health benefits lifestyles

சிட்ரஸ் பழங்களை இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடவே கூடாது.. பல பிரச்சனைகள் ஏற்படும்.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழங்களை தினசரி நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் இந்த குளிர்காலத்தில் ஆர்ஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்களை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது முதல் சரும ஆரோக்கியம், முடி வளர்ச்சி என பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.




மேலும் இந்த சிட்ரஸ் பழங்களில் சிட்ரிக் அமிலம் என்ற அமிலம் உள்ளது. இவற்றில் இயற்கையாகவே அமிலத்தன்மை உள்ளதால், அவற்றை உட்கொள்ள சிறந்த நேரத்தை நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மதியம் உணவு சாப்பிட்ட பிறகோ அல்லது இரவு உணவுக்கு பிறகு இந்த சிட்ரஸ் பழங்களை சாப்பிடவே கூடாது. இது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுப்பதுடன், உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சிட்ரஸ் பழங்களை உணவுக்குப் பிறகு உட்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே உள்ள அமிலங்கள், உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே நீங்கள் முழுமையாக சாப்பிட்ட பிறகு இந்த பழங்களை சாப்பிடுவதால், அது செரிமானத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, அஜீரணம், அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.




உணவு சாப்பிட்ட பிறகு நீங்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை உங்கள் உடல் தடுக்கலாம். இது முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போகலாம். .

article_image5

மேலும் சிட்ரஸ் பழங்களில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை சீர்குலைக்கும். அவை ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்றிகள், ஆனால் அவை சரியான நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே உங்களுக்கு பயனளிக்கும்.

சிட்ரஸ் பழங்களை, சாப்பிட்ட உடனேயே சாப்பிட்டால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனையாய் ஏற்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவில் திடீர் அதிகரிப்பு அல்லது குறைவை ஏற்படுத்தலாம். எனவே இது நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.




article_image7

அதிகப்படியான சிட்ரஸ் உணவுகளை உட்கொள்வது நல்ல யோசனையல்ல, ஏனெனில் அவற்றில் கலோரிகள் உள்ளன. இந்த பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அலல்து உணவுக்கு பிறகு சாப்பிட்டாலோ உடல் எடை கூடும்.

உணவு உண்ட உடனேயே சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது செரிமான பிரச்சனை உள்ள சிலருக்கு இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும். வாயு, வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். எனவே உங்கள் வயிறு பாதி காலியாக இருக்கும்போது மட்டுமே சிட்ரஸ் பழங்களை உண்ண வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!