health benefits lifestyles

தொடை பெரிதாக இருக்கிறதா? இதுதான் காரணம்!

 சிலரின் தொடைகள் மிகவும் பெரிதாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இதனால் தங்களின் விருப்பப்படி அவர்களால் ஆடைகளை கூட அணிய முடியாது. தொடைகள் மிகவும் தடிமனாக இருப்பதால், உடலின் வடிவம் ஒழுங்கற்றதாக தோன்றுகிறது. சில தீய பழக்கங்கள் இருப்பதால் உடல் எடை அதிகரித்து அதன் முதல் விளைவு தொடைகளில் ஏற்படுகிறது.

21 Running Shorts For Thick Thighs That Won't Chafe - Starting at $16 – topsfordays




தடிமனான தொடைகள் காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்பட்டு, நடக்கும்போது தொடைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். தொடைகள் உரசி இதனால் ஏற்படும் பாதிப்பால் சிரமப்படுபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

இவர்களால் சற்று தூரம் கூட நடக்கமுடியாது. தொடையின் கொழுப்பு அதிகரிக்க காரணம் என்று பலரும் அறிவதில்லை. இதற்கான முக்கிய பழக்கங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தொடை அளவு பெரிதாக இருக்க காரணம்




தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வது

நீங்கள் அலுவலகப் பணியாளராக இருந்தால் பல மணிநேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டிய சூழல் வரும். இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான வேலைகள் இப்படி தான் இருக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும் நபராக நீங்கள் இருந்தால் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இந்த பழக்கத்தால், உங்கள் உடலின் கீழ் பகுதியில் கூடுதல் கொழுப்பு சேரலாம். தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்வதால், தொடைகளின் அளவு அதிகரித்து, உங்கள் உடலின் கீழ் பகுதி உடலின் மேல் பகுதியை விட கனமாக தோன்றும். வேலைக்கு இடையில் ஓய்வு எடுத்துக்கொண்டு சிறிது நேரம் வெளியில் நடந்து செல்லுங்கள்.

அதிகம் நடக்காத பழக்கம்

உங்கள் தினசரி படிகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், உங்கள் கால்களில் அதிகப்படியான கொழுப்பு சேரலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 ஆயிரம் படிகள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

உங்கள் படி எண்ணிக்கை குறைவாக இருந்தால், இரத்த ஓட்டம் குறைந்து, கால்கள் மற்றும் தொடைகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.




மோசமான நிலையில் அமரும் பழக்கம்

மோசமான தோரணையுடன் உட்காரும் பழக்கம் தொடைகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். மோசமான தோரணை முதுகுவலியை ஏற்படுத்துகிறது மற்றும் உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கிறது. மோசமான தோரணையின் காரணமாக, உட்புற மற்றும் வெளிப்புற தொடை பகுதியில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது.

நீங்கள் நீண்ட நேரம் மோசமான தோரணையில் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான வலியை உணருவீர்கள், மேலும் உங்கள் இலக்கை அடைவதில் சிரமம் ஏற்படும்.

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாத பழக்கம்

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாததால், எடை வேகமாக அதிகரிக்கிறது. நல்ல அளவு புரதம் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். தேவைக்கு அதிகமாக கலோரிகளை உட்கொண்டால், உங்கள் எடை வேகமாக அதிகரித்து, தொடை பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.




தொடை கொழுப்பு குறைய என்ன செய்ய வேண்டும்?

  1. தொடையின் கொழுப்பை குறைக்க, தினமும் குறைந்தது 3 முதல் 4 கிலோமீட்டர் வரை நடக்க வேண்டும்.

  2. நீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும், தேநீர் மற்றும் காபி போன்ற இனிப்பு பானங்களை உட்கொள்ள வேண்டாம்.

  3. வாரத்திற்கு குறைந்தது 3 முறை கார்டியோ உடற்பயிற்சி செய்யுங்கள்.

  4. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், வலிமை பயிற்சி செய்யுங்கள்.

  5. கலோரி உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிக்கவும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!