health benefits lifestyles News

திகில் படங்களை பார்த்தால் 113 கலோரிகள் வரை குறைக்கலாமா..? ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

திகிலான படங்களை பார்க்கும் தருணங்களில் உங்கள் உடலும், மனமும் எத்தகைய நிலைகளில் இருந்தன என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தியேட்டர் என்றாலும், வீட்டில் அமர்ந்து பார்ப்பது என்றாலும், சீட்டின் நுனிப் பகுதியில் அமர்ந்து கொண்டு, அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்விக்கு விடை தேடியபடி பார்த்திருப்பீர்கள்.

அதிலும், திடீரென்று அலறல் சத்தம் கேட்கும் தருணங்களில் நமக்கு தூக்கி வாரிப்போடும். ஏசி அறைகளில் அமர்ந்திருந்தாலும் கூட வியர்த்துக் கொட்டும். இவ்வாறு திகிலூட்டும் படம் ஒன்றை சுமார் 90 நிமிடங்களுக்கு பார்த்தீர்கள் என்றால் நம் உடலில் 113 கலோரிகள் எரிக்கப்படும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?




என்னது! படம் பார்த்தால் கலோரிகள் குறையுமா, இதைக் குறைப்பதற்காகத்தானே எல்லோரும் மிகுந்த சிரத்தையுடன் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அதற்குப் பதிலாக திகிலூட்டும் படம் பார்த்தால் போதுமா என்ற கேள்வி எழக் கூடும்.

ஆனால், இது தொடர்பாக ரிச்சர்டு மெக்கன்ஸி என்ற ஆய்வாளர் கூறுகையில், “திகிலான 10 படங்களை பார்க்க வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினோம். ஒவ்வொரு படத்தின்போதும் பார்வையாளர்களின் இதயத் துடிப்பு மிக அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

எப்படி கலோரி குறைகிறது.?

பீதியை கிளப்பும் காட்சி திரையில் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நாம் அச்சத்தில் உறைந்து போயிருப்போம். அந்த சமயத்தில் மிகுதியான ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு, அதன் எதிரொலியாக அட்ரினல் சுரப்பி வேலை செய்யத் தொடங்குமாம்.

இதற்கு அடுத்தகட்டமாக நம் இதயத்துடிப்பு வேகம் அடையத் தொடங்கும் மற்றும் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அட்ரினலைன் ஹார்மோன் மிகுதியாக சுரப்பதனால் பசி கட்டுப்படுத்தப்படும். அதே சமயம், மெடபாலிக் விகிதம் அதிகரித்து நம் கலோரிகள் எரிக்கப்படும்.




எல்லா நேரமும் ஒன்றல்ல..

திகிலூட்டும் படம் என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு படத்தை பார்ப்பதனால் இந்த அளவுக்கு கலோரிகள் குறைந்து விடாது. உண்மையாகவே நம் மனதில் பதற்றத்தை தூண்டக் கூடிய படம் ஒன்றை பார்க்கும்போதுதான் இவ்வாறு கலோரிகள் குறையுமாம்.

ஸ்டீபன் கிங் என்ற ஹாலிவுட் இயக்குநர் எடுத்த தி ஷைனிங் என்ற படத்தை பார்த்தவர்களுக்கு அதிகபட்சமாக 184 கலோரிகள் வரை குறைந்ததாம். அதேபோல கிளாசிக் ஜாவ்ஸ் என்ற படம் பார்த்தவர்களுக்கு 161 கலோரிகளும், தி எக்ஸோர்சிஸ்ட் என்ற படம் பார்த்தவர்களுக்கு 158 கலோரிகளும் குறைந்தன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்நாக்ஸ் கூடாது…

திகிலான படங்களை பார்க்கிறேன் என்ற பெயரில், படத்தின் இடையே ஸ்நாக்ஸ்களை கொரித்துக் கொண்டே இருந்தால் கலோரி குறைப்பு என்பது சாத்தியமில்லை. எதையும் சாப்பிடாமல் படம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இதுபோன்று கலோரிகள் குறையுமாம்!




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!