் என்ற இடத்தில் பிறந்தவர் நடிகை பானுமதி. பெற்றோருக்கு முயன்றாவது குழந்தை.

பானுமதியின் பெற்றோர் இசைக்க கலைஞர்கள் என்பதால், சிறுவயது முதலே இவருக்கு சங்கீத ஞானம் கிடைத்தது. 1939ல் பானுமதிக்கு முதன் முதலாக நதிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. வர விக்ரயம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார் பானுமதி. மாலதி மாதவம், தர்ம பத்தினி போன்ற படங்களில் நடித்து வந்தார்.




அதன் பிறகு, ஸ்வர்கஸீமா என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு பானுமதிக்கு கிடைத்தது. இதில் மேடை நாடக கலைஞராக, மிகவும் சுயநலமான, கெட்ட சிந்தனைகள் கொண்ட பெண்ணாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார் பானுமதி.

இது அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது எனலாம். படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. மல்லிஸ்வரி, விப்ரநாராயணா ஆகிய படங்களில் நடித்தார். தமிழில், நடிகர் பி யு சின்னப்பாவுடன் ரத்னகுமார் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் பானுமதி.

தெலுங்கில், சந்திரனி என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இவரே தெலுங்கு சினிமாவின் முதல் பெண் இயக்குநர் .

நடிகையர் திலகம் சாவித்திரி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிகண்ட மிசியம்மா படத்தில் முதலில் பானுமதி தான் நடித்திருந்தார். ஆனால், அல்லூரி சக்ரபாணியுடன் ஏற்பட்ட சங்கடத்தின் காரணமாக படத்தில் இருந்து விலகினார் பானுமதி. அதன் பிறகு சக்ரபாணி என்ற படத்தை தயாரித்தார். இது அல்லூரி சக்ரபாணியை சஷ்டி எடுக்கப்பட்ட படமாகும்.

நடிப்பு, பாடல் மட்டும் அல்லாமல் இயக்குனர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தார் பானுமதி. இதனால் இவரை திரையுலகம் அஷ்டாவதானி என்றே அழைத்தது.




தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரை இவருக்கு, ‘நடிப்பின் இலக்கணம்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.

எம் ஜி ஆரும் , சிவாஜியும் என் டி ஆரும் இவர் படத்தில் நடிக்கின்றனர் என்றாலே அலறுவார்களாம். எந்த இடத்திலும் தவறு செய்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து நடிப்பார்களாம்.

பெண் நடிகைகளுக்கும் சம உரிமை, மரியாதை தரவேண்டும் என்ற புரட்சியை சினிமா துறையில் செய்தவரே இவர் தான்

சரியாக நடிக்கவில்லை என்றால், தொடர்ந்து படத்தில் எதோ குறை இருப்பதாக தோன்றினால், முகத்துக்கு நேர எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி சென்றுவிடுவாராம்!

எம் ஜி ஆர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழக அரசின் இசைக்கல்லூரியின் முதல்வராக பானுமதியை நியமித்தார்.

தகவல்களின் அடிப்படையில், பானுமதி ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக ரூ.25,000 பெற்றாராம். இன்றைய தேதியில் அதன் மதிப்பு 2 கோடியை தொடும்.

இவர் தான் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை!

தனது வாழ்நாளில் மொத்தம் 97 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்திருக்கிறார் பானுமதி. திரைத்துறையில் இவரது பங்களிப்புக்காக 2001ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் பானுமதி.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!